search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Basavaraj Bommai"

    • நமது நாட்டுக்கு என்று ஒரு சட்டம் உள்ளது.
    • ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அவசியமற்றது.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒரு சமூகத்திற்கு எதிராக பேசி இருந்தார். இது சமூக மக்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்திருந்தது. அதனால் ராகுல்காந்தியின் பேச்சுக்கு எதிராக அந்த சமூக மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் நமக்கு ஒரு சட்டம், ராகுல்காந்திக்கு என்று தனிச்சட்டம் எதுவும் இல்லை. அனைத்து தரப்பினருக்கும் சட்டம் ஒன்று தான். கோர்ட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த காரணத்தால், ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தை எதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பெரிது படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

    நமது நாட்டுக்கு என்று ஒரு சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின்படி அனைவரும் நடந்து கொள்வது கடமையாகும். நாம் என்ன பேசினாலும், யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மனோபாவம் இருக்கிறது. இது பலர் மத்தியில் உள்ளது. அதனால் என்னவோ, ராகுல்காந்தி இப்படி பேசி இருக்கலாம். ராகுல்காந்தி தனது பேச்சை சரி செய்து கொள்ள காலஅவகாசம் இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.

    அதனை விட்டுவிட்டு சாலையில் இறங்கி போராடுவது தேவையற்றது. தேவையில்லாமல் பேசுவதும் சரியானது இல்லை. ஒருவரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அவசியமற்றது. சட்ட விதிமுறைகளின் படியே ராகுல்காந்தியிடம் இருந்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

    பெங்களூரு :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி கர்நாடகத்தில் ஒற்றுமை பாதயாத்திரை நடத்தினார். அதனால் எந்த தாக்கமும் இங்கு ஏற்படவில்லை. அதேபோல் தற்போது ராகுல் காந்தி பெலகாவிக்கு வந்து சென்றுள்ளார். அதனால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர் வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவதாக கூறி இருக்கிறார். இந்த போலி வாக்குறுதிகளால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    லண்டனில் அவர் நமது நாட்டுக்கு எதிராக பேசியுள்ளார். இது தேச விரோத செயல். இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. அதனால் ராகுல் காந்தியின் பேச்சை மக்கள் மதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி கர்நாடகத்திற்கு வருகிறார். உள்துறை மந்திரி அமித்ஷா, 24, 26-ந் தேதிகளில் கர்நாடகம் வருகிறார்.

    காங்கிரஸ் கட்சியினர் வாக்குறுதி உத்தரவாத அட்டையை வழங்குகிறார். இது போலி அட்டை. பிற மாநிலங்களில் காங்கிரசார் இவ்வாறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. அதாவது ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு மக்களை காங்கிரசார் ஏமாற்றுகிறார்கள்.

    ஊழல் தொடர்பாக சித்தராமையா மீது லோக்அயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவது சரியா?. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்து வருகிறது. சித்தராமையா ஆட்சியில் நடைபெற்ற 59 ஊழல்கள் குறித்து நீதி விசாரணை நடத்துவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த சில நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்.

    உரிகவுடா, நஞ்சேகவுடா குறித்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவந்தால் அதன் மூலம் வெற்றி கிடைக்கும். உண்மை தகவல்களை பெற அதுகுறித்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. பல்வேறு வரலாற்று தகவல்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. வரலாற்றை இந்தியாமற்றும் கர்நாடகத்தில் திரித்துள்ளனர். வரலாற்றை திரித்தவர்கள் யார் என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையை சொன்னால் அவர்களால் சகித்து கொள்ள முடிவது இல்லை.

    எங்கள் கட்சியில் இருந்த பாபுராவ் சின்சனசூர் எம்.எல்.சி., காங்கிரசில் சேர்ந்துள்ளார். குருமித்கல் தொகுதியில் பா.ஜனதா பலமாக உள்ளது. அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெறும். அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் வாபஸ் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • அந்த குழு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழு திட்டம் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    அதுகுறித்து அவர் நேற்று பெங்களூருவில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அரசின் முதன்மை செயலாளர்கள், செயலாளர்கள், அனைத்து மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

    கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்றன. அதே போல் இளைஞர்களுக்காக சுவாமி விவேகானந்தா இளைஞர் சக்தி ஆண்கள் சுயஉதவி குழுக்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படும். இந்த குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த குழுக்கள் தொழில் செய்ய வங்கிகளில் கடன் பெற்று கொடுக்க வேண்டும். அவர்கள் தொழில் செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

    அந்த குழு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் வெற்றி பெறும். அந்த குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் அளிக்க அரசு உத்தரவாதம் அளிக்கிறது. அவர்களின் தொழில் அதிக வருவாய் ஈட்டும் நிலை இருந்தால் அத்தகைய குழுக்களுக்கு கூடுதல் கடன் கிடைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆண் சுயஉதவி குழுக்கள் திட்டம் வருகிற 23-ந் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்ய வேண்டும்.

    மாநிலத்தில் இதுவரை 6 ஆயிரத்து 509 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 5 ஆயிரத்து 393 குழுக்கள் அமைக்க வேண்டியுள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்திற்கு தலா 2 குழுக்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா, அத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஷாலினி ரஜினீஸ், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என். பிரசாத், திறன் மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் சொல்கிறது.
    • காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது.

    துமகூரு :

    துமகூரு சிக்கநாயக்கனஹள்ளியில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது-

    கர்நாடகத்தில் பெங்களூருவுக்கு அடுத்த முக்கிய நகரமாக துமகூரு திகழ்கிறது. கர்நாடகத்தின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் நகரம் துமகூரு. எத்தினஒலே குடிநீர் திட்டத்தின் முதல்கட்ட நீர் வருகிற ஜூன் மாதத்திற்கு துமகூருவுக்கு கிடைக்கும். கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளோம். நடுத்தர மக்கள் மாதம் 70 முதல் 80 யூனிட் மின்சாரத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

    ஆனால் மாதம் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் சொல்கிறது. காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது. வாக்குறுதி உத்தரவாத அட்டையை காங்கிரசார் வழங்குகிறார்கள். இதற்கு எந்த மதிப்பும் கிடையாது. மக்களிடம் காங்கிரசை அறிமுகம் செய்து கொள்வதற்காக இந்த உத்தரவாத அட்டையை வழங்குகிறார்கள்.

    அந்த அட்டையை பெண்கள் வாங்கி குப்பை தொட்டியில் போட்டுள்ளனர். அந்த அட்டையை பெற்று ஊறுகாய் கூட போட முடியாது. வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசை குப்பை தொட்டியில் வீச வேண்டும். மீண்டும் ஒரு முறை பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
    • விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    பெலகாவி:

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூத் மட்டத்திலும் இத்தகைய யாத்திரைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளோம். எங்கள் கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்கள். போட்டி போட்டு செயல்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிட யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

    பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஒவ்வொருவராக கர்நாடகத்திற்கு வந்து செல்கிறார்கள். அசாம், மத்திய பிரதேச முதல்-மந்திரிகள் வந்துவிட்டு சென்றுள்ளனர். மத்திய மந்திரிகள் வந்து விஜய சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டுவிட்டு செல்கிறார்கள். இலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றாது. உத்தரவாத அட்டை வழங்கினாலும் அதை செயல்படுத்த மாட்டார்கள்.

    பெலகாவியில் சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்க எம்.இ.எஸ். அமைப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்வார்கள். வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்கள் மீண்டும் எங்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்த தயாராக உள்ளனர். நாங்கள் நடத்தும் விஜய சங்கல்ப யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நிருபர்களைச் சந்தித்தார்.
    • கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

    இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி மிகப் பெரிய தலைவர். அவர் இந்தியாவை உயர்ந்த நிலையில் நிறுத்தியுள்ளார். சர்வதேச எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழை மக்களுக்கு மோடி உதவினார்.

    நானும், மந்திரி சோமண்ணாவும் பழைய நண்பர்கள். நாங்கள் உப்பள்ளியில் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசினோம். இந்த சந்திப்பின்போது அரசியல் குறித்து விவாதிக்கவில்லை. சோமண்ணா எங்கள் கட்சியை விட்டு விலக மாட்டார். கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது என குறிப்பிட்டார்.

    • இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘காந்தாரா’.
    • இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    காந்தாரா

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டியை கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்துள்ளார்.


    ரிஷப் ஷெட்டி - பசவராஜ் பொம்மை

    இது தொடர்பாக பசவராஜ் பொம்மை தனது சமூக வலைதளத்தில், "கன்னடத்தின் பெருமைக்குரிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்தின் மூலம் நமது மண்ணின் கலாச்சாரத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர், வனவாசிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை நம் முன் வைத்தவர். இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் விரைவில் தீர்க்க அரசு ஆர்வமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.


    • பா.ஜனதா அரசுக்கு எதிரான காங்கிரசாரின் விளையாட்டு எடுபடாது.
    • தேசிய தலைவர்களின் பெயர்களில் அரசியல் செய்வது சரியல்ல.

    தார்வார் :

    முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து 9-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் ஒன்றோ, இரண்டோ அல்ல. அக்கட்சி, ஊழல்களின் களஞ்சியம். ஊழல்கள் நிறைந்த கூடு தான் காங்கிரஸ். அந்த கட்சிக்கு முடிவு கட்டும் காலம் வந்துள்ளது. காங்கிரஸ் தலைவா்கள் போராட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் நடத்தும் முழு அடைப்புக்கோ அல்லது போராட்டத்திற்கோ மக்களின் ஆதரவு கிடைக்காது. தூய்மையானவர்கள் ஊழல் புகார்களை கூறினால் அதற்கு ஒரு மதிப்பு இருக்கும். ஆனால் தலையணை முதல் படுக்கை, காபி, பிஸ்கட் போன்றவற்றிலும் காங்கிரசார் ஊழல் செய்துள்ளனர். சித்தராமையா ஆட்சியில் ஊழல் மூலம் பணம் ஈட்ட மந்திரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனால் ஊழல்களால் நிறைந்த கட்சி தான் காங்கிரஸ். அதனால் பா.ஜனதா அரசுக்கு எதிரான காங்கிரசாரின் விளையாட்டு எடுபடாது. தேர்தலின்போது மக்கள் உரிய முடிவு எடுப்பார்கள்.

    பெலகாவியில் சத்ரபதி சிவாஜி சிலையை காங்கிரசார் திறந்து வைத்துள்ளனர். அந்த சிலைக்காக எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தேசிய தலைவர்களின் பெயர்களில் அரசியல் செய்வது சரியல்ல. மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், இது ஒரு சாதாரண குண்டுவெடிப்பு சம்பவம் என்று கூறினார். இப்போது அதற்கு அவர் என்ன பதில் கூறுவார்?.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

    • காங்கிரஸ் ஆட்சியில் 59 ஊழல் முறைகேடு வழக்குகள் இருந்தன.
    • சித்தராமையாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் மாடால் விருபாக்ஷப்பாவை முதல் குற்றவாளியாக லோக்அயுக்தா போலீசார் சேர்த்துள்ளனர். அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை கைது செய்ய கோரியும், முதல்-மந்திரி பதவி விலக கோரியும் நேற்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டை முற்றுகையிட சென்ற முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்பட நூற்றுக்கணக்கானாரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில், இதுகுறித்து சித்ரதுர்காவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சியில் 59 ஊழல் முறைகேடு வழக்குகள் இருந்தன. அந்த முறைகேடுகள் வெளியே வராமல் இருக்கத்தான் சித்தராமையா லோக் அயுக்தாவுக்கு மூடு விழா நடத்தி விட்டு, ஊழல் தடுப்பு படையை கொண்டு வந்திருந்தார். லோக் அயுக்தா இருந்திருந்தால், காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தும் வெளியே வந்திருக்கும். இப்படிப்பட்ட சித்தராமையாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் பா.ஜனதாவுக்கு இல்லை.

    சித்தராமையா ஆட்சியில் ஒரு மந்திரி ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி இருந்தார். மந்திரி லஞ்சம் வாங்கியதற்காக முதல்-மந்திரி பதவியை சித்தராமையா ராஜினாமா செய்திருந்தாரா?. அப்படி இருக்கையில் என்னை ராஜினாமா செய்ய சொல்வதற்கு சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் என்ன தகுதி இருக்கிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் அரசியல் காரணங்களுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ், இந்து அமைப்பினர் எத்தனை பேர் கொலை செய்யப்பட்டார்கள்.

    இந்த கொலைக்கு காரணமான பி.எப்.ஐ., எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் மீது பதிவாகி இருந்த வழக்குகள் காங்கிரஸ் ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்ற கீழ்மட்ட அரசியலை காங்கிரஸ் கட்சி மட்டுமே செய்கிறது.

    எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா லஞ்ச விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பா.ஜனதா மேலிட தலைவர்களுக்கு தெரிவித்துள்ளேன். அவர், பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா?, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வாரா? என்பது பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

    லோக் அயுக்தா அமைப்பு சுதந்திரமானது. இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகளை போலீசார் எடுப்பார்கள். எனவே நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
    • ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை இன்று 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    அப்போது, கர்நாடகாவின் ராமநகராவில் ராமர் கோவில் கட்டப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் கோயில்கள் மற்றும் மடங்கள் புனரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    கர்நாடாகவில் ஆளும் பா.ஜ.க. அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் காதில் பூவுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
    • வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை.

    பெங்களூரு :

    சிவமொக்காவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சிவமொக்கா மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (நேற்று) மட்டும் ரூ.1,000 கோடிக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பா பெயரை சூட்ட மந்திரிசபை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு ஒரு வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    ஷராவதி அணையில் நீரில் மூழ்கிய நிலங்களின் விவசாயிகளுக்கு மறுவாழ்வு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதுகுறித்து ஒரு அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். சிவமொக்கா-சிகாரிபுரா-ராணிபென்னூர் ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

    இதற்கு பிரதமர் மோடி சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். வளர்ச்சி பணிகள் என்பது தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடைமுறை. குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. சிவமொக்காவின் வளர்ச்சிக்கு இருபெரும் தலைவர்களான எடியூரப்பாவும், ஈசுவரப்பாவும் நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    • மகாத்மா காந்தியின் மூளையும், இதயமும் ஒன்றே.
    • தனது இதயம் என்ன சொன்னதோ அதன்படி அவர் செயல்பட்டார்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் 'காந்தி ஸ்மாரன்-காந்தி நமன்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நாம் மகாத்மா காந்தியை நினைவு கூறுவதே அவருக்கு நாம் அளிக்கும் மரியாதை ஆகும். மகாத்மா காந்தியின் மூளையும், இதயமும் ஒன்றே. தனது இதயம் என்ன சொன்னதோ அதன்படி அவர் செயல்பட்டார். இந்த விஷயங்கள் தான் காந்தியின் வாழ்க்கையாக இருந்தது. அஹிம்சையை பின்பற்றும்படி உறுதியாக கூறினார். இறுதி வரை அதையே அவர் பின்பற்றினார். காந்தி அனைத்தையும் சமமாக எடுத்து கொண்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    தனது செயல்கள் மூலம் இந்தியா மீது உலக நாடுகளுக்கு இருந்த தவறான எண்ணத்தை மாற்றியவர் காந்தி. அதுவரை நமது நாடு மீது வேறு ஒரு எண்ணம் அந்த நாடுகளுக்கு இருந்தது. அதன் பிறகு உலக நாடுகள் இந்தியாவுக்கு மரியாதை வழங்கின. சீர்திருத்தம், தவறுகள், தவறுகளை அதை சரி செய்து கொண்டது, அவமானம், வெற்றி என அனைத்தும் உள்ளடக்கியது தான் காந்தியின் வாழ்க்கை.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

    ×