search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    நெல்லை:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நெல்லையில் உள்ள மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    வழக்கமாக அவரது பிறந்த நாளுக்கு சென்னையில் அவர் வாழ்ந்த வீட்டில் தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவேன். இன்று நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்துள்ளேன்.

    எனவே இங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி உள்ளேன்.

    விளையாட்டு துறையில் இளைஞர்களை ஊக்கப் படுத்துவதிலும், ஊடகத் துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் தன்னிகரற்று விளங்கிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆன்மீக துறையிலும் சிறந்து விளங்கினார்.

    ஆசிய அளவிலான விளையாட்டு போட்டியில் இந்தியா 2 வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளது. இத்தகைய சாதனைகளுக்கு அவர் விளையாட்டு துறையில் முன்னுதாரணமாக விளங்கியதே காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பா.ஜனதா நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட பொது செயலாளர் முத்துபலவேசம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மதுரை-வாடிப்பட்டியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அ.தி.மு.க.வினர் திரண்டு வர வேண்டும் என செல்லூர்ராஜூ-ஆர்.பி.உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளனர்.
    • காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க பகுத்தறிவு பகலவன், காஞ்சி தந்த தங்கம் பேரறிஞர் அண்ணா வின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை நெல்பேட்டையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் படுகிறது.

    நாளை காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு இன்னாள், முன்னாள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், மாவட்ட நிர்வாகி கள், பகுதி, வட்ட நிர்வாகி கள், சார்பு அணி நிர்வாகி கள், முன்னாள், இன்னாள் கூட்டுறவு, உள்ளாட்சி பிரதி நிதிகள், முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்று பேரறிஞர் பெருந்தகைக்கு மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் அவர் கூறியுள்ளார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலா ளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செய லாளர் எடப்பாடி பழனி சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் வாடிப்பட்டியில் உள்ள பேறிஞர் அண்ணாவின் சிலைக்கு நாளை (வெள்ளிக் கிழமை)காலை 9.30 மணி அளவில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

    ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப் பினர்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர், கிளை, வட்ட நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் செயல்வீரர்களும், செயல்வீராங்கனைகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • டாக்டர் சரவணன் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு- நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • எடப்பாடி பழனிச்சாமி-முன்னாள் அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்றார்.

    மதுரை

    மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவ மனையின் நிர்வாக இயக்கு னரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான டாக்டர் சரவணன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டா டப்பட்டது.

    இதையொட்டி மதுரை யில் உள்ள முக்கிய கோவில்களில் டாக்டர் சரவணன் பெயரில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை டாக்டர் சரவணன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வை சந்தித்து டாக்டர் சரவணன் வாழ்த்து பெற்றார்.

    மேலும் முன்னாள்

    எம்.எல்.ஏ. க்கள் தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணைச் செய லாளர் வெற்றிவேல், மாந கராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா ஆகியோர் டாக்டர் சரவணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பிறந்தநாளை முன்னிட்டு சதீஷ் ஏற்பாட்டில் தொழிலதிபர் ரகுநந்தன் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.

    மத்திய 3-ம் பகுதி செயலாளர் மாணிக்கம், விளாங்குடி பகுதி செய லாளர் ஜித்தன், வாடிப் பட்டி ஒன்றிய பொறுப் பாளர் ஆவியூர் ராதா கிருஷ்ணன், வடக்கு 2-ம் பகுதி செயலாளர் கணே சன், பழங்காநத்தம் பகுதி செயலாளர் பிரிட்டோ, அம்மன் குரூப்ஸ் உரிமை யாளர் லட்சுமணன், இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்திக், தமிழக முன்னேற்ற கழகம் நிறு வனர் ராஜ்குமார், மருது தேசிய கழகம் சார்பில் மருதுபாண்டி, அகமுடை யார் கல்வி மைய நிர்வாகி கள் ஆகியோர் டாக்டர் சரவணன் சந்தித்து பொன் னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த னர்.

    டாக்டர் சரவணனின் சூர்யா அறக்கட்டளை மூலம் இதுவரை 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக மாற்று கால்கள் பொருத்தப் பட்டுள்ளன. மேலும் ஏராள மானோருக்கு இலவச இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

    • விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடந்தது.
    • கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    தமிழகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் கடந்த 25-ந் தேதி முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும்,தே.மு.தி.க. கட்சி நிறுவனருமான விஜய காந்தின் 71-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    அதன்அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பிரபாகர் காலனியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் உள்ள மாண வர்களுக்கு பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் உறவு கள் மற்றும் புதிய சகாப்தம் வாட்ஸ் அப் குழு இணைந்து காலை உணவு மற்றும் நோட்டு புத்தகம் உபகர ணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நாட்டார் மங்கலம் அரசு பள்ளியில் கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் துரை பாஸ்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணா கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன், பைசூர் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பழனிவேல், திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் ஜாபர் அலி, நகர செயலாளர் மாதவன், சிங்கம்புணரி செயலாளர்களான சிவகுமார்.

    பாண்டி, ராக்கெட் ராஜா, கேப்டன் குமார், நாச்சியார்புரம் குமார், மருதங்குடி கணேஷ்பாபு, கல்லல் ஒன்றிய பொறுப்பா ளர் நேதாஜி பிரபாகர், கிருஷ்ணன், பிள்ளை யார்பட்டி சரவணன், முத்துப்பாண்டி, பாலு, பழனிவேல், ரமணாராமு, முருகேசன், மாவட்ட ஒன்றிய நகர் கிளைக் கழக நிர்வாகிகள் உடனி ருந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை திருப்பத்தூர் ஒன்றிய நிர்வாகிக ளான கேப்டன் பாண்டியன், கேப்டன்முத்த, பழனிவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், எம்.வி. பி காலனியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண்.

    இவர் கொம்மாடியில் உள்ள குருகுல கல்லூரியின் விடுதியில் தங்கி இருந்து 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் சொந்த ஊருக்கு வந்தார். அன்று இரவு பெற்றோருடன் கேக் வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடினார்.

    பின்னர் மாணவி மீண்டும் கல்லூரிக்கு செல்ல தயாரானார். அப்போது தனது தாயிடம் தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி தருமாறு கூறினார்.

    மாணவியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்று மாணவிக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வந்தார்.

    தாய் வாங்கி வந்த தின்பண்டங்களை பார்த்த மாணவி தனக்கு பிடித்தமான தின்பண்டங்களை ஏன் வாங்கி வரவில்லை என வாக்குவாதம் செய்தார். பின்னர் வேகமாக மாடிக்கு சென்ற மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனைக் கண்ட மாணவியின் பெற்றோர் கதறி துடித்தனர். மகளை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திரண்டிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
    • விஜயகாந்த் ஒரு இருக்கையில் அமர்ந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 71 வயது ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாள் விழாவுக்காக காலை 11 மணி அளவில் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். பின்னர் விஜயகாந்த் ஒரு இருக்கையில் அமர்ந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

    உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் தனது பிறந்தநாள் மற்றும் கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியின் போது மட்டுமே தொண்டர்களை சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை நேரில் பார்த்த தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

    பிறந்தநாளையொட்டி இன்று காலை மற்றும் மதிய உணவுக்கு கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் இட்லி, பொங்கல் வடையுடன் வழங்கப்பட்டது. மீன் குழம்பு, கோழி கறியுடன் ஆட்டுக்கறி விருந்துடன் சுடச் சுட மதிய சாப்பாடு பரிமாறப்பட்டது. இனிப்புகளும் வழங்கப்பட்டன.

    விஜயகாந்தை சந்தித்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரோடு போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், கட்சியின் மாநில நிர்வாகிகள் எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்தித்து வாழ்தது தெரிவித்தனர். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வி.சி.ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    மாவட்ட அவை தலைவர் சுப்பு, பொருளாளர், ஷைன் ராஜ்குமார், துணை செயலாளர் பாஸ்கர், தமிழ் செல்வன், பூக்கடை கந்தன், நித்யபாரதி, செயற்குழு உறுப்பினர்கள் கோபிநாத், பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.கணேஷ், சக்திவேல், ஜெபஸ்டின், தி.நகர் பகுதி செயலாளர் லயன் பா.முகமது, அவை தலைவர் குமார், வட்ட செயலாளர்கள் சார்லஸ், அரசப்பன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் வாழ்தது தெரிவித்தனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதன் காரணமாக தே.மு.தி.க. அலுவலகம் இன்று களை கட்டி காணப்பட்டது.

    • நான் கடந்து வந்த பாதை மலர்களால் ஆனதல்ல. முட்களால் ஆனது தான்.
    • நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதை விட சிறந்த மகிழ்ச்சி இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    என் தாயின் கருவறையில் இருந்து பூமித்தாயின் மடிக்கு நான் இடம் பெயர்ந்து இன்று (25.07.2023) 84 ஆண்டுகள் நிறைவடைந்து 85-ம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இனிமையான தருணத்தில் என்னினும் இளையவர்களை வாழ்த்துகிறேன். மூத்தவர்களிடமிருந்து வாழ்த்துகளைக் கோருகிறேன்.

    பொதுவாக மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்கள் தான் தேர்வுக் காலம். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஜூலை மாதம் தான் எனக்கு தேர்வுக் காலம்.

    ஜூலை 16-ம் நாள் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள், ஜூலை 20-ம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள். ஜூலை 25-ம் நாள் எனது பிறந்தநாள். ஜூலை மாதத்தில் இரு அமைப்புகளின் செயல்பாடுகளையும், எனது செயல்பாட்டையும் ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் அது தேர்வு மாதம்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளையும், வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்யும் போது, அவற்றில் வலிகளும் நிறைந்திருக்கும், மகிழ்ச்சியும் பொங்கி வரும். ஆனால், எனது பிறந்தநாள் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான தருணம் தான். என்னை அறிந்தவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லையில்லா அன்பை நான் காட்டுவதும், என்னை அறிந்தவர்கள், என்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தங்களையும் தருவதற்கு தயாராக இருப்பதும் தான் மகிழ்ச்சிக்கு காரணம்.

    பாசமிக்கத் தமிழ்ச் சொந்தங்களும், பாட்டாளி சொந்தங்களும் என்னை அய்யா என்று அழைப்பதற்கு, உலகில் உள்ள எந்த அதிகார பதவியும் ஈடு இணை அல்ல. அதிகார பதவிகளையும், பணத்தையும் கொண்டிருப்பவர்களைச் சுற்றிலும் கூட்டம் இருக்கும். அது அவர்களுக்கான கூட்டம் அல்ல... அவர்களிடம் உள்ள பணம் மற்றும் பதவிக்கான கூட்டம். என்னிடம் பணமும் இல்லை... பதவியும் இல்லை. ஆனால், என்னிடம் பெரும் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டம் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கும் கூட்டம் அல்ல... மாறாக, எனக்காக எதையும் தியாகம் செய்யும் கூட்டம்.

    இது பெருமைக்காக சொல்லும் வசனம் அல்ல. உண்மை. நான் கடந்து வந்த பாதை மலர்களால் ஆனதல்ல. முட்களால் ஆனது தான். அந்தப் பயணத்தில், மிக, மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு சமூக நீதி பெற்றுத் தருவதற்காக எனது அறைகூவலை ஏற்று, எதையும் எதிர்பார்க்காமல் களமிறங்கி, துப்பாக்கி குண்டுகளையும், காவல் துறையினரின் குண்டாந்தடி தாக்குதல்களையும் தாங்கி 21 சொந்தங்கள் உயிர்த் தியாகம் செய்தனர். ஒவ்வொரு வினாடியும் அவர்களை வணங்குகிறேன்.

    நான் பார்த்து வளர்ந்த மக்களை அந்தச் சூழலில் இருந்து மீட்க வேண்டும்; கல்வியும், வேலையும் பெற்று வாழ்வில் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற வேட்கை எனக்குள் பிறந்தது. அதன் பயன் தான் எனது பொது வாழ்வுப் பயணம் ஆகும்.

    எனது பொதுவாழ்வுப் பயணத்தில் அரசியல், சமூக நீதி, இனம், மொழி, இயற்கை, சுற்றுச்சூழல் சார்ந்து என்னென்ன இலக்குகளையெல்லாம் நான் வரித்துக் கொண்டேனோ, அந்த இலக்குகளை எனது 44 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இன்னும் முழுமையாக என்னால் அடைய முடியவில்லை.

    * தமிழ்நாட்டின் நிர்வாகத்தில் அன்னை தமிழுக்கு அரியணை அளிக்கப்பட வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

    * தமிழ்நாட்டில் பெய்யும் மழையில் ஒரு சொட்டு நீர் கூட வீணாக கடலில் கலக்காத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

    * ஒரு சொட்டு மது கூட இல்லாத அளவுக்கு முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்த பட வேண்டும்.

    * ஒரு புகையிலை கூட இருக்கக்கூடாது. அனைத்து வகை புகையிலைப் பழக்கங்களில் இருந்தும் மக்கள் மீட்கப்பட வேண்டும்.

    * கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த இலக்குகளை இதுவரை முழுமையாக அடைய முடியவில்லை என்றாலும் கூட, அதை நோக்கிய பயணத்தில் பெருந்தொலைவை அடைந்துவிட்டோம்.

    இந்த இலக்குகளை இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக எட்டி விடுவோம் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?

    இந்த வினா தான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது.

    நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அதை விட சிறந்த மகிழ்ச்சி இல்லை..

    நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால் அதை நினைத்து முடங்கி விடத் தேவையில்லை.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும். என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப வெற்றிகளை சாத்தியமாக்க அனைவரும் கடுமையாக உழைப்போம். அரசியல் இலக்கை அடைவோம் என்று அனைவருக்கும் தெவித்துக் கொள்கிறேன்.

    பாட்டாளிகள் இல்லாமல் என் வாழ்க்கை இல்லை, தமிழ்ச்சொந்தங்கள் இல்லாமல் நான் இல்லை. என் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்காக உழைப்பதே எனது விருப்பமும், மகிழ்ச்சியும் ஆகும். இந்த பணியை நான் என்றும் தொடர்வேன் என்று எனது முத்துவிழாவில் நான் அளித்த வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை தமிழ்ச்சொந்தங்களுக்கு புதுப்பித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (வயது25). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு ஒரகடம் அய்யப்பன் தெரு சந்திப்பு அருகே ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்பவர் நண்பர்களுடன் நடுரோட்டில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

    இதனை ஆட்டோ டிரைவர் காமேஷ் கண்டித்தார். மேலும் ஆட்டோ செல்ல வழிவிடுமாறு கூறினார். இதனால் கவுதம் தரப்பினருக்கும், ஆட்டோ டிரைவர் காமேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த கவுதம் தரப்பினர் மறைத்து வைத்துருந்த கத்தி, அரிவாளால் காமேசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த காமேஷ் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம்கேட்டு அப்பகுதிக்கு வந்த காமேசின் தம்பி சதீசையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவரது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்ததும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட காமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுக்காயம் அடைந்த சதீஷ் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கவுதமுடன் அவரது நண்பர்கள் 10 பேர் இருந்ததாக தெரிகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிறந்தநாள் கொண்டாடத்தின் போது ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும்.
    • மறுவருடம் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார்.

    பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருக்குமே பிறந்த தேதி ஒரே நாளாகும். அதாவது ஆகஸ்ட் 1-ந் தேதி அன்று இந்த 9 பேருமே பிறந்துள்ளனர்.

    இது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இந்த சாதனையை வைத்திருந்தனர். அவர்கள் பிப்ரவரி 20-ந் தேதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

    அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இவர்கள் 1991-ம் ஆண்டு தங்களது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொண்டனர். மறுவருடம் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார். அடுத்தடுத்த குழந்தைகள் பிறப்பும் ஆகஸ்ட் 1-ந் தேதியாக இருந்ததை கடவுளின் பரிசு என்று தம்பதியினர் கூறினார்கள்.

    • கரண் ஆப்தே என்ற ஜொமோட்டோ நிறுவன ஊழியர் சமீபத்தில் தனது 30-வது வயதை எட்டினார்.
    • பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவதற்காக திட்டமிட்ட கரண் ஆப்தே முதலில் தனக்கு ஒரு புதிய சட்டையை எடுத்துக் கொண்டார்.

    எல்லோருமே தங்களது பிறந்தநாளை சிறப்புக்குரிய நாளாக பார்ப்பார்கள். அந்த வகையில் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருப்பது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

    அதாவது, கரண் ஆப்தே என்ற ஜொமோட்டோ நிறுவன ஊழியர் சமீபத்தில் தனது 30-வது வயதை எட்டினார். இதை வித்தியாசமாக கொண்டாடுவதற்காக திட்டமிட்ட அவர் முதலில் தனக்கு ஒரு புதிய சட்டையை எடுத்துக் கொண்டார். பின்னர் அன்றைய தினம், தான் வினியோகம் செய்த ஒவ்வொரு ஆர்டரின்போதும் வாடிக்கையாளர்களுக்கு சாக்லெட் வினியோகித்து பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அது வைரலாக பரவிய நிலையில், சில பயனர்கள் ஜொமோட்டோவை டேக் செய்து கரண் ஆப்தே பிறந்த நாளை கொண்டாடி அவருக்கு பரிசு வழங்குமாறு வலியுறுத்தினர். இதைப் பார்த்த நிறுவனத்தினர் கரண் ஆப்தேவுக்கு பிறந்தநாள் கேக்கை அனுப்பினர். அதையும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • சிவகங்கை அருகே கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    காளையார் கோவில்

    சிவகங்கை மாவட்டம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கே.சொக்க நாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி புரவலருமான தென்னவன தலைமை தாங்கினார்.

    தலைமைக்கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத்பாலா, காளை யார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து ஆகியோர் பேசினர். பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் யோககிருஷ்ணகுமார், ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் சுப. தமிழரசன் வரவேற்றுப் பேசினார்.

    இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சேதுபதி ராஜா, துஷாந்த் பிரதீப் குமார், நாட்டரசன் கோட்டை பேருர் செயலா ளர் ஜெயராமன் ஒன்றிய நிர்வாகிகள் அழகப்பன், கண்ணப்பன், செல்லப்பாண்டி, கண்ணாத்தாள் தென்னரசு, பொருளாளர் கண்ணன், அல்லூர் ரவி, இளைஞரணி அமைப்பாளர் சக்தி தாசன், சுசீந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், செல்வராஜ், மையப்ப செட்டியார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து மூதாட்டியிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.
    • எங்க பாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முத்துராயன் ஜீ பியில் வசித்து வருபவர் மூதாட்டி வெங்கடலட்சுமம்மா (வயது 103), இவருடைய பிறந்தநாளை, குடும்பத்தினர் நேற்று கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.

    மூதாட்டி வெங்கடலட்சுமம்மாவுக்கு நேற்று 103-வது பிறந்த நாள் ஆகும். இவருக்கு 6 மகள்கள் உள்ள நிலையில், இவருடைய குடும்பத்தில், மொத்தம் 5 தலைமுறையாக உள்ள 217 பேர் நேற்று ஒரே இடத்தில் கூடி பிறந்தநாள் விழாவை பட்டாசு வெடித்துகொண்டாடியும், கேக் வெட்டி மூதாட்டிக்கு ஊட்டிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த மூதாட்டி வழியில் வந்தவர்கள், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்தும் உறவினர்கள் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வந்திருந்து மூதாட்டியிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

    இதுகுறித்து அவரது பேரப்பிள்ளை கூறுகையில், நான் நான்காவது தலைமுறையாக உள்ளேன். எனது மகன் தற்போது 5-வது தலைமுறையாக உள்ளான். இன்று எங்க பாட்டிக்கு பிறந்தநாள் விழா கொண்டாடுவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் நாங்களும் வாழ வேண்டும். எங்கள் பாட்டியும் இன்னும் நீண்ட நாட்கள் ஆயுளுடன் வாழ வேண்டும் என ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், எங்கள் பாட்டி இதுவரை மருத்துவமனைக்கு ஒருமுறை மட்டும் தான் சென்று வந்துள்ளார். அவருக்கு கண் காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் நன்றாக உள்ளது.

    அவரே தன்னுடைய அன்றாட வேலைகளை செய்து கொள்கிறார். அவர், கேழ்வரகு மற்றும் சோள களியை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார். ஒரு சில நேரங்களில் இட்லி, தோசை கொடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

    விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை சைவஉணவு பரிமாறப்பட்டது.

    ×