search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வாக்குச்சாவடி முகவர்கள் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் விழா வருகிற 27-ந் தேதி வருகிறது. அந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், மரக்கன்று நட்டும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும். வட்ட, கிளை செயலாளர்கள் தங்களுக்கு உரிய வாக்குச்சாவடிகளுக்கு 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை இளைஞரணியினர் பங்காற்ற செயலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர்.செந்தில்குமார், செந்தூர் முத்து, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சிவபாலன், கோட்டா பாலு மற்றும் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்
    • நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே ஆ.மருதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 145 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், செல்வி மணிமாறன் தலைமை தாங்கினர். தெற்கு ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சக்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நெட்டூரில் உள்ள சமுதாய நல கூடத்தில் பெண்களுக்கு வளையல் அணிந்து சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யாமணிகண்டன், நெட்டூர் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, தொழிலதிபர் மாரி துரை, அரசு ஒப்பந்ததாரர் மணிமாறன், ராமகிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • சங்கரநாராயணசாமி கோவில் யானையை பக்தர்கள் கோமதி என்று அன்போடு அழைப்பார்கள்.
    • நேற்று கோமதி யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் கோவில் யானை உள்ளது. இந்த யானையை பக்தர்கள் கோமதி என்று அன்போடு அழைப்பார்கள். தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரால் 1997-ம் ஆண்டு கோவிலுக்கு இந்த யானை வழங்கப்பட்டது. கோமதி யானைக்கு நேற்று 28-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

    மேலும் யானைக்கு பக்தர்கள் பழங்கள் வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் கோமதி யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து யானைக்கு அதிக அளவில் பழங்கள் வாங்கி கொடுத்து "கஜ" பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் தர்மசாலாவில் வள்ளலார் பிறந்த தினவிழா நடந்தது.
    • வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருட்பெருஞ்ஜோதி தர்மசாலாவில் வள்ளலாரின் 200-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனையடுத்து திருப்பத்தூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் வள்ளலார் ஜோதியை ஏற்றி வைத்ததுடன் அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். 1500 பேருக்கு மேல் உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ‌தர்மசாலா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்குஅமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர்மாலை அணிவித்தனர்
    • திருப்பூர்குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சுதந்திர போராட்ட வீரர் தியாகி திருப்பூர் குமரன் பிறந்நாளை முன்னிட்டு, திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள திருப்பூர் குமரன் நினைவு மண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

    இந்த விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    திருப்பூர் குமரன் சென்னிலையில் 4-10-1904-ல் நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி தம்பதியினருக்கு முதல் பிள்ளையாக பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி. குடும்ப சூழ்நிலை காரணமாக 5&ம் வகுப்பிலேயே தனது பள்ளி படிப்பை முடித்துக்கொண்டார். வறுமையின் காரணமாக மேற்கொண்டு பள்ளி படிப்பை தொடர முடியாத காரணத்தினால் தனது குடும்ப தொழிலான கைத்தறி நெசவு செய்து வந்தார். இவர் தனது 19-வது வயதில் ராமாயி என்ற பெண்ணை 1923-ம் ஆண்டு மணந்தார். கைத்தறி தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் ஈரோடு சென்று, பஞ்சு மில்லில் எடை போடும் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார். ஆரம்பம் முதலே காந்தியின் கொள்கையில் ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தியடிகள் அறிவித்த போராட்டங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மேலும், 4-1-1932-ல் காந்தியடிகளை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

    இந்த செய்தி காட்டு தீ போல் பரவியது. காங்கிரஸ் தொண்டர்கள் கொதிதெளுந்தனர். இதனால் கண்டன போராட்டங்கள் நடத்தவும், சட்ட மறுப்பு இயக்கம் நடத்தவும் முடிவு செய்தனர். இதன் தொடர்சியாக தமிழ்நாட்டில் திருப்பூரில் போலீசாரின் தடையை மீறி 10-1-1932-ம் ஆண்டு தியாகி பி.எஸ். சுந்தரம் தலைமையில், நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் முதல் வரிசையில் காங்கிரஸ் கொடியை பிடித்துக்கொண்டு குமரன் வந்தார். வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கோஷம் எழுப்பிய போது, போலீசாரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் உடல், தலையில் பலத்த காயத்துடன், தன் கையில் இருந்த கொடியை தரையில் சாய விடாமல் வந்தே மாதரம் என்ற முழக்கத்தை எழுப்பி நன் நாட்டு பற்றியை பறைசாற்றினார். குமரன் கீழே விழுந்தாலும், அவரது கையில் வைத்திருந்த கொடி தரையில் விழாமல் பிடித்திருந்தார். திருப்பூர் வீதியிலேயே கொடிகாத்த குருதி வெள்ளத்தில் குமரன் வீழ்ந்து கிடந்தார். அடிபட்டு பலத்த காயங்களுடன் இருந்த குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது, சுயராஜ்யம் வராதா என இறுதி சொற்களுடன் 11-1-1932-ம் ஆண்டு இந்த மண்ணுலகை விட்டு சென்றார். இதனால் அவர் கொடி காத்த குமரன் என பெயர் பெற்றார்.

    விண்ணில் பறக்கும் கொடி மண்ணில் வீழ்வதா என தன்னுயிர் கொடுத்து நாட்டின் மானம் காத்த பெருமை, இந்திய விடுதலை வரலாற்றில் தனிப்பெருமை வாய்ந்தது. திருப்பூர் குமரன் நினைவாக அவரது திருவுருவத்துடன் கூடிய அஞ்சல் வில்லையை 2007-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டு சிறப்பு செய்தது. திருப்பூர் குமரன் நினைவகம், திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் 11,195 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. நினைவு மண்டபம் கட்டிடம் 2500 சதுர அடியில் ரூ4,80,353 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் பின்னர் திருப்பூர் குமரன் வாரிசுதாரர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கவுன்சிலர் திவாகர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சதீஷ்குமார், வடக்கு தாசில்தார் கனகராஜ் மற்றும் குமரனின் வாரிசுதாரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.
    • இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது.

    இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாள் (காந்தி ஜெயந்தி) இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.

    இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அனுசரிக்கப்படுகிறது. காந்தி ஜெயந்தி அன்று புதுடெல்லயில் காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ்காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது.

    இந்நிலையில் இன்று காலை மகாத்மா ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

    • காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.
    • கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு.

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 154வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதன்படி, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோரும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து, காந்தியவாதிகள் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி நிகழ்ச்சியை ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து, இன்று மாலை கிண்டியில் நடைபெறும் விழாவில் பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஆளுநர் பரிசு வழங்குகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
    • பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    'தினத்தந்தி' பத்திரிகை நிறுவனர், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதைமுன்னிட்டு, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் அவரது சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    மேலும், 'தினத்தந்தி' குழும தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இவர்களை தவிர, பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    • இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • பக்தர்களுக்கு பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அகரகட்டு லூர்து நாடார் இனிப்பு வழங்கினார்.

    தென்காசி:

    பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் வழிகாட்டுதலின் படி பேரமைப்பு சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பேரமைப்பின்மாநில துணைத்தலைவர் அகரகட்டு லூர்து நாடார் இனிப்பு வழங்கினார். இதைதொடர்ந்து கீழப்புலியூர் முப்பிடாதி அம்மன்கோவிலில் அலங்க ரித்து வைக்கப்பட்டிருந்த சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரவைப்பின் மத்திய மாவட்ட தலைவர் ஆனந்த் காசிராஜன், வடக்கு மாவட்ட தலைவர் சூரிய பிரகாஷ், தெற்கு மாவட்ட தலைவர் ராஜா, தென்காசி நகர தலைவர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஈரோடு:

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் திருநகர் காலனியில் உள்ள நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் நற்பணி மன்ற ஈரோடு மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் உப தலைவரும், ஈரோடு நாடார் சங்க தலைவருமான உதயம் செல்வம், மாநகர தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ராதா, நாடார் சங்க உப தலைவர் முருகையா, செல்லசாமி, மோகன்ராஜ், பேங்க் பாண்டி, ஜோசப், வேல்பாண்டி, வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் அவரது உருவப் படத்திற்கு நகர தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
    • நகர செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:

    அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆலங்குளத்தில் அவரது உருவப் படத்திற்கு நகர தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நகர செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சுந்தரம், கவுன்சிலர் மாவட்ட பிரதிநிதி அன்ப ழகன், ஒன்றிய பிரதிநிதி ஆதிவிநாயகம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி பாஸ்கரன், ராசையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • ஜனாதிபதி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×