என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Booster dose"
- நல்ல ஊழியரை பணிநீக்கம் செய்வதற்கு பதில் நான் சிறை சென்றிருப்பேன்
- மூன்றாவது டோஸ் செலுத்தி கொண்ட பின் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது
2019 வருட இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா எனும் வைரஸ் தொற்று, 2020ல் உலகம் முழுவதும் பரவி, உலக நாடுகளை அச்சுறுத்தி, உலக பொருளாதாரத்தை நலிவடைய செய்து லட்சகணக்கானவர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவற்றை அந்தந்த நாட்டு மக்கள் கட்டாயமாக செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தின. விருப்பமில்லையென்றாலும் அரசாங்கங்கள் கட்டாயமாக்கியதால் மக்கள் சில மாதகால இடைவெளிகளில் ஒன்றன் பின் ஓன்றாக செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசியின் பயன்பாடு குறைந்து வருவதாகவும் சில நாடுகள் அதனை உபயோகிப்பதையே நிறுத்தி விட்டதாகவும் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிலளித்த எக்ஸ் நிறுவனத்தின் அதிபரும், உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க் தெரிவித்திருப்பதாவது:
மக்கள் கட்டாயமாக தடுப்பூசிகளையும் பூஸ்டர்களையும் செலுத்தி கொள்ள வேண்டும் என அரசாங்கங்கள் கட்டாயபடுத்தியதை நான் நாகரிகமற்ற அத்துமீறலாக கருதுகிறேன். அதிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு விருப்பமில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்பதால் ஒரு நல்ல ஊழியரை பணி நீக்கம் செய்வதற்கு பதிலாக நானே சிறைக்கு சென்றிருப்பேன்.
அது மட்டுமல்ல; நானும் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
நோயினால் ஏற்பட்ட உடல்ரீதியான சிக்கலை விட தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு பலருக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டன. நோய் தடுப்புக்கான தடுப்பூசி, நோயை விட கடுமையான விளைவுகளை தர கூடாது.
இவ்வாறு மஸ்க் தெரிவித்துள்ளார்.
- பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.
- கோவேக்சின் பூஸ்டர் டோஸ் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது.
புதுடெல்லி :
டெல்டா, ஒமைக்ரான் வகை வைரஸ்களுக்கு எதிரான செயல்திறனை கோவேக்சின் பூஸ்டர் டோஸ் அதிகரிக்கிறது என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கி, அது தேசிய தடுப்பூசி திட்டத்தின் பயன்பாட்டில் உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்), பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி பற்றிய ஒரு ஆராய்ச்சியை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெல்டா-ஒமைக்ரானுக்கு எதிராக... இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது டோஸ் செலுத்தியதன் பாதுகாப்பு செயல்திறன் சிரியாவின் வெள்ளெலி மாதிரியைக் கொண்டு (மனிதன் தொடர்பான நோய்களை ஆராய உதவும் விலங்கு மாதிரி) ஆராயப்பட்டது.
இதில், கோவேக்சின் தடுப்பூசியின் 2-வது டோஸ் மற்றும் 3-வது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செயல் திறனை ஆராய்ந்ததில், இது டெல்டா வைரசுக்கு எதிரான செயல்திறனை மேம்படுத்துகிறது. ஒமைக்ரான் வகைகளான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கிறது என தெரிய வந்துள்ளது. நோய் எதிர்ப்பு பதிலளிப்பு, மருத்துவ பலன் கண்காணிப்புகள், வைரஸ் அளவு குறைதல், நுரையீரல் நோயின் தீவிரம் ஆகியவை ஆராயப்பட்டன.
டெல்டா வைரஸ் தொற்று ஆராய்ச்சியில், 2-வது மற்றும் 3-வது டோஸ்களுக்கு இடையேயான பாதுகாப்பு பதிலளிப்பை ஒப்பிட்டு பார்த்ததில், பாதுகாப்பில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் உணரப்பட்டது. நுரையீரல் நோய் தீவிரம், 3 டோஸ் தடுப்பூசிக்கு பின் மேலும் குறைந்தது. டெல்டா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறனை குறிக்கும் 2-வது மற்றும் 3-வது டோஸ் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி ஆராய்ந்ததில், வைரஸ் சுமை குறைந்தது.
ஒமைக்ரான் வைரஸ்களான பிஏ.1.1 மற்றும் பி.ஏ.2 ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பு பதிலளிப்பை ஆய்வு செய்ததில், 3-வது டோஸ் செலுத்திய பிறகு வைரஸ் சுமை குறைந்தது தெரியவந்தது. தற்போதைய ஆராய்ச்சியின் முடிவு, கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது, டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களுக்கு எதிரான நோயின் தீவிரத்தை குறைக்கிறது. பாதுகாப்பு நோய் எதிர்ப்பு பதிலளிப்பை விரிவுபடுத்துகிறது என தெரிய வந்துள்ளது.
இவ்வாறு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது.
- பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பகிர வேண்டும்.
புதுடெல்லி:
சீனா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.-7 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் இந்த வகை தொற்றுகள் பரவ தொடங்கி உள்ளன. எனினும் புதிய வகை தொற்றால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என நிபுணர்கள் கூறி உள்ளனர்.
அதே நேரம், மீண்டும் கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டலியா நேற்று காணொலி மூலம் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுசுகாதார நிபுணர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது புதிய வகை தொற்றால் ஏற்படக்கூடிய எழுச்சிக்கான தயார் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அப்போது மந்திரி மன்சுக் மாண்டலியா கூறியதாவது:-
கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பான தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து வருகிறது. இந்த பாதிப்பு தொடர்பாக சரிபார்க்கப்பட்ட தகவலை மட்டும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு பகிர வேண்டும்.
முக கவசம் அணிதல் உள்பட கொரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் அந்த வழிமுறைகளை பின்பற்றுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு கொரோனா பாதிப்பு குறித்த நம்பகமான தகவலை மட்டுமே பகிர வேண்டும்.
தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதும் மிகவும் முக்கியம். இதன் மூலம் கொரோனா நோய் தொற்று குறித்த வதந்திகள், தவறான கருத்துக்கள், அவற்றின் வாயிலாக மக்களிடையே ஏற்படும் அச்சத்தை தடுக்க முடியும்.
கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விபரங்கள், தடுப்பூசி திட்டம், பாதிப்பை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியபடுத்தி நோய் தொற்று தொடர்பாக அவர்களிடையே சிறிய அளவில் ஏற்படும் அச்சத்தையும் போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்திற்கு பின் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயலால் கூறுகையில், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கு கடைசி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு ஒரு வருடமாகிறது. இத்தகைய நீண்ட இடைவெளி நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.
எனவே மக்கள் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை நிர்வகிக்க வேண்டிய மற்றும் அதிக ஆபத்தில் இருக்கும் முன்கள பணியாளர்களுக்கு 4-வது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி (2-வது பூஸ்டர் டோஸ்) போடுவதற்கு பரிசீலிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்றார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் சகஜானந்த் பிரசாத் சிங் கூறுகையில், அதிக செயல்திறன் இருந்தபோதிலும் இந்தியாவில் சுமார் 30 சதவீதம் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே அதிகபட்ச மக்கள் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யுமாறு மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளோம். புதிய வகை தொற்றால் பீதி அடைய எந்த காரணமும் இல்லை. ஆனால் நாம் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றார்.
- 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் இலவசமாக செலுத்தப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், 36வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 1,341 இடங்களில் நேற்று நடந்தது.மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி முதல், இரவு,7மணி வரை நடந்த முகாமில் 6,600 பூஸ்டர் உட்பட 22 ஆயிரத்து 135 தடுப்பூசி செலுத்தப்பட்டது.இம்மாதம் 30-ந் தேதி வரை மட்டுமே பூஸ்டர் இலவசமாக செலுத்தப்படும். அதன் பின் கட்டணம் செலுத்தி தான் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பால், நேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்வதில், மாவட்ட மக்கள் ஆர்வம் காட்டுவர் என சுகாதாரத்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று 6,600 பூஸ்டர் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி இன்று 35-வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.
சென்னை:
கொரோனா தடுப்பூசி 2 டோஸ்களும் போட்டுக்கொண்டவர்கள் அவசியம் பூஸ்டர் டோஸ் போட வேண்டும். இந்த மாத இறுதி வரை பூஸ்டர் தடுப்பூசி அரசின் சார்பில் இலவசமாக போடப்படுகிறது.
இதை தீவிரப்படுத்துவதற்காக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி இன்று 35-வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.
பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள தகுதி உடையவர்களில் சுமார் 15 சதவீதம் பேர்தான் போட்டுள்ளார்கள். பொதுமக்கள் தயக்கம் இல்லாமல் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகிறேன். இந்த மாதம் மட்டும் தான் இலவசமாக போடப்படும்.
பொதுமக்கள் வசதிக்காக இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் அதாவது 11, 18, 25 ஆகிய தேதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
இந்த முகாம்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் வழக்கம் போல் தினமும் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
- ஜூலை 15-ந் தேதி தொடங்கிய இத்திட்டம் செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும்.
புதுடெல்லி :
நாட்டில் 65 வயதை தாண்டியவர்களுக்கும், முன்கள, சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வந்தது. இந்தநிலையில், சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி, 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
கடந்த ஜூலை 15-ந் தேதி தொடங்கிய இத்திட்டம், செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும். இதற்காக நாடு முழுவதும் பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் தொடங்கி, நேற்று 42-வது நாள் ஆகும். இந்த 42 நாட்களில் 9 கோடியே 60 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இதுவரை 14 கோடியே 70 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடங்குவதற்கு முன்பு நாள் ஒன்றுக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது. அது சராசரியாக 27 லட்சத்து 77 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதுபோல், நாள் ஒன்றுக்கு சராசரியாக செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசிகள் 22 லட்சத்தை கடந்துள்ளது.
விழிப்புணர்வு பிரசாரத்தால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. பிரதமர் மோடியின் உறுதியான, முற்போக்கான தலைமையின் கீழ் நாட்டின் கூட்டு மனஉறுதியை இது காட்டுவதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் உன்னிப்பாக கண்காணித்து வந்தார்.
இதற்கிடையே, பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் 'கோர்பேவேக்ஸ்' சேர்க்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும்.
- கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த பணி இன்று(நேற்று) தொடங்கி வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை 75 நாட்கள் நடக்கிறது. 2-வது டோஸ் போட்டு 6 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவர்கள். இந்த 75 நாட்களில் 4.34 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.
கர்நாடகத்தில் 8 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. மாநிலத்தில் தற்போது 8.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு மற்றும் 31.55 லட்சம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாவட்ட அளவில் தடுப்பூசி செலுத்த நுண்ணிய திட்டத்தை வகுத்துள்ளோம். அலுவலகங்கள் மற்றும் வீடு, வீடாக சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
மென்பொருள் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி செலுத்துவோம். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் தடுப்பூசி மேளா நடத்தப்படும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் அரசுடன் பொதுமக்கள் கைகோர்க்க வேண்டும். அரசின் தடுப்பூசி மையங்களில் தகுதியானவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை இலவமாக போட்டு கொள்ளலாம்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
- நேற்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கிறது.
- பெங்களூருவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வெறும் 60 ஆயிரம் போ் மட்டுமே பூஸ்டா தடுப்பூசி போட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நாட்டிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாகவும், 75-வது சுதந்திர தினத்தையொட்டியும் நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதையடுத்து, நேற்று முதல் இலவச பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி இருக்கிறது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசியை இலவசமாக பொதுமக்கள் போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. பூஸ்டர் தடுப்பூசியை கட்டணம் செலுத்தி பொதுமக்கள் போட்டுக் கொள்ளலாம் என்றும், இதற்காக தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தனர். அதன்படி, கர்நாடகத்தில் கடந்த 3 மாதங்களில் 3.97 லட்சம் பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இவர்களில் பெங்களூருவில் மட்டும் 3.35 லட்சம் பேர் கட்டணம் கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூருவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வெறும் 60 ஆயிரம் போ் மட்டுமே பூஸ்டா தடுப்பூசி போட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக பெங்களூருவில் தனயார் மருத்துவமனைகள் அதிகமாக இருப்பதும் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதாவது பெங்களூருவில் உள்ள 130 மருத்துவமனைகளில் 110 மருத்துவமனைகளில் பூஸ்டா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3 மாதமாக இல்லை.
- பூஸ்டர் தடுப்பூசி முறையாக போட்டுக்கொண்டால் பேரிடரில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
சென்னை:
பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை சென்னை எழும்பூரில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் 4-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.
அதனால் பூஸ்டர் முன்எச்சரிக்கை தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் இலவசமாக 2950 மையங்களில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இதுவரையில் தமிழகத்தில் 11 கோடியே 63 லட்சத்து 18 ஆயிரத்து 727 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மத்திய அரசு நல்ல திட்டத்தை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3 மாதமாக இல்லை. எனவே பூஸ்டர் தடுப்பூசி முறையாக போட்டுக்கொண்டால் பேரிடரில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். 3 கோடியே 45 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
முதல் மற்றும் இரண்டாம் தவணையை சேர்த்து 4 கோடியே 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.
இலவச பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்குள் போடப்பட வேண்டும் என்பதால் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மெகா தடுப்பூசி முகாம் இனி வருங்காலங்களில் நடத்தப்படும்.
வருகிற 24-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் மெகா சிறப்பு முகாம் நடத்தப்படும். அதில் 3 தடுப்பூசிகளும் போடப்படும். எல்லா பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார். இன்றோ, நாளையோ வீடு திரும்புகிறார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போடுவார்.
குரங்கு அம்மை நோய் கேரளாவில் ஒருவருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தமிழக-கேரள எல்லையில் 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடக்கிறது.
விமான நிலையங்களிலும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உணவு சாப்பிடக்கூடிய இடங்களில் அதிகம் பரவுகிறது. அதனால் ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் உணவு அருந்த வலியுறுத்தப்படும்.
முக கவசம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவசியம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உடனிருந்தனர்.
- பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் 43 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
- மேலும் தேவையான அளவு தடுப்பூசி வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை:
கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தடுப்பூசி மட்டுமே பேராயுதமாக கருதப்படுவதால் அதனை தகுதி உள்ள அனைவரும் செலுத்தி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி பெரும்பாலானவர்கள் செலுத்திக்கொண்ட நிலையில் முன்எச்சரிக்கை என்று சொல்லக்கூடிய பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கட்டணத்துடன் போடப்படுகிறது.
2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்த நிலையில் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு தகுதி உள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்தது.
2-வது தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியிருந்தும் பலர் பணம் செலுத்தி போட முன்வரவில்லை. தமிழகத்தில் மிக குறைந்த அளவிலேயே பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான கால அவகாசம் 6 மாதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதால் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதினார்.
இதையடுத்து முன் எச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்கு மட்டும் இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75-வது பொன் விழா சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஜூலை 15) முதல் செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும் அதனை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று முதல் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிமணியன் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார்.
இதே போல அனைத்து மாவட்டங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடங்கி வைத்தனர். 18 முதல் 59 வயதுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்கள் என்றாலும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் முடிந்து இருக்கக்கூடியவர்தான் போட வேண்டும்.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி ஒரு கோடியே 35 லட்சம் பேருக்கு இன்னும் போட வேண்டியுள்ளது. இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்களாக 3½ கோடி பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி போட தொடங்கும் இந்த நாளில் கோவிஷீல்டு பூஸ்டர் செலுத்தக்கூடியவர்கள் 3 கோடியே 13 லட்சத்து 38 ஆயிரத்து 545 பேரும், கோவேக்சின் செலுத்தக் கூடியவர்கள் 41 லட்சத்து 88 ஆயிரத்து 276 பேரும் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 15-ந்தேதிக்கு முன்னதாக 2 தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்கள் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடலாம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனைத்து சுகாதார துணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி பூஸ்டர் தடுப்பூசி இன்று முதல் 75 நாட்களுக்கு போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். அரசு கொரோனா மையங்களில் இலவசமாக செலுத்த வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி 6 மாதங்கள் முடிந்திருக்க வேண்டும். முதல் மற்றும் 2-வது தவணை எந்த தடுப்பூசி போட்டுக் கொண்டார்களோ அதே நிறுவனத்தைச் சேர்ந்த பூஸ்டர் தடுப்பூசியே செலுத்த வேண்டும். மாற்றி போடக்கூடாது.
பொதுமக்கள் கூடும் இடங்கள், அலுவலகங்கள், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்தலாம். சிறப்பு முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவுடன் அதற்கான சான்றிதழ் ஆன்லைன் வழியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் 43 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மேலும் தேவையான அளவு தடுப்பூசி வருகிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பர் 30-ந்தேதி வரை செலுத்தப்படும் நிலையில் 4 கோடியே 15 லட்சத்து 75 ஆயிரத்து 995 பேர் தகுதி உள்ளவர்களாக இருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
- இரண்டாவது தவணை செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.
- இன்று முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
புதுடெல்லி :
18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளன. கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி என்பது இரண்டு டோஸ் எடுத்துக்கொண்ட பின்னர், நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் தக்கவைத்துக் கொள்ள செலுத்தப்படுகிறது.
இரண்டாவது தவணை செலுத்திய பின்னர் 6 மாத காலத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி இன்று முதல் 75 நாட்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
- ஜூலை 15-ந்தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
- கொரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவினருக்கு ஜூலை 15-ந்தேதி முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் 18-59 வயதுப் பிரிவில் உள்ள 77 கோடி பேரில் 70 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவர்களில் ஒரே ஒரு விழுக்காட்டினர். அதாவது 72 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். இதற்கு காரணம் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படாதது தான்.
பூஸ்டர் தவணை தடுப்பூசியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறேன். இப்போது எனது யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதைப் பயன்படுத்தி இந்த வயதுப் பிரிவினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு வசதியாக வரும் 17-ந் தேதி முதல் 11 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும், கிராமப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்