என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "boy friend arrested"
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை அடுத்த கொல்லவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் மகேஸ்வரி (வயது 17), பிளஸ்-2 மாணவி.
அதே ஊரைச் சேர்ந்த விஜயபாண்டியன் மகன் கோடீஸ்வரன் (26) பி.காம். பட்டதாரி. இவரும் மகேஸ்வரியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் மகேஸ்வரி திடீரென மாயமானார். இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசில், முத்துக்கிருஷ்ணன் புகார் செய்தார்.
அதில், மகேஸ்வரி கடத்தப்பட்டுள்ளதாகவும், கோடீஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் இதனை செய்திருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் காதலனுடன் மகேஸ்வரி ஊருக்கு வந்த போது போலீசார் அவரை மீட்டனர். கோடீஸ்வரன் கைது செய்யப்பட்டார். அவரது பெற்றோர் விஜயபாண்டியன்-வசந்தி, தம்பி கருப்பசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வானன் (வயது 20), கூலித் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். அப்போது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை பலமுறை தமிழ்வாணன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து நடந்த விபரங்களை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.
இதனை கேட்ட அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனது மகளின் நிலைக்கு காரணமான காதலன் தமிழ்வாணனை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் தமிழ்வாணன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழ்வாணனை கைது செய்தார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள கீழ்சுந்தரகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர், பெங்களூருவில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். அஜித்குமாருக்கும், அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி வந்ததாகவும், அந்த சமயத்தில் அஜித்குமார், இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது.
அதனால் இளம்பெண் 6 மாத கர்ப்பம் அடைந்தார். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், அஜித்குமார் வீட்டிற்கு சென்று தங்களது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். அதற்கு, அஜித்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இளம்பெண்ணின் தாயார் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள அய்தம்பட்டு ஈச்சந்தோப்பை சேர்ந்த செல்வக்குமார் (வயது 28). இவர், ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இதே கம்பெனியில், ஆம்பூர் சின்ன வரிகத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணும் வேலை செய்தார்.
இவர்களுக்குள், காதல் மலர்ந்தது. 5 ஆண்டுகளாக காதலித்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அந்த இளம்பெண்ணிடம் செல்வக்குமார் உல்லாசமாக இருந்தார்.
இதையடுத்து, திடீரென கடந்த மாதம் செல்வக்குமார் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். பெற்றோரும் பெண் பார்த்தனர். இதையறிந்த காதலி, செல்வக்குமாரிடம் தகராறு செய்தார்.
‘உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. முடிந்தை பார்த்துக்கொள் என்று காதலியிடம் செல்வக்குமார் திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால் மனமுடைந்த காதலி, ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணைக்கு பயந்து, செல்வக்குமார் தலை மறைவானார். ஒரு மாதமாக அவர் வீட்டிற்கு வரவில்லை. மகன் காணவில்லை என செல்வக்குமாரின் தந்தை, உமராபாத் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தலை மறைவாக இருந்த செல்வக் குமார், காதலிக்கு நேற்று திடீரென போன் செய்தார். ‘நான் ஜோலார்பேட்டையில் இருக்கிறேன். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். வீட்டில் இருக்கும் பணம், நகைகளை எடுத்து கொண்டு வா...நான் உனக்காக காத்திருக்கிறேன்’’ என்றார்.
இதுகுறித்து, காதலி தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீசாரிடம் தெரிவித்தார். செல்வக்குமாரை பிடிக்க அவர்களும் இளம்பெண்ணிடம் ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணம், 10 பவுன் நகை கொடுத்து ஜோலார் பேட்டைக்கு அனுப்பினர்.
பெற்றோர், போலீசாரும் பின்தொடர்ந்தனர். ஜோலார் பேட்டை ரெயில் நிலையம் அருகே காத்திருந்த செல்வக்குமாரை, நகை-பணத்துடன் சென்ற காதலி சந்தித்தார்.
அப்போது, காதலியிடம் இருந்த நகை-பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அங்கு இருந்த போலீசார், செல்வக்குமாரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், தலைமறைவாக இருப்பதால் செலவுக்கு பணம் இல்லை.
இந்த நிலைக்கு காரணமான, காதலியிடம் நகை, பணத்தை பறிக்க திட்டமிட்டு வர வழைத்ததாக செல்வக்குமார் கூறினார். ‘சரி நடந்ததெல்லாம் போகட்டும் காதலியை திருமணம் செய்து கொள்’ என்று போலீசார் தெரிவித்தனர்.
திருமணத்திற்கு செல்வக்குமார் மறுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினர். இதையடுத்து, செல்வக்குமார் திருமணத்திற்கு சம்மதித்தார்.
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செல்வக்குமாருக்கும், அவரது காதலிக்கும் திருமணம் நடக்கிறது. இதற்காக அவர்கள் நள்ளிரவே அழைத்து செல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நள்ளிரவு வரை பரபரப்பு காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்