search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "budget"

    • சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.
    • தமிழக மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் தொடங்க இருப்பதையொட்டி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டி.ஆர். பாலு உள்பட தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் 2023-24 நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப் பட்டது. தி.மு.க. சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    அதுபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து 'பிபிசி' வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை-இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும் இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும், பாராளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதேபோன்று, தமிழ்நாடு அரசால், மத்திய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் குரல் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    குறிப்பாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது.

    தமிழக மீனவர்கள்மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது பற்றியும், படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்வது பற்றியும் கேள்வி எழுப்ப வேண்டும்.

    சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது;

    மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது ஆகியன பற்றியும் வலியுறுத்த வேண்டும்.

    கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும் தடுப்பூசிகளைப் பெறுவது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது, என்.எல்.சி. நிறுவனத்தின் வேலை வாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது, இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும்-அகில இந்தியாவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டுமென அறிவுறுத்துப்பட்டது.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிக்கும் வேலையை தொடங்கி வைத்தார்.
    • மத்திய பட்ஜெட்டுக்கு முன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும்போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.

    மத்திய பட்ஜெட்டுக்கு முன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி அனைவருக்கும் வழங்கினார்.

    • 2020-21-ல் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும்.
    • அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது.

    புதுடெல்லி:

    2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இந்தநிலையில் டெல்லியில் நடைபெற்ற பத்திரிகை சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:-

    நானும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள்தான். எனவே, அவர்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் எனக்கும் தெரியும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் எந்த புதிய வரியையும் விதித்தது இல்லை. நடுத்தர மக்களின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது. அது இனியும் தொடரும் என்றார்.

    இதன் மூலம் நடுத்தர மக்களை பாதிக்கும் வரிகள் எதுவும் பட்ஜெட்டில் இருக்காது என்பதை அவர் சூசகமாக தெரிவித்தார். எனினும், வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படுமா? என்பது தொடர்பாக அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், '100 பொலிவுரு நகரங்களையும், 27 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை ஏற்படுத்தவும் அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவை திறம்பட செயல்பட முடியும். மேலும், அரசின் நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது.

    2020-21-ல் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் ரூ.31,820 கோடியாகும். இதுவே அடுத்த நிதியாண்டில் ரூ.66,539 கோடியாக அதிகரித்தது. கொரோனா தொற்று பிரச்சினைக்கு நடுவில் இந்த வளர்ச்சி ஏற்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். வங்கிகளின் வாராக் கடன் அளவும் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது' என்றார்.

    விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் முன்பு மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜி20 மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகளை விளம்பரப்படுத்துவோம்.
    • பொருட்களின் தேவை அதிகரிக்கும்.

    புதுடெல்லி

    இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.) 95-வது ஆண்டு மாநாடு மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது.

    தொடக்க விழாவில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

    உற்பத்தி துறை மீது இந்தியா கவனம் செலுத்தக்கூடாது, அதற்கு பதிலாக சேவைத்துறையில் அக்கறை செலுத்த வேண்டும் என்று நமக்கு யோசனை சொல்லப்படுகிறது. ஆனால், சேவை துறையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதுடன், உற்பத்தி துறையை மேலும் வலுப்படுத்துவது அவசியம்.

    அதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த கண்டுபிடிப்புகளை தொழில்துறையினர் உன்னிப்பாக கவனித்துவர வேண்டும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புதிய ஆற்றலில் இருந்து தொழில்துறை பலன் அடையலாம்.

    நீண்டகாலமாக நிகழ்ந்து வரும் பொருளாதார மந்தநிலை, மேலைநாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போதிலும், வேறு நாடுகளுக்கு இடம்பெயர நினைத்துக் கொண்டிருக்கிற முதலீடுகள், உங்களைத் தேடி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அந்த முதலீட்டாளர்களை இந்தியாவுக்கு இழுக்க தொழில்துறையினர் வியூகம் வகுக்க வேண்டும்.

    உலகம் தூய்மையான எரிசக்தியை நோக்கி இடம்பெயர்ந்து வருவதால், வளர்ந்த நாடுகள் உங்கள் மீது அதிக வரி விதிக்கக்கூடும். ஜி20 மாநாட்டின்போது, இந்தியாவின் சாதனைகளை விளம்பரப்படுத்துவோம்.

    இந்தியாவில், 14 கோடி நடுத்தர வருவாய் குடும்பங்களும், 1 கோடியே 40 லட்சம் உயர் வருவாய் குடும்பங்களும் அதிகரிக்கும். இதனால், பொருட்களின் தேவை அதிகரிக்கும்.

    வரும் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட், முந்தைய பட்ஜெட்டுகளின் ஆன்மாவை பின்பற்றியே இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வதாக இருக்கும். 2047-ம் ஆண்டில், மிகவும் வளர்ச்சியடைந்த இந்தியாவில் நமது குழந்தைகள் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 75 சிதறு தேங்காய் உடைத்து காந்தி சிலையிடம் கோரிக்கை மனு.
    • வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கும்பகோணம்:

    வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்ே்காரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர் வேளாண்மைக்கு மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யக்கோரி கும்பகோணத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கும்பகோணத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடந்தது.

    இதற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் தலைமை தாங்கினார். அப்போது உச்சிபிள்ளையார் கோவிலில் இந்தியாவின் 75-வது சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில், 75 சிதறுதேங்காய் உடைத்து, அந்த பகுதியில் உள்ள காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    இதில் பெண் விவசாயி ஒருவர், விவசாயிகள் நலன் கருதி வேளாண்மைக்கு என சிறப்புத் தனி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தமிழக அரசு கடந்த ஆண்டில் இருந்து தாக்கல் செய்வது போல், மத்திய அரசும், வருகிற 2023-24-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடரில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காந்தி சிலையிடம் வழங்கினார்.

    ஜனாதிபதிக்கு மனு போராட்டத்தில் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், வாசுதேவன், ராஜ்மோகன் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் தேசிய கொடியுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுவை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

    • பொருளாதார வளர்ச்சிக்கு முதலிடம் அளிப்போம்.
    • பணவீக்கம் கவலை அளிக்கிறது.

    வாஷிங்டன் :

    உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் உள்ள புருக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பிரபல பொருளாதார நிபுணர் ஈஸ்வர் பிரசாத்துடன் உரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    அதில், அடுத்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பற்றிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    எரிபொருள், உரம், உணவு ஆகிய பொருட்கள் உலக அளவில் உயர்ந்து வருகின்றன. அதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அந்த சுமை, மக்களுக்கு ஏறாமல் பார்த்துக் கொள்கிறோம்.

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பின் மூலம் எரிபொருள் விலையின் சுமை, மக்களை தாக்காமல் பார்த்துக் கொண்டோம்.

    பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள் பற்றி இப்போதே எதுவும் கூற முடியாது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சிக்கு முதலிடம் அளிப்போம். பணவீக்கம் கவலை அளிக்கிறது. அதை குறைக்க வேண்டும். அதே சமயத்தில், பொருளாதார வளர்ச்சியை எப்படி தக்க வைப்பது என்ற கேள்வி இயற்கையாகவே எழும்.

    எனவே, எனது பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதுடன், விலைவாசியை கட்டுப்படுத்தும்வகையில் கவனமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், ஒரு இந்திய மாணவர், ''அமெரிக்காவில் இந்தியாவின் யு.பி.ஐ. (பண பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம்) சேவை கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எப்போது இந்த சேவையை தொடங்குவீர்கள்?'' என்று கேட்டார்.

    அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    இதுதொடர்பாக பல்வேறு நாடுகளுடன் பேசி வருகிறோம். யு.பி.ஐ. மட்டுமின்றி, இந்தியாவின் ருபே கார்டுகள், பீம் செயலி ஆகியவற்றையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டு வருகிறோம்.

    சிங்கப்பூரும், ஐக்கிய அரபு அமீரகமும் ருபே கார்டை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டார்ட்அப்புடன் பேச தயார்

    மற்றொரு கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    இந்தியாவில் உள்ள சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இடம் பெயர்வதாக நானும் கேள்விப்பட்டேன்.

    அவர்கள் அரசுடன் பேச தயாராக இருந்தால், அவர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களது கவலைகளை தீர்த்து, அவர்களை இந்தியாவிலேயே செயல்பட வைப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் எல்லனை நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவு, உலக நிலவரம், ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    உலக பொருளாதாரம் பற்றியும் பேசினர். நவம்பர் 11-ந் தேதி நடக்க உள்ள அமெரிக்க-இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி உறவு கூட்டத்தில் பங்கேற்க இந்தியாவுக்கு வருமாறு ஜேனட் எல்லனுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

    • இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
    • தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.‌

    தஞ்சாவூர்:

    தமிழக பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்- புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

    முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

    தஞ்சையில் இன்று புதிய பஸ்நிலை அருகே உள்ள ஒரு மஹாலில் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.‌

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும் மாணவிகளுக்கு கையேடு அடங்கிய பை வழங்கப்பட்டது.

    அதில் ஏ.டி.எம். கார்டு, புதுமைப்பெண் திட்டத்தின் விளக்கம் கையேடு, மேல்படிப்பு படிப்பதற்கான கையேடு ஆகியவை அடங்கி இருந்தது.

    தஞ்சையில் 472 மாணவிகளுக்கு இந்த வரவேற்பு கையேடு அடங்கிய பையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

    இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு இந்த பை வழங்கப்பட்டது.

    மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 3765 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

    தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2019-2020ம் நிதி ஆண்டுக்கு ரூ.3,116.25 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. #Tirupatitemple #Budget
    திருமலை:

    ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. தற்போது 2019-2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.1,231 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி வைப்புகள் மூலம் கிடைக்கும் வட்டித்தொகை ரூ.845.86 கோடி, விரைவு தரிசனம் மற்றும் பிரேக் தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.235 கோடி, பிரசாத விற்பனை மூலம் ரூ.270 கோடி, காணிக்கை தலைமுடி விற்பனை மூலம் ரூ.100 கோடி, விடுதி அறைகள், கல்யாண மண்டபங்கள் மூலம் ரூ.105 கோடி, பங்கு வைப்புகள் மூலம் ரூ.67.54 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆர்ஜித சேவை டிக்கெட்கள் விற்பனை மூலம் ரூ.57 கோடி, ஓட்டல்கள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபம் வாடகை, என்ஜினீயரிங் துறை, டோல்கேட் வரி வசூல், புத்தகம், டைரிகள், காலண்டர் ஆகியவை விற்பனை, கேண்டீன் வாடகை, கல்வி கட்டணம், தங்க டாலர்கள் விற்பனை மற்றும் இதர முதலீடுகள் மூலம் ரூ.204.85 கோடி வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.3,116.25 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பிற முதலீட்டுச் செலவினம் ரூ.78.85 கோடி, ஊழியர்கள் சம்பளம் மற்றும் கூலி ரூ.625 கோடி ஒதுக்கப்பட உள்ளது. என்ஜினீயரிங் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு இரும்பு தளவாட பொருட்கள் கொள்முதலுக்கு ரூ.541 கோடி செலவிடப்பட உள்ளது. மானியம் மற்றும் பங்களிப்புத் தொகை ரூ.283 கோடி, அசையா சொத்துக்களை பராமரிக்க ரூ.400 கோடி, ஆதார செலவினம் ரூ.339.58 கோடி, ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க ரூ.260 கோடி, ஓய்வூதியம் வழங்க ரூ.75 கோடி ஒதுக்கப்படுகிறது. மின் கட்டணமாக ரூ.52 கோடி செலுத்தப்படும். அசையா சொத்துக்களை பழுது பார்க்க ரூ.135 கோடி செலவிடப்பட உள்ளது.

    கடன், ஊழியர்களுக்கு முன்பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.52.11 கோடி செலவிடப்படுகிறது. விளம்பரம் ரூ.10 கோடி, பல்வேறு முதலீடு மற்றும் இதர செலவினத்துக்கு ரூ.264.21 கோடி ஒதுக்கப்பட உள்ளது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tirupatitemple #Budget


    திருப்பூர் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட 39-வது வார்டுக்குட்பட்ட ராக்கியாபாளையம் பிரிவு, 38-வது வார்டுக்குட்பட்ட நல்லூர், 35-வது வார்டுக்குட்பட்ட விஜயாபுரம் ஆகிய 3 இடங்களில், அ.தி.மு.க. அரசின் 2-ம்ஆண்டு சாதனையை விளக்கும் விதமாகவும், பட்ஜெட் விளக்க தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக அரசின் சாதனைகள், பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களை விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், வேங்கை விஜயகுமார் ஆகியோரும் விளக்கவுரை ஆற்றினார்கள். இதில் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், தொகுதி பொறுப்பாளர் தம்பி மனோகரன், பகுதி செயலாளர்கள் டெக்ஸ் வெல் முத்துசாமி, கருவம்பாளையம் மணி, கிளை செயலாளர்கள் அரசு ஆறுமுகம், சக்திவேல், பால சுந்தரம், பொன்னுசாமி, வி.ஜி. வி பாலு, கண்ணபிரான் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மத்திய மந்திரிகள் ஷிவ் பிரதாப் சுக்லா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அல்வா கிண்டி மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அச்சடிக்கும் பணியை இன்று தொடங்கி வைத்தனர். #budget #HalwaCeremony
    புதுடெல்லி:     

    பாராளுமன்றத்தில் ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) சமர்ப்பிப்பதற்கு முன்னர் அச்சடிக்கும் வேலை தொடங்கும் போது பழங்கால சம்பிரதாயப்படி அல்வா எனும் இனிப்பு பொருள் தயாரித்து, இதுதொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.


    அந்த வகையில், டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி ஷிவ் பிரதாப் சுக்லா, சாலை போக்குவரத்துத்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க் முன்னிலையில் இன்று அல்வா தயாரிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.  #budget #HalwaCeremony 
    நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். #puducherryassembly

    புதுச்சேரி:

    இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் காலவரையின்றி சபையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துறைரீதியான நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒட்டுமொத்த நிதி ஒதுக்க மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தோம்.

    ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். அரசு கொடுத்த பணிகளை நான் முடித்துவிட்டேன். நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #puducherryassembly

    2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்தும் நோக்கத்துடன் தான் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு நிதி ஒதுக்கீடு 2 மடங்காக உயர்த்தப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMmodi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரது திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நாட்டு மக்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    அதன்படி இன்று 600 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி, 2017 - 18ம் ஆண்டில் 280 மில்லியன் டன் உணவு பொருட்களின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது 10.5 சதவிகித கூடுதல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்கு மண் வளம் காப்பது குறித்தும் மண்ணின் தரம் குறித்து அறிந்து அதற்கேற்ப பூச்சிக்கொல்லிகளை உபயோகம் செய்வது குறித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும், நல்ல விதைகளை தேர்ந்தெடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், விவசாயிகள் தங்களது விளை பொருட்களுக்கான விலையை எவ்வித இடைத்தரகரும் இன்றி நேரடியாக பெறுவதற்காக இ-நாம் என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக உயர்த்தவே மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண்துறைக்கான நிதி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #PMmodi 
    ×