search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    • 3 பேர் பலி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    சென்னை அடையாறு பகு தியை சேர்ந்தவர் திருமால் (வயது 37). இவரது அக்கா எழிலரசி (40). திருமாலின் மகன் தருண் (14), மகள்கள் தரணிகா (14), தனுஷ்கா (14). இவர்கள் 3 பேரும் ஒரே பிரச வத்தில் பிறந்தவர்கள்.

    தங்களது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் விரிஞ்சி புரத்துக்கு நேற்று முன்தினம் திருமால் குடும்பத்தினருடன் வந்தார். அங்கு உறவினர் திதியை முடித்துவிட்டு, நேற்று சென்னைக்கு வாடகை காரில் புறப்பட்டார்.

    மதியம் 2 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட் டம், வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலை ஓரம் கன்டெய்னர் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண் டிருந்தது. இந்த நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கன்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதிலாரிக்கு அடியில் புகுந் தது.

    இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரின் இடிபா டுகளுக்குள் சிக்கி கார் டிரை வர் அய்யப்பன், திருமால் மற்றும் எழிலரசி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் திருமாலின் மகன் தருண், மகள்கள் தர ணிகா, தனுஷ்கா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் விட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தருண் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலைகளை மீட்டு பிரயோக பரிசோதனைக்காக வாலாஜா அரச ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் குனிச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 52). இவருக்கு திருமணமாகி மயில் என்கின்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர்.

    இவர் அதே பகுதியில் பழம் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் இவர்  வேலை சம்பந்தமாக சுண்ணாம்புகுட்டை பகுதியில் இருந்து வாணியம்பாடி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது பின்னால் வந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது. இதில் வியாபாரி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை
    • படுகாயம் அடைந்தவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த வசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் வடிவேலு (வயது 32).

    அதே பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (35),ஆனந்தன் (45), சிவராமன் (32), பிரகாஷ் (37). இவர்கள் 5 பேரும் ஊர் திருவிழாவை முன்னிட்டு பட்டாசு வாங்குவதற்காக சேத்துப்பட்டுக்கு காரில் வந்தனர்.

    பட்டாசுகள் வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பினர். சேத்துப்பட்டு தேவிகாபுரம் இடையே கிழக்கு மேடு பகுதியில் மாலை 6:30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது போளூரில் இருந்து சென்னைக்கு சென்ற அரசு பஸ் மீது திடீரென கார் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் இறங்கி நின்றது.

    பஸ் மீது மோதிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த வடிவேல், சங்கர், ஆனந்தன், சிவராமன் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயம் அடைந்த பிரகாசை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இன்று காலை ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

    மேலும் சேத்துப்பட்டு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழா களை கட்டிய நேரத்தில் விபத்தில் 4 பேர் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    • கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சென்று கொண்டு இருந்தது.
    • இரவு முழுவதும் டிரைவர் தூங்காமல் காரை ஓட்டி வந்தார். குமரன்குன்று அருகே வந்தபோது டிரைவர் திடீரென கண் அயர்ந்து விட்டார்.

    மேட்டுப்பாளையம்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மலக்குள்ளி அருகே உள்ள பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது மனைவி ரஞ்சனி (30).

    இவர்களது மகன்கள் ஜோசப் ஆப்ரகாம் (8) கேசா சாரல் (6). ராஜேஷின் சகோதரி சித்ரா (27). இவர்கள் 5 பேரும் கோடை விடுமுறையையொட்டி தங்களது காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். காரை ஓட்டுவதற்கு அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பூவேந்திரன் (28) என்பவரை நியமனம் செய்தனர்.

    அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் பாலூரில் இருந்து காரில் அனைவரும் மகிழ்ச்சியாக ஊட்டிக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் பூவேந்திரன் ஓட்டி வந்தார். முன் இருக்கையில் ராஜேஷ் அமர்ந்து இருந்தார். அவரது மனைவி, தங்கை மற்றும் மகன்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

    கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சென்று கொண்டு இருந்தது. இரவு முழுவதும் டிரைவர் தூங்காமல் காரை ஓட்டி வந்தார். குமரன்குன்று அருகே வந்தபோது டிரைவர் திடீரென கண் அயர்ந்து விட்டார். இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. கண்இமைக்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் இருந்த ராஜேஷ் சம்பவஇடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் உள்பட அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காருக்குள் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேஷின் மனைவி ரஞ்சனி, அவரது தங்கை சித்ரா, மகன்கள் ஜோசப் ஆப்ரகாம், கேசா சாரல் மற்றும் டிரைவர் பூவேந்திரன் ஆகியோரை மீட்டனர். பின்னர் 5 பேரையும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 5 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் சிறுமுகை போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். பின்னர் விபத்தில் இறந்த ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது விபரீதம்
    • 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்

    கண்ணமங்கலம்:

    வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி யன் குடும்பத்தினர் 5 சிறுவர் சிறுமிகள் உள்பட 10 பேர் காரில் திருவெண்காடு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லத்தேரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வேலூர் செல்லும் சாலையில் வந்தனர்.

    அப்போது டிரைவரின் கட் டுப்பாடு இழந்து கார் சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

    • கிரேன் உதவியுடன் கார் அப்புறப்படுத்தப்பட்டது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் காந்தி நகர் பைபாஸ் சாலை பகுதியில் வசித்து வருபவர் தாமரைக்கண்ணன், இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு தாமரைக்கண்ணன் வாலாஜாவிலிருந்து ராணிப்பேட்டை நோக்கி காரில் வந்தார். கார் வி.சி.மோட்டூர் அருகே வந்த போது சாலையில் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த டாக்டர். தாமரைக்கண்ணனனுக்கு தலை மற்றும் நெற்றியில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா போலீசார் விபத்துக்குள்ளான காரை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கிரேன் உதவியுடன் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி, விபத்து காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் வேலூர் சாலையில் சந்தனக் கொடடா பகுதியில் வராவதி அருகே உள்ள கால்வாயில் அவ்வழியே வந்த கார் ஒன்று தடுப்பில் விபத்துக்குள்ளானது.

    கார் பள்ளத்தில் கவிழாமல் மயிரிழையில் ஓரமாக நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் வந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

    இந்த விபத்து சம்பந்தமாக வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 40).

    இவர் அதே கிராமத்தில் துப் புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவ ரது மனைவி சுமதி. மகள் பிரியா (10) மகன் தட்சன் (7) நேற்று மாலை விஜயன் தனது மகள் பிரியா மற்றும் மகன் தட்சன் ஆகியோரை மோட்டார் சைக்கிளில் ஏற் றிக்கொண்டு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே குண்ணத் தூர் கிராமத்தில் உள்ள உறவி னர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    ஐய்பேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த கார், விஜயன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் பயங்கர மாக மோதியது. இந்த விபத் தில் விஜயன் மற்றும் அவரது மகன் தட்சன் ஆகியோர் சம் பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த பிரி யாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்து வமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தகவல் அறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலை அப்புறப்படுத்தாமல் பட்டு நூல் பொருட்களை ஏற்றியதால் பொதுமக்கள் வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே சோமதாங்கல் கூட்ரோடு அருகில் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயம் நகர் பகுதியைச் சேர்ந்த நூர் என்பவரின் மகன் அக்ரம் அஹமத் கோர பட்டு நூல் விற்பனை செய்து வந்தார்.

    அக்ரம் அஹமத் தனது காரில் ஆரணி அருகே உள்ள சேவூர் ஒண்ணுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டு நூல் விற்பனை செய்ய சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரிகை கொண்டு வந்தார். இவருடன் முஷரப் என்பவர் காரை ஓட்டி வந்தார்.

    ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள நெசவாளருக்கு பட்டு நூல் விற்பனை செய்த விட்டு ஆரணி வேலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துகுள்ளானது.

    அக்ரம் அஹமத் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கார் டிரைவர் முஷ்ரப் படுகாயமடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து 108 ஆம்பூலன்ஸ் மூலம் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவலறிந்த வந்த ஆரணி தாலுக்கா இன்ஸ்பெக்டர் புகழ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது உடலை அப்புறப்படுத்தாமல் போலீசார் மற்றும் ஓண்ணுபுரத்தில் உள்ள பட்டு உற்பத்தியாளர் கொண்டு வந்த பட்டு நூலை மற்றொரு காரில் ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை கண்ட பொதுமக்கள் காரில் ஏற்றிய நபர்களிடமும் போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இறந்த உடலை அப்புறப்படுத்தாமல் பொருட்களை ஏற்றி செல்வது நியாயம என பொதுமக்கள் சராமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

    பின்னர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பழனிச்சாமி மீது மோதியது.
    • திருநாவலூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னை முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). இவர் தனது குடும்பத்துடன் மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு மீண்டும் தனியார் பஸ்சில் சென்னைக்கு திரும்பினார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் காந்தி நகர் பகுதியில் உள்ள டீக்கடையில் அனைவரும் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.

    அப்போது பழனிச்சாமி சிறுநீர் கழிப்பதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் பழனிச்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிச்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திருநாவலூர் போலீசார் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் சிங்கார பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40) இவர் கட்டிடம் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று நாட்டறம்பள்ளி அருகே வெல்லக்கல்நத்தம் பகுதியில் கட்டிட வேலை செய்துவிட்டு மீண்டும் ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பைனப்பள்ளி அருகே வேலூர் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடியை அடுத்த கலந்தரா பகுதியைச் சேர்ந்த சிவாஜி என்பவரது மகன் சதீஷ் (வயது 24), இவர் தனது உறவினர்கள், டிரைவர் உள்பட 7 பேருடன் ஏலகிரி மலைக்கு காலை 9 மணியளவில் காரில் சுற்றுலா வந்தனர்.

    காரை சதீஷ் ஓட்டிச் சென்றார். ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த அவர்கள், நேற்று மாலை மலை உச்சியில் இருந்து கீழே இறங்கினர். 3 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த வாணியம்பாடி சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் பூவரசன் (17), மாசி லாமணி மகன் ஏஞ்சல் (13) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். டிரைவர் உள்பட 5 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

    இதுபற்றி தகவலறிந்த ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×