என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cattle market"
- வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
- 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே உள்ள கண்ணபுரத்தில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி அன்று விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
வருகிற 23-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சாமி ரதத்திற்கு எழுந்தருளலும், பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.
கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) பூச்சாட்டுலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தைக்கு கோவை, திருப்பூர். ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு புது காங்கேய இன மாடுகளை வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள்.
இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, நேற்று அமாவாசை முடிந்து இன்று பாட்டி அம்மை என்பதால் மாடுகளின் வரத்து குறைவாக உள்ளது. நாளை (புதன்கிழமை) மாடுகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்றனர்.
- வாரந்தோறும் கோடி கணக்கில் மாடுகள் வியாபாரம் நடக்கும் சந்தையில் இன்று இலட்சக்கணக்கில் மட்டுமே வியாபாரம்.
- வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் மாட்டுச் சந்தை தமிழகத்தில் பிரபலமான மாடு சந்தையாக விளங்கி வருகிறது.
வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் திருப்பத்தூர் தர்மபுரி தேனி மதுரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாடுகள் மற்றும் பல நூறு மாற்று வியாபாரிகள் கலந்துகொண்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் சந்தையாக விளங்கும் கேளூர் மாட்டுச் சந்தையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை காரணமாக மாட்டுச் சந்தைக்கு பணங்கள் கொண்டு வருவதில் மாற்று வியாபாரிகளுக்கு பெருத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தைக்கு மாடு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மாடுகள் விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே மாடுகள் குறைந்த அளவிலே வந்துள்ளதால் வியாபாரிகளும் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் இன்று லட்சக்கணக்கில் தான் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக மாட்டுச் சந்தையில் உள்ள மாடு வியாபாரிகள் மாடுகளை விற்க வந்திருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையானது
- அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேப்பந்தல் மாட்டுச்சந்தை மிகவும் பெயர் பெற்ற சந்தையாக விளங்கி வருகின்றது.
இந்த மாட்டு சந்தையில் ஜெர்சி களர் நாட்டு மாடு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வருகின்றன. வேலூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களி இருந்தும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலத்திலிருந்தும் மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யவதற்கும் இந்த தேப்பனந்தல் மாட்டு சந்தையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தற்போது வரையில் இந்த சந்தையில் கைகளில் துண்டு போட்டு மாட்டு விவசாயிகள் விலை பேசும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.
நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மாட்டு சந்தையில் அதிகாலை முதலே விவசாயிகள் ஆர்வத்துடன் மாடுகள் வாங்கவும் விற்பனை செய்யவும் குவிய தொடங்கினர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சுமார் ரூ.1 கோடி மேல் மாட்டுகள் விற்பனை நடைபெற்றதாக விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டது.
- மாட்டுச்சந்தை ஏலத் தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்காததால் நகராட்சி நிர்வாகமே வாரச்சந்தையை நடத்தி வருகிறது.
- மாட்டுச்சந்தை ஏலம் 17-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டு வருகிறது. வியாழன் அன்று ஆட்டுச்சந்தை நடக்கும். இந்த சந்தைகளுக்கான ஒப்பந்த காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஏலத் தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்காததால் நகராட்சி நிர்வாகமே வாரச்சந்தையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நகராட்சி கமிஷனர் மீனா தலைமையில் நடந்த மாட்டுச்சந்தை ஏலத்தில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். மாட்டுச்சந்தையை ஏலம் எடுப்பதற்கு அரசு நிர்ணயித்த தொகை ரூ.1.40 கோடி என கமிஷனர் அறிவித்தார். இந்த தொகை அதிகமாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.
இதனால் மாட்டுச்சந்தை ஏலம் 17-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல் மாட்டுச்சந்தை ஏலமும் 14-வது முறையாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
- காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.
- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார்.
காங்கேயம் :
காங்கேயம் தாராபுரம் ரோட்டில் சக்திநகரில் காங்கேயம் நகராட்சி மற்றும் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் வாராந்திர மாட்டுச் சந்தை அமைக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் காங்கேயம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் காங்கேயம் ரக 100க்கும் மேற்பட்ட மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர்.
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் சந்தைக்கு வந்து மாடுகளை பார்வையிட்டார். பின்னர் சந்தையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், காங்கேயம் நகராட்சி ஆணையாளர் வெங்கடேஸ்வரன், நகராட்சித் தலைவர் சூரியபிரகாஷ், பஞ்சாயத்து யூனியன் தலைவர் மகேஷ்குமார், தெற்கு ஒன்றிய திமுக., செயலாளர் கே. கே. சிவானந்தம், வடக்கு ஒன்றிய திமுக., செயலாளர் கருணை பிரகாஷ், பொத்தியபாளையம் பஞ்சாயத்து துணைத் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுகவினர், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- திங்கள்கிழமை முதல் பிரதிவாரம் தோறும் பாரம்பரியமிக்க காங்கேயம் மாட்டுச்சந்தை நடைபெற உள்ளது.
காங்கயம் :
பாரம்பரியமிக்க காங்கேயம் மாட்டுச்சந்தை காங்கேயம் நகராட்சி தாராபுரம் மெயின்ரோடு கவி ரெஸ்டாரண்ட் அருகில் வருகிற 19.6.2023 (திங்கள்கிழமை) அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.
வரும் 19.6.2023 (திங்கள்கிழமை) முதல் பிரதிவாரம் தோறும் பாரம்பரியமிக்க காங்கேயம் மாட்டுச்சந்தை நடைபெற உள்ளது.மேலும் காங்கயத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரியமிக்க மாட்டுச்சந்தைக்கு வாரம்தோறும் திங்கள்கிழமையன்று விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது.
- கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.
திருப்பூர் :
ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை திருப்பூர் கோவில்வழி அடுத்த அமராவதிபாளையத்தில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. பாரம்பரியமான இச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் என 500க்கும் அதிகமானோர் வருகின்றனர்.கோடை வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் கடந்த ஓரிரு மாதங்களாக 700 முதல் 800 மாடுகள் வந்தது. இந்த வாரம் சந்தை துவங்குவதற்கு முன்பாக 8 மணிக்கே ஆட்டோக்கள் பெருந்தொழுவு ரோட்டில் நீண்ட வரிசையில் இரண்டரை கி.மீ., தூரத்துக்கு காத்திருந்தது.வழக்கமாக மதியத்துக்குள் வாகனங்கள் வருகை முடிந்து விடும். சந்தை முடிவு தருவாயை எட்டும் வரை தொடர்ந்து ஆட்டோ, வேன்களில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
1,100 மாடுகள் வரத்தாக இருந்தது. சந்தை வியாபாரிகள், விவசாயிகள் கூட்டம் நிறைந்திருந்ததால் கடந்த வாரம் 8முதல் 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற கன்றுகுட்டிகள் 12 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. 40 முதல் 42 ஆயிரம் விற்ற மாடுகள் 46 முதல் 48 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மாடுகள் விலை 2,000 முதல் 4,000 வரை உயர்ந்ததால் சந்தை ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் ரூ. 1.90 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
- மாவட்ட கலெக்டர் உத்தரவிற்கிணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில், காங்கேயம்சந்தை ஏற்படுத்துதல் மற்றும் திருப்பூரில் பிரதிவாரம் திங்கட்கிழமை இயங்கி வரும் மாட்டுச் சந்தையின் கிழமையினை மாற்ற விவசாயிகளின் கோரிக்கையினை கருத்தில் கொண்டு காங்கேயம் நகராட்சியில் பிரதிவாரம் திங்கட்கிழமை அன்றும் மற்றும் திருப்பூர்மாநகராட்சி கோவில்வழி அமராவதி நகரில் பிரதிவாரம்செவ்வாய்க்கிழமை அன்றும் மாட்டுச்சந்தைகள் நடைபெறும்.
அதன்படி வருகிற 19.6.2023 (திங்கட்கிழமை) அன்று காங்கேயம் நகராட்சியிலும், 20.6.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று திருப்பூர்மாநகராட்சி கோவில்வழி அமராவதி நகரிலும் மாட்டுச் சந்தைகள் நடைபெறும். இதற்காக திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிற்கி ணங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இதனை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு திருப்பூர்மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.
- அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
- மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூர் பெருந்தொழுவு சாலை, அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் நடந்த மாட்டு சந்தையில் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்கு மாடுகள் கொண்டுவரப்பட்டன.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் திருப்பூர் மாட்டு சந்தை களைகட்டியது. இந்த சந்தைக்கு மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் என சரக்கு வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.கடந்த வாரத்தை விட இந்த வாரம் கன்று குட்டியின் விலை குட்டியை பொறுத்து ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை போனது. மாடுகள் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரை விலை போனது. காலை 8 மணி முதலே வியாபாரிகள் சந்தைக்கு வர தொடங்கினர்.
இதனால் பெருந்தொழுவு சாலையில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கேரளாவில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி, கோவை, மயிலாடுதுறை, கோபி, குன்னத்தூர், நம்பியூர், அவினாசி, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. 762 மாடுகளில் 53 மாடுகள் விற்பனையாகவில்லை. இதனால் கொண்டுவந்த மாடுகளை விவசாயிகள் திரும்ப அழைத்து சென்றனர். சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழக்கத்தைவிட மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் விலை குறையவில்லை.
- 55 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
- அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப்பசு விற்பனையானது.
காங்கயம் :
காங்கயத்தை அடுத்துள்ள நத்தக்காடையூா் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.14 லட்சத்துக்கு விற்பனையாயின.திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 55 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 35 மாடுகள் மொத்தம் ரூ.14 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.72 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
- தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் களிமேடு பகுதியில் நடைபெற்றது.
- மாவட்ட தலைமை மருத்துவமனையாக காங்கயம் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காங்கயம் :
காங்கயம் நகர தி.மு.க. சார்பாக தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் களிமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:- தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறது. வருமுன் காப்போம் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மக்களை தேடி மருத்துவத் திட்டம் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரையில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு கட்டணம் இல்லா பஸ், நான் முதல்வன் திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி உட்பட பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
மேலும் மாவட்ட தலைமை மருத்துவமனையாக காங்கயம் அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளது. காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூர் ஊராட்சியில் மக்கள் கோரிக்கையை தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் கட்டப்படும். காங்கயத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடைபெறுவதற்கு முதல்-அமைச்சர் அனுமதி வழங்க உள்ளார். விரைவில் காங்கயம் - தாராபுரம் சாலையில் மாட்டு சந்தை தொடங்கும். ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் , சிவன்மலை அடிவாரப்பகுதியில் விளையாட்டு அரங்–கம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
காங்கயம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டம் பரஞ்சேர்வழியில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணைபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் ஈரோடு இறைவன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் கலந்து கொண்டு தி.மு.க. அரசு 2 ஆண்டு காலத்தில் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வரதராஜ், ஒன்றிய அவைத்தலைவர் எம்.ரவி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவாநந்தன் உள்பட கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.
- கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.
உடுமலை :
மடத்துக்குளம் அருகே கடத்தூர் கிராமத்தில் சித்திரமேழி கல்வெட்டு உள்ளது. உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் இந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:- கடத்தூரில் உள்ள சித்திரமேழி நாட்டார் கல்வெட்டானது வேளாண்மை சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய ஒரு மிகப்பெரிய கல்வெட்டாகும்.சித்திரமேழி என்பது பழங்காலத்தில் உழவர்கள் ஏர்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத்தாங்கி நிற்கின்றது.
இந்த கல்வெட்டில் வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற்றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு என அப்போதைய மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திய உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்களை சித்ரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.
கடத்தூர் மருதீசர் கோவிலிலும், அருகிலுள்ள கணியூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர் கொழுமம் கோவில்களிலும், நிலக்கொடை சார்ந்த கல்வெட்டுகள் 85க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.ஆனால் இந்தக் கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டாக உள்ளது. இவ்விடத்தில் மிகப்பெரிய ஒரு கால்நடை சந்தை இருந்துள்ளது. அதைச் சுற்றி பாதுகாப்பாகவும் அகழியாகவும் நீர் அரண் என்ற பாதுகாப்பு இருந்ததால் தான் இந்த கடத்தூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து கால்நடை மற்றும் வேளாண் வணிகர்கள் பயன்படுத்தியுள்ளனர்.இந்த இடத்தில் கோட்டை இருந்ததையும் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்தால் வரலாறு தெரிய வரும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்