என் மலர்
நீங்கள் தேடியது "Chithirai festival"
- சமயபுரம் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஏப்.6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், மரகுதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வருகிற 15-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 3-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மதுரை:
திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.
இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்
இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.
அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.
அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.
- வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.
- திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தகோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் நடைபெறும்.
இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திரை திருவிழாவுக்காக ஊர்திரும்புவார்கள்.
அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, பால்குடம், காவடி என பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். மே மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுவதால் சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்கும் வண்ணம் ராட்டிணம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஏப்.18ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் பக்தர்கள் மஞ்சள் காப்பு அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோவிலில் கம்பம் நடுதல், பல்லக்கில் வீதி உலா, அம்மன் புறப்பாடு, தேரோட்டம் ஆகியவை மே 5ந் தேதி முதல் 16ந் தேதி வரை நடைபெறுகிறது. திரு விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- தொடர்ந்து கொடிமரத்துக்கு சந்தனம் உட்பட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் வீர மனோ கரிஅம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டா டப்படும். இந்த ஆண்டு திருவிழா வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்குகிறது. தொடர்ந்து கொடி மரத்துக்கு சந்தனம், பன்னீர், குங்குமம் ,விபூதி, இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷே கங்களும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறும்.
திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி காலை யிலும், மாலையிலும் சுவாமி எழுந்தருளி தெருவீதி உலா வருகின்ற நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 23-ந் தேதி அன்று திருவிழா நிறைவு பூஜை நடைபெறும். திருவிழா வில் ஆயிர க்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வீரபாகு வல்லவராயர் செய்து வருகிறார்.
+2
- சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
- 2-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது.
இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெறுகிறது.
கொடியேற்ற விழாவில் அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர்கள் பாலசுப்பிரமணியன், ரெங்கராஜ், முருகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை பெருவிழாவின் முதல் நாளான இன்று மாலை 6.30 மணியளவில் பஞ்ச மூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.
2-ம் நாளான நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணிக்கு மேல் பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெறுகிறது.
3-ம் நாளான 19-ந்தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் விநாயகர் புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு மூஞ்சுறு வாகனத்தில் விநாயகர் புறப்பாடும் நடைபெற உள்ளது.
4-ம் நாளான 20-ந்தேதி காலையில் விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலையில் மேஷ வாகனத்தில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகளுடன் சாமி புறப்பாடு நடைபெறுகிறது. மே 1-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான மே 4-ந்தேதி தீர்த்தவாரி விழாவும், மாலையில் வெள்ளி ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலையில் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது.
- வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
- முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில்.
வள்ளியூர்:
வள்ளியூர் முருகன் கோவில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
குகை கோவில்
முருக கடவுளின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையுடையது வள்ளியூர் முருகன் கோவில். இக்கோவில் குகைகோவிலாக அமைந்து ள்ளது. தென்மாவட்டங்க ளிலுள்ள குகைகோவில்களில் இத்திருத்தலம் சிறப்பு பெற்றதாகும்.
இக்கோவில் சித்திரைத் திருவிழா நாளை காலை 9.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகின்ற திருவிழாவில் தினமும் சுவாமி ,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் இரவு சிவதொண்டர் செல்வராஜின் பக்தி சொற்பொழிவு நடைபெறு கிறது. இரவு சுவாமி அம்பாளுடன் பூதம், கிளி, அன்னம், யானை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார்.
தேரோட்டம்
ஒவ்வொரு நாள் திருவிழாவும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருளுகிறார். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.
10-ம் திருவிழா இரவு சுவாமி அம்பாளுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து காட்சியளிக்கிறார். திருவிழா ஏற்பாடுகளை முருக பக்தர்கள் செய்து வருகின்றனர்.
+2
- 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது.
- திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாலாலயம்
காலை 6 மணிக்கு கொடி யேற்றம் நடைபெற்றது. கும்பாபிஷேக பணிக்காக கோபுரம், பாலாலயம் செய்ய ப்பட்டிருப்பதால் இன்றைய விழா உள்திரு விழாவாக நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
வருகிற 30-ந் தேதி காலையில் உருகுசட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் சுவாமி வீதி உலா, தேரோட்டம் நடைபெறாது. அனைத்து நிகழ்ச்சிகளும் உள்விழா வாகவே நடைபெறுகிறது.
திரிபுராந்தீஸ்வரர் கோவில்
பாளை கோமதி அம்மாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி -அம்மாள் விஸ்வரூபம் காலை சந்தி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தொடர்ந்து திரிபுராந்தீஸ்வரர் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி அம்மாள் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு கொடி மரத்திற்கும், சுவாமி-அம்பாளுக்கும், தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று முதல் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரமோற்சவத்தில் 7-ம் நாள் 63 நாயன்மார் வீதி உலாவும், 9-ம் நாள் தேரோட்டமும் நடை பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்த ர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவிழாவையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமி எழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று காலை கோவில் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்பு அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி மாலையில் சமய சொற்பொழிவும், சுவாமிஎழுந்தருளும் நிகழச்சியும் தொடர்ந்து நடைபெறும்.
வருகின்ற 10-ம் திருநாளான மே மாதம் 4-ந்தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் சுற்றுபுற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- தேரோட்டத்தின் போது தேர் வரும் ரதவீதிகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றியும், தேர் செல்லும் பாதையை செப்பனிட்டு தருமாறும் மேயரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
- தேரோட்ட பாதையினை செப்பனிட தேவையான நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாகம்பிரி யாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
மேயர் ஆய்வு
இதனையடுத்து தேரோட்ட விழா அழைப்பி தழை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் மேயர் ஜெகன் பெரிய சாமியை மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வழங்கினர். அப்போது வருகிற 3-ந்தேதி நடை பெறும் தேரோட்டத்தின் போது தேர் வரும் ரதவீதிகளில் உள்ள மணல் திட்டுக்களை அகற்றியும், தேர் செல்லும் பாதையை செப்பனிட்டும் தருமாறு மேயரிடம் கோரிக்கை விடுத்தார்கள்.
அப்போது அதனை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்த மேயர் ஜெகன் பெரியசாமி, அதற்கான பணிகளை நிறை வேற்றிட அப்பகுதிகளை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் தேரோட்ட பாதையினை செப்பனிட தேவையான நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாமன்ற உறுப்பினர் கனகராஜ், பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், வட்ட செயலாளர் கதிரேசன், மாவட்ட பிரதி நிதி ராஜ்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர், மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்த னர்.
- சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வருகிற 1-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோத்சவ திருவிழா ஆண்டு தோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சித்திரை பிரமோத்சவ திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி எம்பெருமானார் எதிர் சேவை நிகழ்ச்சியும், நேற்று கருடோத்ஸவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கருட சேவை நிகழ்ச்சியில் உற்சவர் பொலிந்துநின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார். வருகிற 1-ந் தேதி (திங்கள்கிழமை) தேர்த்திருவிழாவும், 2-ந்தேதி (செவ்வாய்கிழமை) தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பேரருளாளர் ராமானுஜ ஜீயர், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜீத், தக்கார் கோவல மணிகண்டன் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு சென்றனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நாகை நாலுகால் மண்டபத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கையில் பூந்தட்டுகளை ஏந்தியவாறு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெறுகிறது.
- சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தேரோட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
வீதி உலா
இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடந்து வருகிறது.
அதன்படி சித்திரை திருவிழா 7-ம் நாளான நேற்று இரவு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருத்ரன் அம்சத்தில் சிகப்பு சாத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு பிரம்மா அம்சத்தில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் வெள்ளை சாத்தி அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
தொடர்ந்து 8-ம் நாளான இன்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.
தொடர்ந்து வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் சுவாமி, அம்பாள் தந்த பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு நடக்கிறது.
இதில் விநாயகர், சுவாமி, அம்பாள் 3 தேர்கள் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.