என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "classroom"
- சேதமடைந்த வகுப்பறையில் சமையல் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
- குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.
திருமங்கலம்
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமம் உள்ளது. வடகரை பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. 2 ஆசிரியர்கள் உள்ளனர். 50 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதில் ஒரு ஆசிரியரும், சமையலரும் உள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையில் அங்கன்வாடி மைய சமையல் அறை இடிந்து விழுந்தது. இதனால் குழந்தைகளுக்கு சமையல் செய்ய இயலவில்லை.
இதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்குள் குழந்தைகள் படிக்கும் அறையில் தற்போது சமையல் பணிகள் நடந்து வருகின்றன. இதே போல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓட்டு கட்டிடங்கள் மழைக்கு ஒழுகத் தொடங்கியதால் மழைகாலங்களில் மாணவ-மாணவிகள் திறந்தவெளியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வடகரை பஞ்சாயத்து கவுன்சிலர் பெரியகருப்பன் கூறுகையில், அங்கன்வாடி மையத்தின் சமையல் அறை சேதம் மற்றும் பள்ளிக்கட்டிடம் மழைநீருக்கு ஒழுகுவது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளேன். பஞ்சாயத்திலும் தகவல் கூறியுள்ளேன். குழந்தைகளின் நலன்கருதி விரைவில் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றார்.
- சுல்தான்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக 2வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
- பள்ளி கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மங்கலம் :
மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சுல்தான்பேட்டை பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த வளாகத்தில் புதிதாக 2வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்புவிழா நிகழ்ச்சியானது பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.
கட்டிடத்தை மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியன்ட்மணி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ராதா நந்தகுமார், ரேவதி முருகன், நடராஜ், பால்ராஜ், ஊராட்சி செயலாளர் ரமேஷ், சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பணன், சில்வர் சி.வெங்கடாசலம், மற்றும் தி.மு.க.வை சேர்ந்த அப்துல் பாரி, கோபால், முபாரக் ராஜா, சிவசாமி, ரவி, திருமூர்த்தி, கிரிபாலு, கோவிந்தராஜ், தேவராஜ், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாணவ,மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
- அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும்.
- மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 4 மட்டுமே உள்ளது.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சி 54வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது .6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை மொத்தமாக 1975 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தற்போது 11ம் வகுப்புக்கு அட்மிஷன் நடைபெறுகிறது. இப்பள்ளியில் அரசு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம் மொத்தம் 38.இதில் பணிபுரிவோர்கள் 33.காலிப்பணியிடம் 5 உள்ளது.
அரசு உத்தரவுப்படி 40மாணவருக்கு 1 ஆசிரியர் நியமிக்கப்படவேண்டும். அப்படிெயன்றால் 50ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 33 ஆசிரியர்கள் மட்டுமே இருக்கிறார்கள். வகுப்பறைகள் இருப்பது 22.வகுப்பறைகள் தேவை 21.மேல்நிலை கல்விக்கு தேவையான இயற்பியல். வேதியியல். உயிரியல் உட்பட்ட எந்த ஆய்வகமும் இல்லை. விளையாட்டு மைதானமும் இல்லை.900க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் பெண் உடற்கல்வி ஆசிரியரும் இல்லை.மாணவிகளுக்கு தேவையான கழிப்பிடம் 10. ஆனால் 4கழிப்பிடம் மட்டுமே உள்ளது.மாணவர்களுக்கு தேவையான கழிப்பிடம் 10.ஆனால் 2 கழிப்பிடம் மட்டுமே உள்ளது. இப்படி எல்லாவற்றிற்கும் தேவை இருக்கிறது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தெரியப்படுத்தியும் இதுவரைக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பள்ளியில் வகுப்பறை, ஆசிரியர்கள் நியமனம் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பள்ளியின் வழித்தடம் ஆனது மோசமாக உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
- பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்காக 5 வருடங்களாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி இரண்டும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. தொடக்கப்பள்ளியில் 406 பேரும், மேல்நிலைப் பள்ளியில் 864 பேரும் என 1,200 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்று வட்டாரங்களில் உள்ள 15 கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளில் பயிலும் நிலையில் மேல்நிலை பள்ளிக்கு 8 வகுப்பறைகளும், தொடக்கப்பள்ளிக்கு 1 வகுப்பறை என 9 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது.
தொடக்கப்பள்ளி வகுப்பறைகள் கூரை பழுதடைந்த நிலையில் ஓடுகள் மாற்றும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வருவதால் மாணவர்களை அமரவைத்து பாடம் எடுக்க வகுப்பறை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேப்போல் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 24 வகுப்புகள் உள்ளதாகவும் ஆனால் தற்போது 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதாகவும், 2017ம் ஆண்டு 10 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணி துவங்கிய நிலையில் தற்போது வரை முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள் வகுப்பறைக்காக 5 வருடங்களாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் மாணவர்களை மரத்தடி நிழலிலும், பள்ளி கலையரங்கம் நிழலிலும் அமர வைத்து ஆசிரியர்கள் பாடமெடுத்து வருகின்றனர். அதே போல் ஒரு வகுப்பறையில் இரண்டு , மூன்று வகுப்பு மாணவர்களை அமரவைத்தும் பாடம் நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர், பள்ளி கல்வித்துறை அதிகாரி என பலரிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இதே நிலை நீடித்து வருவதாகவும் அதிகாரிகளின் கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக மாணவ மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் கைவிடப்பட்டது.
அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற அரசு பள்ளிகளில் நிலவும் நிலை பெற்றோர்கள்மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியும் காலம் கடத்தாமல் பள்ளி வகுப்பறைகளை முழுமையாக கட்டி முடித்து உடனடியாக மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர். அதேபோல் பள்ளியின் வழித்தடம் ஆனது மோசமாக உள்ளதால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே மாணவ மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் மற்றும் வழித்தடம் ஆகியவற்றை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மற்றும் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,இந்தப்பணியானது பொதுப்பணித்துறை மற்றும் நபார்டு திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களாக பணி நடைபெறாமல் இருந்துள்ளது. விரைவில் பள்ளி கட்டிடம் பணி முடிக்கப்படும் என்றனர்.
வடமதுரை:
வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் சிதிலமடைந்து காணப்பட்டது. எனவே இதனை சீரமைத்து தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மழை காலத்தில் தண்ணீர் வகுப்பறையில் தேங்கி நிற்கும் நிலை இருந்ததால் மாணவர்கள் கல்வி பயிலவும் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே இந்த கட்டிடத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் வடமதுரை ரெயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர்.
அவர்களுக்கு அந்த பள்ளியில் இருந்த ஒரு வகுப்பறை ஒதுக்கப்பட்டது. ஆனால் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாததால் இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் இன்று மாணவ-மாணவிகளுடன் பெற்றோர்களும் பழைய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய பள்ளி கட்டிடம் கட்டும் முன்பாக தகுந்த வசதியுள்ள இடத்தில் மாணவர்களுக்கு கல்வி பாதிக்காத வகையில் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.64 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமசாமி, அரூர் உதவி கலெக்டர் டெய்சி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கல்வித்துறை மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகம், சீருடைகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஒடசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் வசதிக்காக 8 புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிவறைகள் புதிதாக கட்டப்படுகின்றன. இந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் வெற்றிவேல், பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் தியாகராஜன், இளநிலை பொறியாளர் சரோஜாதேவி, கூட்டுறவுசங்கத்தலைவர்கள் மதிவாணன், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் பின்தங்கியே உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாணவ, மாணவிகளின் கற்றலில் கூடுதல் கவனம் செலுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 36 ஆண்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் அருகில் உள்ள தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேலூர் மாவட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் என 2 கல்வி மாவட்டங்கள் இருந்ததை தற்போது அரக்கோணம், ராணிப்பேட்டை, வாணியம்பாடி என கூடுதலாக 3 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளில் கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ராமன் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது பிளஸ்-2 வகுப்பறைக்கு சென்ற அவர்கள் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து, ஆசிரியை ஒருவர் வேதியியல் பாடம் கற்பித்ததை மாணவர்கள் போன்று கவனித்தனர். சுமார் 45 நிமிடம் மாணவரை போலவே கலெக்டர் பாடத்தை கவனித்தார்.
பிறகு மற்ற வகுப்புகளுக்கு சென்று மாணவ, மாணவிகளை படிக்க சொல்லியும், கற்றதை எழுத சொல்லியும் அவர்களின் கல்வித்திறனை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, வாசிப்புத்திறன் குறைவாக உள்ள மாணவ, மாணவிகள் மீது சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். அதில் ஒரு ஆசிரியை விடுமுறை எடுத்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் காலை 10 மணிக்குள் வருகை பதிவேட்டை முடிக்காததும் தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் விடுமுறை எடுத்த ஆசிரியை ஆகிய 2 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் மார்சுக்கு, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.
மேலும் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னோடி மாவட்டமாக மாற்ற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். #vellorecollector #collectorraman
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்