என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "coastal areas"
- பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது.
- அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக புகுந்த தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
"சாகர் கவாச்" என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும் இந்த ஒத்திகை பின்னர் அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பாதுகாப்பு ஒத்திகை தமிழகம்-புதுவையில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையை கடலோர காவல் படையினர், உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு படையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தீவிரவாதிகள் போல மாறுவேடத்தில் ஊடுருவும் நபர் களை உள்ளூர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் மடக்கி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவே பாதுகாப்பு ஒத்திகையின் சாராம்சமாகும்.
இதன்படி தீவிரவாதிகள் போல வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழையும் போலீசாரை பாதுகாப்பு படையினர் பல இடங்களில் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை வேட்டையின் போது கவனக்குறைவாக செயல்படும் காவலர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை பாயும் என்பதால் மிகுந்த எச்ச ரிக்கையோடு போலீசாரும், பாதுகாப்பு படையினரும் செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னை
சென்னையில் மெரினா உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் சுற்றுலா கடற்கைரை பகுதிகள், காசிமேடு உள்ளிட்ட மீன்பிடி கடற்கரை பகுதிகள் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இதனை நாளை மாலை வரை நீட்டிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று சென்னையை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகள் அனைத்திலும் அதிகாரிகளும், போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்
மாமல்லபுரம், கல்பாக்கம் கடற்கரை பகுதிகளிலும் தீவிர சோதனை நடந்தது. கல்பாக்கம் அணுமின் நிலையம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் தாக்குதல் நடத்த மீனவர்கள் போன்று வேடமிட்டு வந்த போலீசாரை பாதுகாப்பு படையினர் மடக்கி பிடித்தனர்.
இதேபோல் கடலோர காவல் படையினர், போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் படகில் சென்று சந்தேகப்படும் நபர்கள் படகில் வருகிறார்களா? எனவும் கண்காணித்தனர். கோவளம், திருவிடந்தை, மாமல்லபுரம் புறவழிச் சாலை, பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், வாயலூர் பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகையில் மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் 89 போலீசார், 20 கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை-தூத்துக்குடி
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன் வளத்துறை, வருவாய்த்துறை யினரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் மேற்பார்வையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
நாகை மாட்டம்
நாகை மாவட்டம், வேதா ரண்யம் கடலோர பகுதி களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்ப வனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிரா மங்களில் டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலோர பாதுகாப்பு படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வை யில் நடத்தப்படும் இந்த பாதுகாப்பு ஒத்திகையில் தமிழக போலீசார் 8,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு படகுகள் மூலம் கடலுக்குள் சென்றனர்.
- இன்று சாகர் கவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் சாகர் கவாஜ் என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு போலீசாரின் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தொடங்கியது.
கூட்டு பாதுகாப்பு ஒத்திகை
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் டி.எஸ்.பி. பிரதாபன், இன்ஸ்பெக்டர் சைரஸ், தலைமையில் பாதுகாப்பு குழும போலீசார் தூத்துக்குடி புதிய துறைமுகம் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு படகுகள் மூலம் கடலுக்குள் சென்றனர்.
இந்த ஒத்திகையில் கடலோர காவல் படை, இந்திய கடற் பாதுகாப்பு படை, கியூ பிரிவு, உளவுப்பிரிவு , மத்திய தொழில் பாதுகாப்பு படை உட்பட போலீசார் கலந்து கொண்டு கூட்டு பாதுகாப்பு ஒத்திகை, தீவிரவாத தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு கொள்கின்றனர்.
கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடலோர மாவட்டங்களில் ஆப்ரேஷன் அம்லா, சுரக்சா, ரக்சாக், சாகர் கவாஜ், சிவிஜில் உள்ளிட்ட பெயர்களில் போலீசாரின் கூட்டு பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று சாகர் கவாஜ் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி உள்ளது. இந்த ஒத்திகை நாளை ( புதன் கிழமை) மாலை வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.
வேதாரண்யம்:
இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் இணைந்து சாகர் கவாச் (கடல்கவசம்) பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதியில் இன்று தொடங்கியது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
அதன்படி, ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து படகு மூலம் கடலுக்கு சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலுக்கு செல்லும் வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரையும் கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த பாதுகாப்பு ஒத்திகயைானது இன்றும், நாளையும் (2 நாட்கள்) கடலோர பகுதிகளில் நடைபெற உள்ளது.
- ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
- இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது.
அம்மாப்பேட்டை:
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடியை எட்டியது.
இதனால் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக குறைந்தது. இதனால் காவிரி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்த நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா மாநில ங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை க்கு சுமார் 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு மேல் உள்ளதால் அணைக்கு வரும் தணணீர் அப்படியே திறந்து விடப்பட்டு வரு கிறது. இதனால் ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதி மக்களுக்கு அதிகாரிகள் வெள்ள அபாய எச்ரிக்கை விடுத்துள்னர்.
இதனால் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பேரூராட்சி துறை மற்றும் வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக திறந்து விடப்படும் உபரி நீர் செக்கானூர் கதவணை, நெரிஞ்சிப்பேட்டை கதவணை, கோனே–ரிப்பட்டி உள்ளிட்ட கதவணைகளில் அப்படியே வெளி யேற்றுவார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு நெரிஞ்சிப்பேட்டை தேர்வீதி,பெருமாள் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் திடீரென வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் வெளியேறி காவிரி ஆற்றை பார்த்தனர்.
அப்போது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது நெரிஞ்சிப்பேட்டை கதவணை திறப்பது வழக்கம். ஆனால் கதவணையில் தண்ணீர் திறக்கப்படாதது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக அந்த பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அந்தியூர் தாசில்தார் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தாசில்தார் கதவணை மின்நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து பின் கதவுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஊருக்குள் புகந்த தண்ணீர் வடிய தொடங்கியது . இதனால் நெரிஞ்சிப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறும் போது, மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் கூட தண்ணீர் அதே மட்டத்தில் தான் செல்லும். ஆனால் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வரும் பொழுது வீதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
உடனடியாக நெரிஞ்சி ப்பேட்டை கதவணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்படாதால் தான் தண்ணீர் ஊருக்குள் போகிறது என்று அறிந்த பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கூறினோம்.
உடனடியாக அதிகாரிகள் கதவுகளை திறந்ததால் ஊருக்குள் போகும் தண்ணீர் வடிய தொடங்கியது. காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்படும் காலங்களில் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதே போல் தண்ணீர் அதிகளவு செல்வதால் பவானி புது பஸ் நிலையம் பகுதி, மார்க்கெட் பகுதி, கூடுதுறை காவிரி ஆற்றிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதையொட்டி காரையோர பகுதிகளில் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஈரோடு அக்ரகாரம் பேரேஜ், கருங்கல் பாளையம், வெண்டி–பாளையம், கொடிமுடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்