search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector warns"

    • உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • விவசாயிகள் உரம்கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் குறித்த புகார்கள் தேனி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகளின் விருப்பம் இன்றி உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தேனி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா 1021 டன், டி.ஏ.பி 466 டன், பொட்டாஸ் 642 டன், சூப்பர் பாஸ்பேட் 363 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2844 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தனியார் உரக்கடைகளில் விவசாயிகளின் விரும்பம் இன்றி உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. மானிய விலை உரங்களை விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பயிர்சாகுபடி பரப்பளவிற்கு ஏற்ப உரங்களை பரிந்துரை செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

    இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரம்கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் குறித்த புகார்கள் தேனி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முல்லைபெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 166 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
    • முல்லைப் பெரியாற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றுக்கு செல்லக்கூடாது என்று ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது.

    மேலும் முல்லைப் பெரி யாறு அணைப்பகுதியில் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்துவினாடிக்கு 2 ஆயிரத்து 166 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் சுருளி அருவியில் இருந்து வரும் தண்ணீர் நீர்நிலைகள் நிரம்பி வருகின்ற தண்ணீர் என அனைத்தும் முல்லைப் பெரியாற்றில் கலக்கின்றன.இதனால் ஆற்றில் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் அர்சுணன் தலைமையில் துணை தாசில்தார்கள் கண்ணன், முருகன் மற்றும் வருவாய் துறையினர் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள், நகராட்சி ஆகிய பகுதி மக்கள் யாரும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றுக்கு செல்லக்கூடாது என்று ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை உத்தம பாளையம் தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறையினர் உத்தமபாளை யம் முல்லைப் பெரியாற்று தடுப்பணை,கம்பம், காமயகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்ப ட்டி,கூடலூர் என முல்லைப் பெரியாறு ஆற்றங்கரை யோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை கடைவீதியில் உள்ள வணிக வளாகங்கள், சில்லறை விற்பனை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், பழக்கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் சென்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதை தொடர்ந்து கலெக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேருராட்சிகளில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீதும், விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலெக்டர் வழங்கினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமசுப்பு, உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், வணிகர்கள், பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கலெக்டர் ராமன் எச்சரித்தார். #Plasticban
    வேலூர்:

    தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், தயாரிக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் மேகராஜ், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர் பாரதிதாசன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதவாது:-

    பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து பொதுமக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க வேண்டும்.

    துணி பைகள், காகித உறை போன்ற மக்கும் பிளாஸ்டிக் பொருட்களையே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு யாரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, விற்பனை குறித்து தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரித்தார். #Plasticban

    ×