என் மலர்
நீங்கள் தேடியது "college students"
- கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. கொலை திட்டத்தை அரங்கேற்றிய பின்னர் கொலையாளிகள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி செல்லும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.
இதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ரவுடி வசூல்ராஜா கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி வசூல்ராஜா 2 கல்லூரி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பெண் தொடர்பாகவும் அவர் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த தகராறில் கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்களுக்கு பின்னால் ரவுடி கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பின்னர் அவரது இடத்தை பிடிக்க ரவுடிகளிடையே தொடர்ந்து மோதல் மற்றும் கொலைகள் அரங்கேறி வந்தன. எனவே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு அல்லது வசூல் ராஜாவால் தீர்த்து கட்டப்பட்டவர்களின் கூட்டாளிகள் திட்டமிட்டு இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களிடம் முழுமையாக விசாரணை முடிந்த பின்னரே வசூல்ராஜாவின் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
- கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டியும் கலைநிகழ்ச்சி நடத்தினர்.
முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்கினார். மேலும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களான துணிப்பைகள், வாழை இலை, காகித குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.நெகிழிப் பொருட்கள், மண் வளத்தை கெடுத்து விடும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் சபதம் எடுப்போம் என்று பேசினார். பிறகு மாணவச் செயலர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் இளம் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
- வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் தலைமை நீதிபதி செல்வநாதன், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில் குமார், புதுவை தொழிலாளர் நீதிபதி ஷோபனாதேவி, முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- கூடுதல் போதைக்காக கஞ்சாவுடன் மாத்திரைகள் கலந்தனர்.
- 2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.
சூலூர்,
சூலூர் மற்றும் நீலாம்பூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் பலர் தனியாக வாடகை எடுத்து தங்கி உள்ளனர்.
2 மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் நபர் ஒருவர் 3 பேர் அங்குள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் ஒருவரின் நண்பர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து இந்த அறையில் தங்கினார்.
சென்னையில் இருந்த வந்த நபர், வரும்போதே கஞ்சா பொட்டலங்களுடன் வந்துள்ளார். இதையடுத்து சென்னை வாலிபரும், அவரது நண்பரும் சேர்ந்து கஞ்சா பிடித்துள்ளனர்.
இதைபார்த்த அறையில் இருந்த மற்ற 2 பேர் வெளியில் எழுந்து ெசன்று விட்டனர்.
பின்னர் இரவில் அறைக்கு வந்தனர். அப்போது அங்கு ஏற்கனவே இருந்தவர்களுடன் மேலும் 2 பேர் இருந்ததை கண்டதும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே 2 பேரும் நமது அறைக்கு வெளியாட்களை ஏன் அழைத்து வருகிறீர்கள் என கேட்டார். போதையில் இருந்த 4 வாலிபர்களும் ஆத்திரத்தில் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மேலும் சென்னை வாலிபர் தான் கொண்டு வந்த கஞ்சாவை எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு, அதனுடன் சோடா, கூல்டிரிங்ஸ், மாத்திரைகளை போட்டு பாட்டில் பக்கவாட்டில் ஒரு சிறிய குழாயை சொருகி அதனை உறிஞ்சினர்.
பின்னர் கல்லூரி மாணவரையும், அவரது நண்பரையும் உறிஞ்சுமாறு அடித்தனர். அவர்கள் என்னவென்று கேட்டபோது, இது கஞ்சா தேவாமிர்தம் என பதில் அளித்துள்ளனர். இதனால் அவர்கள் புகைக்க மறுத்தனர். இதனால் கோபம் கொண்ட 4 பேரும் மீண்டும் அவர்களை தாக்கினர்.
இதனால் பயந்து போன கல்லூரி மாணவர், அதனை புகைத்தார். இதில் அவர் மயக்கமானார். ஆனால் அவரது நண்பர் ெதாடர்ந்து மறுத்தார். இதனால் போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 4 வாலிபர்களும் சேர்ந்து கல்லூரி மாணவரின் நண்பரை சரமாரியாக தாக்கியதுடன், அவரது ஆடைகளையும் களைந்து நிர்வாணமாக்கினர்.
பின்னர் அந்த வாலிபரை பல்வேறு கோணங்களில் புகைப்படமும் எடுத்தனர். மயக்கம் அடைந்த கல்லூரி மாணவரின் கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு மேலும் பணம் வேண்டும் என கேட்டு மிரட்டினர்.
பின்னர் அங்கிருந்து 4 பேரும் வெளியில் சென்று விட்டனர்.
இந்த நிலையில் காயம் அடைந்த கல்லூரி மாணவரும், அவரது நண்பரும் நடந்த சம்பவங்கள் குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அவர்கள் இங்கு வந்து, அவர்களுடன் தங்கி மற்ற வாலிபர்களுடன் சேர்ந்து தாக்கிய மற்றொரு கல்லூரி மாணவரை பிடித்து சூலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அறையில் சோதனை மேற்கொண்டு அங்கிருந்து கஞ்சா மற்றும் தேவாமிர்தத்தின் மிச்சம், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர்.
- செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர்.
சங்கரன்கோவில்:
கிள்ளிகுளம் வோளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். கல்லூாி முதல்வர் தேரடிமணி தலைமையில் பேராசிாியர்கள் தாமோதரன், செந்தில்நாதன், இணை பேராசிரியர்கள் கோமதி, குமாா் ஆகியோா் மாணவர்களை வழிநடத்தினர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் புன்னைவனம் கிராமத்தில் விவசாயிகளுக்கு உழவன் செயலி பற்றி செயல் விளக்கம் அளித்தனர். இந்த செயலியின் பயன்பாடுகள் குறித்து, அதில் பதிவு செய்யும் முறை குறித்தும் விவரித்தனர். அந்த செயலியின் கருவிகளான மானியத் திட்டங்கள், உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வானிலை முன் அறிவிப்பு போன்றவற்றை குறித்து விவரித்தனர். இந்த செயலியின் செயல்பாடுகள் பற்றியும், பயன்பாடுகள் பற்றியும் மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிாியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோா் விவரித்தனர்.
- அதிவேகமாக வாகனம் ஓட்டிச்சென்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர்.
- தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.
மதுரை
மதுரை மாநகரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில் நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய 2 திரைப்படங்கள் நேற்று வெளியாகி உள்ளன. இதனை பார்ப்பதற்காக ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தியேட்டருக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சினிமா ரசிகர் மன்றங்களை சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அதிவேகமாக செல்வதாக போலீசாருக்கு புகார் வந்தது.
போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் விதிமுறை களை மீறி செல்வோரை கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் (பொறுப்பு) ஆறுமுகம் சாமி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில், தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை யில் தனிப்படை அமைக்கப் பட்டது.
அவர்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள். ரிசர்வ் லைன், ஆத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 5 பேர் பிடிபட்டனர். அப்போது அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் ஆகியவை பறி முதல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள் கோசாகுளம், பெரியார் நகர் வல்லரசு (வயது 33), ஆனையூர் குமார் மகன் அருண் பாண்டியன் (23), கோசாகுளம், பாண்டியன் நகர் கண்ணன் மகன் வருண் பாலாஜி (24), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் நசீர் உசேன் மகன் முஜிபுர் ரஹ்மான் (19) மற்றும் தபால் தந்தி நகர், பார்க் டவுன் ஆதிஸ்வரன் மகன் சிவபாலன் (23) என்பது தெரியவந்தது. அவர்களை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மதுரை கட்ட பொம்மன் நகர் சந்திப்பு முதல் 50 அடி ரோடு வரை அதிவேகமாக வாகனம் இயக்கியதாக, 3 மோட்டார் சைக்கிள்களை செல்லூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை குருவிக்காரன் சாலை சினிமா தியேட்டர் முன்பு அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதாக சிம்மக்கல், அபிமன்யு தெரு கருப்பையா மகன் சந்தோஷ் (19), கே.கே.நகர், பாரதியார் தெரு ராமலிங்கம் மகன் கவுரவ் (20) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரை குருவிக்காரன் சாலை ஆஸ்பத்திரி அருகே அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக அய்யர் பங்களா, அய்யாவு நகர் சிதம்பரம் மகன் தீபக் (24), தல்லாக்குளம் பச்சைக்கிளி மகன் சூர்யா (21) ஆகிய 2 பேரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர்.
- மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
- தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அந்த பகுதியில் தங்கள் வாகனங்களை நிறுத்தி உள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் கண்டித்து உள்ளனர்.
இது தொடர்பாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது.
இந்த தாக்குதலில் மாணவர்கள் 13 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- கல்லூரி மாணவர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது என எடுத்துரைத்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கல்லூரி மாணவர்கள் நாட்டு நல பணித்திட்டத்தின் கீழ் பொன்னேரி அடுத்த வேண்பாக்கத்தில் உள்ள தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்து வீடு வீடாக சென்று குப்பைகளை தெருக்களில் போடக்கூடாது எனவும் குப்பைத்தொட்டியில் போட வேண்டும் எனவும் எடுத்துரைத்தனர்.
பின்னர் அதே பகுதியில் புவி வெப்பமயமாதலை தடுக்க ஒரே நேரத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு துணைத் தலைவர் சபிதா பாபு ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- மாநில கல்வி கொள்கை குறித்து தெக்கூர் கல்லூரி மாணவர்களிடம் நீதிபதி கருத்துகளை கேட்டறிந்தார்.
- இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
தமிழக அரசு மாநில அளவில் புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மாநில கல்விக்கொள்கை கருத்துருவை தயாரிப்பதற்கான குழுவை நியமித்துள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் தலைவர்-முன்னாள் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முருகேசன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அ.தெக்கூரில் உள்ள சிங்கை சித்தர் அய்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வருகை புரிந்து மாணவ, மாணவிகளை சந்தித்து தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையை பற்றி கருத்துக்களை கேட்டறிந்தார்.
கிராமப்புறத்தில் அமைந்துள்ள இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் தற்போது நடைமுறையில் உள்ள கற்றல், கற்பித்தல் முறைகள், தேர்வு முறைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர். மேலும், மாணவர்களுடன் கலந்துரையாடிய போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தற்போது நடைபெற்று வரும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள், பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள், ஆசிரியர் -மாணவர் உறவு முறை ஆகியவற்றில் உள்ள சிக்கல்களை எவ்வாறு கையாள்வது?, பாடங்களை புரிந்து படித்து தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது என்ற வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கருத்துக்களை நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் கல்லூரி ஆசிரியர்களுடன் கலந்துரையாடி மாணவர்களின் கல்வி தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து அறிவுரை வழங்கி, கல்லூரி நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடி கல்லூரி நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது?, கல்லூரியின் தரத்தை முன்னேற்றம் அடையச்செய்வது பற்றி ஆலோசனை வழங்கினார்.
இதில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
புகை பிடிக்காத தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் திருப்பூர் ரெயில் நிலையமும் இணைந்து ரெயில் நிலையத்தில் புகை பிடிக்காத தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார், நிலைய துணை மேலாளார் (பொறுப்பு) மகேஸ்வரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதன்மை வணிக ஆய்வாளர் சரவணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேலம் கோட்ட பயணிகளின் ஆலோசக குழு உறுப்பினர் சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.
மாணவச் செயலர்கள் சுந்தரம், காமராஜ், பூபாலன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகை என் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, இதனால் அருகாமையில் இருப்பவர்க ளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்வேன் போன்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
- போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி வருகிற 27-ந் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிரப்பி முதல்வர், துறைத்தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே ஒரு கல்லூரியில் இருந்து பங்கேற்க முடியும். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் மொத்த பரிசு தொகையாக ரூ.66 ஆயிரம் காசோலையாக வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- 5 இடங்களில் கத்தி குத்து விழுந்தது.
- கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் ராயபுரம் அணை மேடு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் விஜய் (வயது 24). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிகரன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால் அடிக்கடி இருவரும் மோதிக் கொண்டு ள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு விஜய் சூசையாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது அவரு க்கும் ஹரிஹரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ஹரிஹரன் நண்பர்களும் சேர்ந்து விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு 5 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கல்லூரி மாண வர்கள் ஹரிஹரன்(23), பிரகதீஸ்வரன்(21), ஸ்ரீநிவாஸ் (19), கவுதம் (21), ஹரிஷ் (19) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.