என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "crane accident"
- ராட்சத கிரேன் சரிந்த விபத்தில் 2 தமிழக என்ஜினீயர்களும் உயிரிழந்தனர்.
- விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, மாநில முதல் மந்திரி இழப்பீடு அறிவித்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் நேற்று திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளை அகற்றி பலரை பிணமாக மீட்டனர். இதில் என்ஜினீயர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 20 பேர் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த என்ஜினீயர்கள் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதில் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சந்தோஷ்(36). மற்றொரு என்ஜினீயர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன்(23) என்பது தெரிய வந்தது. விபத்து குறித்த தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.
விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் 2 ஒப்பந்ததாரர்கள் மீது சகாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காயமடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000ம் வழங்கப்படும்.
- விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.
இங்கு, இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மகாராஷ்டிராவிற்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், ராட்சத இயந்திரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே ஆகியோர் இழப்பீடு அறிவித்துள்ளனர்.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, அம்மாநில முதல்வர் ஷிண்டே இறந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் தமிழக மாணவர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாணவர் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கோகுல்நாத் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாவட்ட தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான அ.மா.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளரும் கைனூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோ.உமாமகேஸ்வரி, மாணவர் சங்கம் மாநில செயலாளர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் உடனடியாக தமிழக பாட்டாளி மாணவர் சங்கம் அமைப்பை உருவாக்க வேண்டும்
தனியார் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணத்தை அரசு நிர்ணயித்த அளவை மீறி அதிகமாக வசூல் வேட்டை செய்வதை பாட்டாளி தமிழக மாணவர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கார்த்திக் நன்றி கூறினார்.
- குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் சிக்கினர்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் பண்டிகை முடிந்து, கடந்த 22 -ந் தேதி இரவு மயிலேறு திருவிழா நடைபெற்றது.
இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கிரேன் மூலமாக தொங்கியபடி வந்து, அம்மனுக்கு மாலை அணிவிக்க வந்தனர்.
அப்போது, கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் பெரப்பேரி காலனியை சேர்ந்த சின்னசாமி (வயது 73), கீழ்வீதி ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த முத்துகுமார் (42), கீழ்வீதியைச் சேர்ந்த ஜோதிபாபு (17), கீழ்ஆவாதம் பகுதியைச் சேர்ந்த பூபாலன் (48) ஆகியோர் இறந்தனர்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரேன் டிரைவர் பனப்பாக்கத்தை சேர்ந்த முருகன் என்பவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.
மேலும், இந்த வழக்கில் கிரேன் உரிமையாளர் அருண் (27) மற்றும் விழாக்குழுவினர் சதீஷ் (21), படையப்பா (24), ராமதாஸ் (32), கண்ணன் (28), கலைவாணன் (26) ஆகிய 6 பேர் தேடப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயிலேறு நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- கிரேன் விபத்து தொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரோக்கணம் நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் பணப்பாக்கத்தை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கிரேன் விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும்.
நெமிலி:
வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி மற்றும் ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் வேலூர் அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் கிரேன் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
பின்னர் டி.ஐ.ஜி. முத்துசாமி கூறுகையில்:-
இதுபோன்ற விபத்துக்கள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க கிரேன் போன்றவற்றை பயன்படுத்த தடை விக்கப்படும்.
மக்கள் அதிகமாக கூடும் திருவிழா போன்ற இடங்களில் அவசர சிகிச்சை ஊர்தியும் மருத்துவ குழுவும் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தார்.
- கதிர், சின்னசாமி ஆகியோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
- விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி கீழவீதி கிராமத்தில் மாவடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் மயிலார் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலகு குத்தி வந்தனர்.
அப்போது கிரேனில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கிரேனில் பக்தர்கள் பறந்து வந்தபோது மேடு பள்ளமான இடத்தில் நிறுத்தப்பட்டதால் திடீரென கிரேன் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழவீதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜோதி பாபு (வயது 17) கீழே விழுந்து இறந்தார்.
மேலும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து (42) அருகே நின்று ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் ஆகியோர் மீது கிரேன் விழுந்ததால் சம்பவ இடத்தில் இறந்தனர்.
இதனைக் கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் திருவிழா கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் திருத்தணியை சேர்ந்த கதிர் (19), பெரப்பேரியை சேர்ந்த சின்னசாமி ஒரு பெண் குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். நெமிலி போலீசார் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் கதிர், சின்னசாமி ஆகியோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் சின்னசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்கள் அரக்கோணத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- அரக்கோணம் நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடந்துவருகிறது.
- கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
அரக்கோணம்:
நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்