என் மலர்
நீங்கள் தேடியது "dead"
- தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
- 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார்.
பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வந்த இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சல் பிரதேசம் மாநிலம் குல்லு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவில், குலுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே மரங்கள் வேரோடு சாய்ந்ததில் 6 பேர் இறந்தனர்.
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை மீட்டு மாவட்ட நிர்வாகத்தின் காவல்துறை மற்றும் மீட்புக் குழுக்கள் ஜாரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குலு துணைத் தலைவர் அஸ்வனி குமார் தெரிவித்துள்ளார்.
- திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
- வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
- 76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.
பிரபல நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
1980-களில் ரஜினி, கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு என முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவையில் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ்.
இவர் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. தொடர்ந்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
76 வயதான நடிகை பிந்து கோஷ், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நடிகை பிந்து கோஷ் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
- தெப்பக்குளத்தில் பிணமாக கிடந்தவர் யார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார்.
மதுரை
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தியாகராஜர் மாடல் பள்ளி எதிரில் நேற்று (11-ந் தேதி) காலையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வலது முழங்காலின் கீழ் பழைய காயத்தழும்பும், இடது முழுங்காலில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது.
ஆரஞ்சு கலர் முழுக்கை டி-சர்ட்டும், கருப்பு டவுசரும் அணிந்திருந்தார். இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் ராமநாதன் கொடுத்த புகாரின்பேரில் தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கினார்.
- 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்டு கோஸ்டிலுள்ள கேளிக்கை விடுதி அருகே தரையிலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், தரையிறங்க வந்து கொண்டிருந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதியது.
ஒரு ஹெலிகாப்டரை அதன் விமானி சாதுர்யமாக மணற்பரப்பில் தரையிறக்கிய நிலையில், மற்றொரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.
அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான்.
- பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ். இவரது குடும்பம் மற்றும் உறவினர்களின் குடும்பம் என மொத்தம் நான்கு குடும்பத்தினர் நேற்று முன்தினம் பெரியபாளையம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த வந்தனர்.
இதனால் இவர்கள் கோவிலுக்கு எதிரே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் தங்கி இருந்தனர். நேற்று சுவாமி தரிசனம் செய்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
இந்நிலையில், நேற்று மாலை இவர்கள் தங்கியிருந்த விடுதியின் காம்பவுண்ட் சுவர் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த விடுதியில் இருந்த காம்பவுண்டின் இரும்பு கேட் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் 5ம் வகுப்பு படித்து வந்த நித்திஷ் (வயது10) என்ற சிறுவன் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்தது.
இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சிறுவன் நித்திஷ் உயிருக்கு போராடினான். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக சிறுவன் பலியானான். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், பலியான சிறுவனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த தனியார் தங்கும் விடுதி காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து தனியார் தங்கும் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குடும்பத்தினர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
நேர்த்தி கடனை செலுத்த கோவிலுக்கு வந்த குடும்பத்தினரின் சிறுவன் ஒருவன் பலியான சம்பவம் பெரியபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அறந்தாங்கி அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த மாணவன் பிணமாக மீட்கபட்டான்
- தஸ்லீம் நீரோட்ட பகுதியில் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பைசல்கான் (வயது19), இவரது நண்பர்களான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முசாமைதீன், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் தஸ்லீம் (17), ஹரிஸ் (17), இவர்கள் 4 பேரும் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். தஸ்லீம் உட்பட 3 பேரும் பொங்கல் பண்டியையை கொண்டாடவும், கடற்கரை பகுதியை சுற்றி பார்க்க கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள தனது நண்பரான முகமதுபைசல்கான் வீட்டிற்கு 15-ந் தேதி வந்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டைப்பட்டினத்தில் உள்ள பைசல்கான் வீட்டில் ஒன்று சேர்ந்த நண்பர்கள் 4 பேரும், அருகே உள்ள மணமேல்குடி கோடியக்கரை கடல் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு நீரோட்டம் நிறைந்த பகுதி என்று அறியாத அவர்கள் தொடர்ந்து கடலின் உள்பகுதியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது தஸ்லீம் நீரோட்ட பகுதியில் சிக்கி கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதனை பார்த்து பதறிய நண்பர்கள் காப்பாற்ற சொல்லி கதறியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து படகின் மூலம் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட தேடுதலுக்கு தஸ்லீம் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து மணமேல்குடி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி நண்பர் வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- கொலையா என்று போலீசார் விசாரணை
- ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கரூர்:
கரூர் திண்டுக்கல் இடையே செல்லும் ெரயில் பாதையில் சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் கரூர் ரயில்வே உதவி ஆய்வாளர் கேசவன் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இறந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றார்களா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வாலிபரின் கையில் விக்கி, கௌசி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
- ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
- ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தாரமங்கலம்,:
தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த விவசாயி வெள்ளைய கவுண்டர் (வயது 70). இவர் வீட்டில் 10 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார், நேற்றுமுன்தினம் வழக்கம் போல் ஆடுகளை இரவு வீட்டிற்கு வெளியே கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார், பிறகு அதிகாலை நான்கு மணியளவில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெள்ளைய கவுண்டர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார், அப்போது ஆடுகள் கழுத்து, தொடை ஆகிய இடங்களில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்து துடி துடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கம் உறவினர்களை அழைத்து பார்த்த போது ஏற்கனவே நான்கு ஆடுகள் இறந்து விட்ட நிலையில் மூன்று ஆடுகள் பலத்த காயங் களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளை காப்பாற்ற வேண்டி அமரகுந்தி அரசு கால்நடை மருத்துவர்களுக்கு கொடுத்த தகவளின் படி சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர், சம்பவம் குறித்து கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.
- சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
- இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் சாந்தி(வயது 42). டைலர். இவரது தங்கை தங்கமணி(38). இவர்கள் இருவரும் குமார பாளையம் வந்து விட்டு, ஊருக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர்.
சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.
சாந்தி படுகாயங்களுடன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- தூரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடந்து விடலாம் என வேகமாக சென்றனர்.
- அதிவேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் மோதியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஆத்ம குரு பஸ் நிலையம் அருகே சுரங்க ரெயில் பாதை உள்ளது.
சுரங்க ரெயில் பாதையில் நேற்று நள்ளிரவு 1 பெண், 2 ஆண்கள் தண்டவாளத்தை கடந்தனர்.
அப்போது தர்மாவரத்தில் இருந்து நர்சாபூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டு இருந்தது.
தூரத்தில் ரெயில் வருவதை கண்ட 3 பேரும் தண்டவாளத்தை கடந்து விடலாம் என வேகமாக சென்றனர்.
அதிவேகத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கண்ணிமைக்கும் நேரத்தில் 3 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பெண் மட்டும் ரெயில் சக்கரத்தில் சிக்கி நீண்ட தூரம் இழுத்து செல்லப்பட்டு உடல் துண்டாகி இறந்தார்.
இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு உடனடியாக ரெயில் நிலைய போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயில் மோதி இறந்த 3 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் நள்ளிரவில் எதற்காக தண்டவாளத்தை கடந்தார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.