என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "deputy mayor"
- நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு கரிய மாணிக்க பெருமாள் வீதி. வடக்கு மாடவீதி, தெற்கு மாட வீதி ஆகிய பகுதிகளில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி கவுன்சிலர் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் மகேஸ்வரி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் பேரின்பம், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, அனார்கலி, மாரியப்பன் மற்றும் கோவில் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் வக்கீல் பாலாஜி, சீனிவாசன் ராம புத்திரன், ஆறுமுகம், நையன்சிங் மற்றும் தி.மு.க. பிரமுகர் அப்துல் சுபஹானி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது.
- நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டில் உள்ள விக்னேஷ்வராநகர் மெயின் வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ், ரூ.14.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன், உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அன்பு பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், செல்வராஜ், பாஸ்கர், மேனன், குமார், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- நெல்லை மாநகராட்சி தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட 1-வது வார்டில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணி களை மேற்கொண்டு வருகிறார்.
- அவரது சொந்த வார்டில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட 1-வது வார்டில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கடந்த 2 நாட்களாக ஆய்வுப் பணி களை மேற்கொண்டு வருகி றார்.
அவரது சொந்த வார்டில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், கோரிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று இந்திராநகர், செல்வ விக்னேஷ் நகர், கணபதி மில் காலனி, மல்லிகை தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண் டார். அந்த பகுதியில் குடியி ருக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட வசதிகளை கேட்டறிந்தார். பின்னர் சாக்கடை நீர் தொய்வின்றி செல்வதற்கு ஏதுவாக வாறுகால்கள் அமைக்கும் பணி, புதிதாக வாறுகால் தேவைப்படும் இடங்கள் உள்ளிட்டவைகளை துணை மேயர் ராஜு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு பணியின் போது உதவி ஆணையாளர் வாசுதேவன், உதவி செயற்பொறி யாளர் லெனின், உதவி பொறியாளர் நாகராஜன், மேஸ்திரி ஜானகிராமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது.
- நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும்
கடலூர்:
கடலூர் அருகே சுப்ரமணியபுரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றியது சம்பந்தமாக குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. கடலூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி இன்று காலை துணை மேயர் தாமரைச்செல்வன் குறிஞ்சிப்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ஆஜராகி ஜாமீன் பெற்றார். இதனை தொடர்ந்து நாளை முதல் 15 நாட்களுக்கு குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது வக்கீல்கள் திருமார்பன், திருஞானமூர்த்தி, குணசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது.
- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார்.
திருப்பூர் :
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 37-வது வார்டு பகுதியான குமரப்பபுரத்தில் நடந்தது. இதற்கு வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சிறப்பு பார்வையாளராக கலந்துகொண்டார். இதில் 37-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து முடிந்த பணிகள் மற்றும் நடைபெற இருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட துணை மேயர் கே.எம். பாலசுப்பிரமணியம் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
37-வது வார்டில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நான்காவது கூட்டு குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகள் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும். அதேபோல் சாக்கடை கால்வாய், சுகாதாரம்என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ்குமார், 54-வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், சி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
- இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
ஈரோடு, அக்.31-
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார்.துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருள் குறித்து விளக்கி பேசினார். பின்னர் 30 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும், பேசிய 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆதி பேசும் போது, தனது வார்டில் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்.
இதனால் அவருக்கும் மேயர் நாகரத்தினம், துணைமேயர் செல்வராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நிதி இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் முக்கிய பணிகளை செய்து வருவதாக மேயர் விளக்க மளித்தார்.
இதனை ஏற்காமல் தொடர்ந்து கவுன்சிலர் ஆதி வாக்கு வாதம் செய்து கொண்டிருந்ததால் ஆவேசமடைந்த மேயர், தனது இருக்கையில் இருந்து எழுந்து கவுன்சிலர் இருக்கைக்கு சென்று அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து சமாதான ப்படுத்தினார்.
மற்ற கவுன்சிலர்களும் சமாதானப்படுத்தினர். இதனால் மாநகராட்சி கூட்டரங்கில் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநகராட்சியில் ஒப்பந்த பணிகளை தனியாருக்கு விடும் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தீர்மானம் கொண்டு வர கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
அப்போது மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது, வார்டை நான்காக பிரிப்பது குறித்து எங்களுடன் கலந்தோசி க்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களையும் அந்த குழுவில் இடம் பெற செய்ய வேண்டும். அப்போதுதான் வளர்ச்சிப் பணி தங்கு தடை இன்றி நடைபெறும் என்றார்.
மேலும் தூய்மை பணியாளர்கள் அவர்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். தனியார் மயமாக்கு வதை கைவிட வேண்டும் .
அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
அப்போது பேசிய ஆணை யாளர் சிவக்குமார் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இது குறித்து அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
இதனை ஏற்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்யாமல் சபை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்றனர்.
36-வது வார்டு கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் பேசும்போது, என் வார்டில் நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது.
அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என் வார்டில் குண்டும் குழியுமாக ரோடுகள் காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
அதனைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என்றார்.
இதேப்போல் 43- வது வார்டு கவுன்சிலர் சபுராமா சாதிக் பேசும்போது, என்னுடைய வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். இதேபோல் மற்ற மாநகராட்சியில் குப்பை வரி எடுக்கப்பட்டுவிட்டது.
இதனால் சொத்து வரி வசூல் பாதிக்கப்படுகிறது.
எனவே நமது மாநகராட்சியில் குப்பை வரி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதேபோல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டியில் உள்ள குறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினர்.
- மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
- வண்ணார்பேட்டை சாலை தெருவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கத்தினை கடந்த 3-ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2-வது முறையாக தூய்மை பணி
இதனையொட்டி நெல்லை மாநகராட்சியில் 'நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி' மற்றும் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மாதந்தோறும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
எனவே இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமை தூய்மை பணிகள் நடந்த நிலையில் இன்று 4-வது சனிக்கிழமை என்பதால் மாநகரப் பகுதி முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்றது.
உறுதிமொழி
அதன் தொடர்ச்சியாக தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, துணைமேயர் கேஆர் ராஜு, உதவி கமிஷனர் லெனின் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் கமிஷனர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கவுரவிப்பு
எனது குப்பை எனது பொறுப்பு என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்களை கைகளில் அணிந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.தொடர்ந்து பணி ஓய்வுபெற உள்ள 3 தூய்மைப் பணியாளர்களை சால்வை அணிவித்து கவுரவித்தனர். அதன் பின்னர் வண்ணார்பேட்டை சாலை தெருவில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
பேரணி
அதன் தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் இருந்து தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் வண்ணாரப்பேட்டை வரையில் தூய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். இதே போல் பாளை மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரலிங்கம், முருகன், சங்கரநாராயணன் ஆகியோர் தலைமையில் டார்லிங் நகர், ராஜேந்திர நகர், ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் அந்தோணி, நடராஜன் ஆகியோர் தலைமையில் பாரதி நகர், அத்தியடி தெரு, ராவுத்தர் தெரு ஆகிய பகுதிகளில் கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு மக்கள் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயகரமானவை என்று குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. கடைகளிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. மாநகரப் பகுதி முழுவதுமாக இன்று 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் வண்ணார்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்