search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diabetes Day"

    • 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியை மருத்து வக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராமசாமி, துறைத்தலைவர் மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரிஸ், கௌதமன், மருத்துவத்துறை தலைவர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று முகப்பு பகுதியில் நிறைவடைந்தது.

    பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் முதல்முறையாக முன்னோடி திட்டமாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவம் மற்றும் நீரிழிவு நோய் அறுவை சேவைகள் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சர்க்கரை நோயாளிகளில் 25 சதவீதம் பேருக்கு பாத நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் 85 சதவீதம் பேருக்கு நோய் முற்றிய நிலையில் கால் துண்டிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரம் பேர் பாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே மாதம் ஒருமுறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் டாக்டர்கள் பங்கேற்கும் பாத நோய் அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடத்தப்பட்டு வருகிறது.

    சர்க்கரை நோயாளிகள் பாத பராமரிப்பில் கவனம் செலுத்தினால் கால் அகற்றப்படுவதில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்றார்.

    • உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வள்ளியூர் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் சிறப்பு அம்சமாக கண் விழித்திரை பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை, நுரையீரல் திறன் பரிசோதனை, உடல் பருமன் குறைக்க உணவு முறை ஆலோசனை, எலும்பு வலிமை பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றன

    வள்ளியூர்:

    உலக சர்க்கரை நோய் விழிப் புணர்வு தினத்தை முன்னிட்டு வள்ளியூர் எம்.எஸ். மஹால் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், அன்னை அமராவதி மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முகாமை நடத்தின. விழாவின் தொடக்கமாக டாக்டர் சங்கரன், வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும், மேக்ரோ கல்லூரி நிறுவனத்தின் தலைவருமான பொன் தங்கதுரை ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினர்.

    டாக்டர் சங்கரன் சிறப்புரை ஆற்றினார். ரோட்டரி முன்னாள் ஆளுநரும், கிங்ஸ் பள்ளியின் தாளாளருமான ரோட்டரியன் நவமணி மற்றும் வள்ளியூர்சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் தலைவர் பொன் தங்கதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    நிகழ்ச்சியின்போது பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சர்க்கரை நோய் விழிப்புணர்வு பேச்சுப்போட்டிகளும் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொன் தங்கதுரை, செயலர் சுதிர் கந்தன், முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் மாவட்ட செயலாளர் வலங்கை புலி ரமேஷ், முன்னாள் தலைவர் முத்து சுபாஷ், செல்வேந்திரன், ஜெய்கணேஷ், முத்துசாமி, ஹரிஷ், முன்னாள் தலைவர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் சிறப்பு அம்சமாக கண் விழித்திரை பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை, நுரையீரல் திறன் பரிசோதனை, உடல் பருமன் குறைக்க உணவு முறை ஆலோசனை, எலும்பு வலிமை பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் டாக்டர்கள் பயனாளி களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கினார்கள்.

    ஒவ்வொரு பரிசோதனை கருவிகளும் தனித்தனியே அமைக்கப்பட்டு அத்தனை பயனாளிகளுக்கும் சுதந்திரமாக இலவசமாக பரிசோதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    முகாமில் 142 பயனாளிகள் கலந்து கொண்டனர். அதில் புதிதாக 64 சர்க்கரை நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனையும் மருந்துகளும், சத்து பலகாரமும், சத்தான பானமும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் சங்கரன், டாக்டர் அருண் பிரகாஷ், டாக்டர் அசோக் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இந்த முகாமில் முன்னாள் வியாபாரி சங்க தலைவர் சின்னத்துரை, நிர்வாக கமிட்டி உறுப்பினர் சங்கரன், வியாபாரி சங்க பொருளாளர் ஜோவின், மெர்சி பள்ளியின் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.

    இந்த முகாமின் முழு ஏற்பாடு செய்திருந்த டாக்டர் சங்கரனை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும், மேக்ரோ கல்லூரியின் சேர்மன் பொன் தங்கதுரை மற்றும் செயலர் சுதீர் கந்தன் ஆகியோர் பாராட்டினர்.

    • நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினர்.
    • உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த மனிதநேய மக்கள் கட்சியினர், உள் நோயாளிகள் அனைவருக்கும் ரொட்டி, பழங்கள், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர். உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

    அரசு தாலுகா தலைமை மருத்துவர் அயன்ராஜ் முன்னிலை வகித்தார். ம.ம.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் முகமது அசாருதீன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுதொழில் சங்க தலைவர் சிவனேஷ் ராஜா, ம.ம.க. நகரத் தலைவர் அப்துல் வஹாப், செயலாளர் சேக் அப்துல்லா, பொருளாளர் சேக் அப்துல்லா, ம.ம.க. நகரச் செயலாளர் ஜாபர் அலி, எஸ்.டி.பி.ஐ. அன்வர்தீன் நசீர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×