என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Died by drowning"
- குருவாடிப்பட்டி புது ஆறு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
- கிணற்றுக்குள் குதித்த அப்துல் ரசாக் நீரில் மூழ்கிய போது மூச்சு திணறி உள்ளார்.
வல்லம்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகரை சேர்ந்தவர் சையது முகமது கனி என்பவரின் மகன் அப்துல் ரசாக் (வயது 18). இவர் திருச்சியில் உள்ள ஜமால் முகம்மது கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அப்துல் ரசாக் அவருடைய 2 நண்பர்களுடன் சேர்ந்து தஞ்சை அருகே உள்ள குருவாடிப்பட்டி புது ஆறு அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை அப்துல் ரசாக் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து குளிப்பதற்கு கிணற்றின் மேல் இருந்து கிணற்றுக்குள் குதித்து உள்ளனர்.
அவர்களுடன் வந்த மற்றொரு நண்பர் கிணற்றில் குதிக்காமல் மேலே நின்றுள்ளார். இதனையடுத்து கிணற்றுக்குள் குதித்த அப்துல் ரசாக் நீரில் மூழ்கிய போது மூச்சு திணறி உள்ளார்.
இதில் அவர் மூச்சு திணறி கிணற்றுக்குள்ளேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
அவருடைய குளித்த மற்றொரு நண்பர் உயிர் தப்பினார்.
இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இருந்து கல்லூரி மாணவர் அப்துல் ரசாகின் உடலை மீட்டனர்.
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி வல்லம் போலீஸார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பலியான அப்துல் ரசாக்கின் தந்தை சையது முகமது கனி (வயது 48) கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
- நண்பர் வீட்டிற்கு சென்ற நிலையில் பரிதாபம்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் இவரது மகன் முருகன் (வயது 24) இவர் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த மாதம் 17-ந் தேதி ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது வரும் வழியில் நாட்டறம்பள்ளி அருகே கள்ளியூர் தீத்தான் கொல்லை பகுதியைச் சேர்ந்த நண்பர் சாந்தகுமார் என்பவரது வீட்டிற்கு சென்றார்.
வீட்டு அருகே சாந்தகு மாருக்கு சொந்தமான 3 அடி ஆழமுள்ள நீர் தேக்க தொட்டியை முருகன் சுவற்றின் மீது ஏறி நின்று எட்டி பார்த்தார்.
தொட்டியில் தவறி விழந்து தலையில் அடிப்பட்டு மயங்கி கிழே விழந்தார். அவரை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தந்தை ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரியில் மீன் பிடிக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் ஊராட்சி மூசல் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 40). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் 2 மகள் ஒரு மகன் உள்ளனர்.
நேற்று மாலை அம்மை யப்பன் நகர் பகுதியில் உள்ள ஏரியில் ரவி மீன் பிடிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்ட அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த சிலர் தண்ணீரில் மூழ்கிய அவரை மீட்டனர்.
அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளிக்கச் சென்ற போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள தடுப்பணை பகுதியில் வாணியம்பாடி- நியூடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி சேர்ந்த இலியாஸ் அஹமத்(45), உஜேர் பாஷா(17), உவேஸ் அஹமத்(16), ராகில் பையஸ்(22), ஆகிய 4 பேர் குளிக்க சென்றனர்.
அப்போது தடை செய்யப்பட்ட தடுப்பணை பகுதியை கடந்து 4 பேரும் வனப்பகுதிக்குள் குளிக்கச் சென்றனர், அப்போது அணையில் இறங்கிய போது கால் வழுக்கியதால் உஜேர் பாஷா நீரில் விழுந்து மூழ்கினார்.
இதனை தொடர்ந்து இலியாஸ் அஹமத் நீரில் குதித்து அவரை காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கினார்.
2 பேர் தண்ணீரில் மூழ்கினர்
உடன் வந்த 2 பேர் கண்முன்னே நீரில் மூழ்கியதை பார்த்த உடன் வந்த மற்ற 2 பேர் செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து சென்ற பகுதி மக்களுடன் இணைந்து நீரில் மூழ்கிய 12-ம் வகுப்பு பள்ளி மாணவன் உஜேர் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகியோர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு 2 பெர் பிணமாக மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் குப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- செய்யாறு அருகே பரிதாபம்
- போலீஸ் விசாரணை
செய்யாறு:
செய்யார் அருகே உள்ள புளியரம்பாக்கம் கிராமம், கொல்லைமேடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 30). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அஞ்சலி வயது 21,மனைவியும், கிருத்திகா (வயது 4) பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் வழக்கம் போல நேற்று ஆடு மேய்க்க சென்றார். பகல் 2 மணி அளவில் விண்ணவாடி காட்டுப் பகுதியில் உள்ள குட்டையில் குளித்துக் கொண்டு இருந்தார். அதனை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் திருப்பதி ஆகியோர்களின் பார்த்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த வழியாக வந்த அவர்கள் பார்த்தபோது லட்சுமனின் துணி மட்டும் கரையில் இருந்தது லட்சுமணனை காணவில்லை. குட்டையில் மூழ்கி இருந்த லட்சுமணனை திருப்பதி மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதித்து டாக்டர் ஏற்கனவே லட்சுமணன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அஞ்சலி செய்யாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்