என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DMK Member death"
- வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
- அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கப்பந்து (வயது 54). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது தி.மு.க. ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி மாலா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.
நேற்று அந்தப் பகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.
இதற்காக அமைச்சர் துரைமுருகனை வரவேற்று கொடி தோரணங்கள் கட்டினர்.
நேற்று மாலை வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மார்கபந்து மயங்கி விழுந்தார். அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மார்க்கபந்துவை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மார்க்கபந்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்கபந்துவுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கண்ணிமைக்கும் நேரத்தில் சுதாகர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
- பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவில் போலீஸ் சரகம் வடக்கு கஞ்சன் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). தி.மு.க. பிரமுகர்.
இவர் நேற்று இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதியில் ஓடும் வடலாற்றுக்கு சென்றார். அப்போது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இதனை கவனிக்காமல் சுதாகர் ஆற்றில் இறங்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். பதறிய சுதாகர் உயிர் பிழைக்க அபயகுரலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனாலும் சுதாகரை காப்பாற்ற முடியவில்லை. அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக விரைந்து வந்து சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.
இன்று காலையும் சுதாகரை தேடும்பணி நடந்தது. அப்போது கஞ்சன்கொல்லை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் சுதாகரின் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. அந்த உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
பின்னர் சுதாகரின் உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி அடுத்த மழையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் ( வயது 68) மாவட்ட முன்னாள் தி.மு.க. கவுன்சிலர். இவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் நிலையம் அதே கிராமத்தில் உள்ளது.
கடந்த 17-ந் தேதி மரம் அறுக்கும் பட்டறையில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட இடது புறமாக பைக்கை திருப்பினார்.
அப்போது சாலையோர கல்லில் பைக் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கமலக்கண்ணன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக வடவணக்கம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்