search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK secretary"

    • ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.

    இவருக்கும் தற்போது நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு, அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பி தருமாறு சண்முகம் கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை திருப்பி தராததால் இதுகுறித்து முக்கிய பிரமுகர்களிடம் பேசி கடந்த 2022 ல் ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காகோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.

    தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வரும் ஜூன் 30-ல் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

    • ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிவாசகம் வரவேற்புரையாற்றினார்.
    • இளைஞர் அணி நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் திராவிட மாடல் ஆட்சியின் 2-வது சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான எஸ். வி. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிவாசகம் வரவேற்புரையாற்றினார் . கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் தாரை சிவா, திருப்பூர் சந்துரு ஆகியோர் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் பேசியதாவது:-

    தேர்தல் வாக்குறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அத்தனை திட்டங்களிலும் 87 சதவீத திட்டங்கள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன .குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரியில் படித்து வரும் 2.20 லட்சம் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1937 அரசு பள்ளிகளில் 1.48 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 39.21 லட்சம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் பயணித்து சராசரியாக மாதம் ரூ.888 பணத்தை மிச்சப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்று ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினசரி ஒரு பொய்களை கூறி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் . தலைவர் கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களும் உயர வேண்டும். பதவி உயர்வு பெற வேண்டும். அரசு பதவிகளில் வகிக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் சட்டத்தை இயற்றியதால் தான் அண்ணாமலை கூட இன்று ஐ.பி.எஸ்.ஆக பணியாற்ற முடிந்தது.

    அண்ணாமலையின் சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். தி.மு.க. பனங்காட்டு நரி. கடந்த 50 ஆண்டுகளில் உங்களை போன்ற எத்தனையோ வேடதாரிகளை கழக அரசு சந்தித்துள்ளது. தி.மு.க. வளர்ந்து பரந்த ஆலமரம். இதன் ஆணிவேரை கூட உங்களால் தொட முடியாது. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

    கூட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் ,மாவட்ட துணைச்செயலாளர் பிரபாவதி ,பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் ,ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சசிகுமார் ,ஒன்றிய துணைச் செயலாளர்கள் புவனேஸ்வரி, செல்வகுமார், நகரஅவை தலைவர் கதிரவன், சின்னக்காம்பாளையம் பேரூர் செயலாளர் பன்னீர்செல்வம், குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி உட்பட தாராபுரம் ஒன்றிய கழக மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக மீண்டும் தேர்வான மணிமாறனுக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
    • தி.மு.க. 15வது பொதுத் தேர்தல் முடிவின்படி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சேடபட்டி மு.மணிமாறன் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    திருமங்கலம்

    தி.மு.க. 15வது பொதுத் தேர்தல் முடிவின்படி மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக சேடபட்டி மு.மணிமாறன் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து 2-வது முறையாக தேர்வான மணிமாறனுக்கு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும், பிரமுகர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமங்கலம் நகரிலுள்ள மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு நேற்று காலை வருகை தந்த மாவட்டச் செயலாளர் சேடபட்டி மணிமாறனுக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராம லிங்கம், லதா அதியமான், மதுரை மண்டல தி.மு.க.

    தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொறுப்பாளர் பாசபிரபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் செல்வமணி செல்லச்சாமி, முன்னாள் கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளராக பாசபிரபு நியமிக்கப்பட்டுள்ளார். விரகனூர் சேர்ந்த பாசப்பிரபு தி.மு.க. மதுரை தெற்கு மாவட்ட தகவல் ொழில்நுட்ப அணி அமைப்பாளராக செயல்பட்டு வந்தார். தற்போது இவரை மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல பொறுப்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜா நியமித்துள்ளார்.

    மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை, பாசபிரபு சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்த அவருக்கு மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் மேளதாளத் துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர்கள் ஆறு முகம், ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் அன்பழகன், ரமேஷ், பரமசிவம், கஸ்தூரிதங்கம், உமாதேவி, அபிராமிநாதன், மதியழகன், அந்தோணிஸ்டாலின், மோகன்தாஸ் சாமுவேல், ஜெபசிங், வக்கீல் சுபேந்திரன், ஜேசையா, நலம்ராஜேந்திரன், மரியதாஸ், சங்கர், சீனிவாசன், ஆபிரகாம், அந்தோணிகண்ணன், தங்கராஜ், ராமர், சண்முகராஜ், சரவணன், சின்னத்துரை, முருகன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கஸ்தூரி, மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், டேனி, தேவதாஸ், தனபால், அருண்சுந்தர், முத்துராமன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், மெட்டில்டா, பவானிமார்ஷல், ஜான்சிராணி, கண்ணன், இசக்கிராஜா, முத்துவேல், பொன்னப்பன், தெய்வேந்தி ரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், மாநில பேச்சாளர் சரத்பாலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதி கண்ணன், காசிவிஸ்வ நாதன், சின்னபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கீதாமாரியப்பன், கதிரேசன், சுப்பையா, சதிஷ்குமார், பாலு, சுரேஷ், ரவீசந்திரன், கங்காராஜேஷ், ரவீந்திரன், அந்தோணிராஜ், கருணா, மணி, அல்பட், மகேஸ்வரசிங், உலகநாதன், பெனில்டஸ், அற்புதராஜ், வக்கீல் மாலாதேவி, அருணாதேவி, பார்வதி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்லில் பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் திமுக செயலாளர் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #DMK
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்த தம்பிராஜ் மகன் பாலசுப்பிரமணியன் (வயது26) இவர் ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் சிறுமலை தென்மலை 8-வது வார்டு தி.மு.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார்.

    இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வான்மதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    தற்போது பாலசுப்பிரமணியன் குடும்பத்துடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள பொன்னகரத்தில் வசித்து வந்தார்.

    கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பாலசுப்பிரமணி வீடு திரும்பவில்லை. அவரது மனைவி தனது கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் தனது கணவரின் செல்போனில் இருந்து ஒரு குறுந்தகவல் மட்டும் வந்திருந்தது. தான் வெளியூர் செல்வதாகவும் 2 நாட்களில் வீட்டிற்கு வந்துவிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் சந்தேகம் அடைந்த வான்மதி இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த விசாரணையில் பணம் பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் அவரது நண்பரே கொன்று தனது ஆலையில் புதைத்திருந்தது தெரிய வந்தது.

    பாலசுப்பிரமணியன் பணிபுரிந்த அதே அலுவலகத்தில் பாரதிபுரத்தை சேர்ந்த கார்த்தி (26) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ஆடிட்டிங் வேலையை ஒருவருக்கு செய்து முடித்து ரூ.50 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர். அந்த பணத்தை கார்த்திக் வாங்கிக்கொண்டு சில நாட்கள் கழித்து ரூ.25 ஆயிரம் பங்கு தொகையை தருவதாக கூறி உள்ளார். ஆனால் அதனை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். கார்த்திக்கு சொந்தமான நூற்பாலை பொன்னகரத்தில் உள்ளது.

    சம்பவத்தன்று தனது பங்கு தொகையை பாலசுப்பிரமணியன் கேட்க சென்ற போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி தனது நண்பர் என்றும் பாராமல் பாலசுப்பிரமணியன் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தார். பின்னர் தனது ஆலையின் ஓரத்திலேயே குழி தோண்டி புதைத்து விட்டார். இந்த விவரம் தெரிய வரவே தாலுகா போலீசார் கார்த்தியை பிடித்து கிடுக்கி பிடி விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட பாலசுப்பிர மணியனின் உடலை தோண்டி எடுக்கவும் முடிவு செய்தனர். ஆர்.டி.ஓ. ஜீவா, தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் இன்று உடல் தோண்டி எடுத்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் காலை 9 மணி வரை அதிகாரிகள் மற்றும் போலீசார் யாரும் வராததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கொலை செய்து உடலை தனது ஆலையிலேயே புதைத்திருப்பதால் இச்சம்பவத்தில் மேலும் சில நபர்கள் தொடர்பு இருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #DMK
    ×