என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Donkey Milk"
- குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை கழுதைகளிடம் பால் சுரக்கும்.
- கழுதைகளை நம்பிதான் நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா கணக்கப்பிள்ளை வலசை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கழுதை பால் விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது.
கழுதை பால் குடித்தால், குழந்தைகளுக்கு உடல் ரீதியில் நன்மை அதிகரிக்கும் என்று பெரியவர்கள் சொல்வதால் அதனை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதில் தாய்மார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கழுதை பால் விற்பவர்கள் திருச்சியில் இருந்து ஒரு குழுவாக வந்து தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தனித்தனியாக பிரிந்து சென்று விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 10 மில்லி கொண்ட ஒரு சங்கு கழுதை பாலை ரூ.100-க்கு கூவி கூவி விற்பனை செய்து வருகின்றனர்.
மருத்துவ குணங்கள் நிறைந்தது என்பதால் பலரும் ஆர்வமுடன் கழுதை பால் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். இதுகுறித்து கழுதை பால் விற்பனை செய்யும் திருச்சியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
நாங்கள் 3 தலைமுறைகளாக இந்த தொழிலை செய்து வருகிறோம். இதற்காக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கழுதைகளை வாங்கி வளர்த்து வருகிறோம். குட்டி ஈன்ற 6 மாதங்கள் வரை கழுதைகளிடம் பால் சுரக்கும். கழுதை பால் குடிப்பதால் குழந்தைகளுக்கு சளி, தோஷ, மாந்திரீக பிரச்சனைகள் நீங்கும் என்று கூறுவார்கள்.
இதனை குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பெரியவர்கள் கழுதை பால் குடிப்பதால் வாய் புண், வயிற்றுப் புண் குணமாகும். ஜீரண சக்தி அதிகரிக்கும். 12 மணி நேரம் வரை கழுதை பால் கெடாமல் இருக்கும். எங்களுக்கு நாள்தோறும் இந்த கழுதைகள் மூலம் ரூ.1000 முதல் ரூ.1500 வரை வருமானம் கிடைக்கிறது. இந்த கழுதைகளை நம்பிதான் நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம்.
இது ஒரு சீசன் மற்றும் நாடோடி தொழிலாகும். இந்த வேலை இல்லாத சமயத்தில் கிடைக்கும் கூலி வேலைக்கு செல்வோம். இந்த கழுதைகளை குல தெய்வங்களாக நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போயபாலம் சந்திப்பு பகுதியில் 10 கழுதைகளுடன் நான்கு குடும்பங்கள் கொண்ட குழு கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
- நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம்.
திருப்பதி:
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை பால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
பிறந்த குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழுதை பாலில் மருத்துவக் குணம் அதிகம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
கழுதைபால் ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது கழுதை பால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் ரூ.8000 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் போயபாலம் சந்திப்பு பகுதியில் 10 கழுதைகளுடன் நான்கு குடும்பங்கள் கொண்ட குழு கழுதை பால் விற்பனை செய்து கொண்டிருந்தனர் .
"நாங்கள் ஒரு கப் (25 மில்லி) புதிய கழுதைப்பாலை ரூ.200-க்கு விற்கிறோம். ஒரு லிட்டர் ரூ.8,000-க்கு மொத்தமாக விற்கிறோம். ரூ.1,000 தள்ளுபடி தரலாம். ஒரு கழுதை ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் கொடுக்க முடியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்கிறோம். நாங்கள் வழக்கமாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் வணிகத்திற்காக விசாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கு வருவோம்," என்றனர்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் கழுதைப்பாலின் மருத்துவ குணம் பற்றி கேள்விப்பட்டு 75 மில்லி கழுதைப்பாலை வாங்கியதாக கூறினார்.
"இங்கே கழுதையிலிருந்து புதிதாகப் பால் கறந்த பச்சைப் பாலை அந்த இடத்திலேயே குடித்து திருப்தியடைந்தேன். விற்பனையாளரிடம் ரூ.500 டிஜிட்டல் பேமெண்ட் செலுத்தினேன்" என்றார்.
- குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.
- கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சளித் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பலரும் மருந்து உட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கழுதைப் பால் கொடுப்பது நல்லது என தகவல் பரவி வருகிறது.
இதன் காரணமாக மாவட்டத்தில் கழுதைப் பாலுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் கிராமங்களை சேர்ந்த சிலர் ஊர் ஊராகச் சென்று கழுதைப் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம், எட்டாமடை பகுதிகளில் அவர்கள் வீதி வீதியாக கழுதைகளை அழைத்துச் சென்று பால் விற்று வருகின்றனர். ஒரு சங்கு பால் ரூ.100-க்கு விற்கப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்தோம். தற்போது கழுதைப் பால் விற்பனை அதிகரித்துள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப எங்களால் கொடுக்க முடியவில்லை என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்