search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant Census"

    • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.
    • கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், விளாமுண்டி, பவானிசாகர், ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, கெட்டவாடி, ஜீரகள்ளி, கடம்பூர், மெட்டல்வாடி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், விலை உயர்ந்த மரங்களும், மூலிகை செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இன்று காலை பண்ணாரி சாலையில் காட்டு பண்ணாரி என்ற இடத்தில் வனச்சரகர் பழனிச்சாமி, வனவர் தீபக்குமார் மற்றும் வனக்காப்பாளர்கள் துப்பாக்கி பாதுகாப்புடன் யானைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். மொத்தம் இந்த பணியில் 76 பேர் ஈடுபட்டுள்ளனர்.

    முதல் நாளான இன்று பரப்பளவு வாரியாகவும், நாளை நேர்கோட்டு பாதையிலும், நாளை மறுநாள் நீர்நிலைகளில் இருக்கும் யானைகளும் கணக்கெடுக்கப்படுகிறது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 866 யானைகள் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக யானைகள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள யானைகள் எண்ணிக்கை குறைந்துள்ளதா? அல்லது அதிகரித்துள்ளதா? என்று தெரிய வரும்.

    • யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடக்கிறது.
    • நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

    கோவை:

    தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில வனப்பகுதிகளில் அதிகளவிலான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனப்பகுதிகளில் எத்தனை யானைகள் உள்ளன என்பதை அறிய வனத்துறையினர் கணக்கெடுப்பினை நடத்தி வருகின்றனர்.

    வழக்கமாக ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக கணக்கெடுப்பினை நடத்தி தங்கள் மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் எத்தனை யானைகள் உள்ளன என்ற விவரத்தை அறிவிப்பாக வெளியிட்டு வருகிறது.

    தற்போது முதல் முறையாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கி தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இந்த பணியானது இன்று காலை 4 மாநில வனப்பகுதிகளிலும் தொடங்கியது. இன்று தொடங்கிய பணியானது வருகிற 19-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

    தமிழகத்தில் கோவை, நீலகிரி வனக்கோட்டங்களில் இன்று காலை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.

    கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, கோவை, போளுவாம்பட்டி, மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் ஆகிய 7 வனசரகங்களில் 42 இடங்களில் இந்த பணியானது நடந்தது.

    இதேபோல் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இந்த பணியில் வனச்சரக அலுவலர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியை சேர்ந்த இளங்கலை வனவியல் மாணவர்கள் என பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று யானைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    யானை கணக்கெடுப்பு பணியானது 3 முறைகளை பின்பற்றி நடக்கிறது. முதல் நாளில் நேரடியாக சென்று யானைகளை கணக்கெடுத்தல், 2-வது நாளான நாளை யானையின் சாணத்தை வைத்தும், 3-வது நாளில் நீர்நிலை பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் யானைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை, நீலகிரி வனப்பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. யானைகளின் சாணம், கால்தடம், நீர்நிலைகளுக்கு அருகே அவை வந்து செல்வது உள்ளிட்டவையும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு சென்று கண்காணித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    • யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.
    • யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரக அலுவ லகத்தில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023-க்கான பயிற்சி சத்திய மங்கலம், புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோ ட்டம் ஆகிய பயிற்சியாளர்களை கொண்டு

    அந்தியூர் பர்கூர், தட்டகரை, சென்னம்பட்டி மற்றும் சேலம் வனக்கோட்டம் மேட்டூர் வனச்சரக வனப்ப ணி யாளர்கள் உள்ளிட்டர்களுக்கு யானையின் கணக்கெடுப்பு எவ்வாறு எடுக்க வேண்டும்.

    அதன் வழித்தடங்களை ஆய்வு செய்து கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு யானையின் இனப்பெருக்கம் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

    • தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
    • யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் பொது வன விலங்குகள் கணக்கெடுப்பு நடத்தும் போது, யானைகளின் எண்ணிக்கையும் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மே 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் யானைகள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேசிய யானைகள் கணக்கெடுப்பில் கர்நாடகம் முதல் இடத்தையும், கேரளம் 3-ம் இடத்தையும், தமிழகம் 4-ம் இடத்தையும் பிடித்திருந்தது. தற்போது நடைபெற உள்ள கணக்கெடுப்பில் தென்மாநிலங்களில் யானைகளின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் என 120 பேர் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூர் வன விரிவாக்க மையத்தில் நடந்தது. இந்த பயிற்சி முகாமை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர், யானைகள் கணக்கெடுப்பில் ஜி.பி.எஸ். கருவி திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் துல்லியமாக யானைகள் குறித்த தகவல்களை அறிய முடியும். கணக்கெடுப்பு பணி முடிந்ததும், விபரங்கள் முதுமலை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

    ×