search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EURO CUP"

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பேயர்ன் முனிச் அணியுடன் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதில், ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் ஜெர்மனி தோல்வியடைந்தது.

    இதனையடுத்து, அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்தார்.

    டோனி க்ராசை தொடர்ந்து ஜெர்மனி அணியின் மற்றொரு முன்னணி வீரரான தாமஸ் முல்லரும் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    பேயர்ன் முனிச் அணியுடன் மேலும் ஒரு தொடரில் விளையாடுவதற்காக தாமஸ் முல்லர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் ஜெர்மன் அணிக்காக இனிமேல் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன்.
    • ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

    ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான நேற்றைய காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இதைதொடர்ந்து அரையிறுதியில் பிரான்ஸ் அணியுடன் ஸ்பெயின் அணி பலப்பரீச்சை செய்ய உள்ளது.

    இந்நிலையில், அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெர்மனி அணியின் பிரபல கால்பந்து வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "என் நாட்டுக்காக கடைசி ஆட்டத்தை விளையாடினேன், அணியைப் நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஜெர்மனி அணிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, வரும் காலங்களில் அவர்களை டிவியில் பார்ப்பேன்" என்று தெரிவித்தார்.

    பிரபல ஜெர்மனி கால்பந்து வீரர் டோனி க்ராஸ், சர்வதேச போட்டியில் ஜெர்மனி அணிக்காக 108 ஆட்டங்களில் ஆடி 17 கோல்கள் அடித்துள்ளார்.

    ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப்புக்காக 2014-ம் ஆண்டு முதல் டோனி க்ராஸ் விளையாடி வருகிறார். அந்த கிளப் 22 பட்டங்கள் வெல்வதற்கு அவர் உதவிகரமாக இருந்துள்ளார்.

    • குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.
    • 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் குரூப் D பிரிவில் ஆஸ்திரியா, போலந்து அணிகள் இன்று மோதின.

    இப்போட்டியில், 1-3 என்ற கோல் கணக்கில், ஆஸ்திரியாவிடம் போலந்து தோல்வியடைந்தது. இதன்மூலம் யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இருந்து முதல் அணியாக போலந்து பரிதாபமாக வெளியேறியது.

    முந்தைய ஆட்டத்தில் நெதர்லாந்திடம் போலந்து தோல்வியடைந்தது. மீதமுள்ள ஒரு ஆட்டத்தில் போலந்து வெற்றி பெற்றாலும் புள்ளிப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    இதில் குரூப் E பிரிவில் ஸ்லோவாக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியின் மைகோலா 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன்பின் 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக் இன்னொரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி உக்ரைன் வெற்றி பெற்றது.

    இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால் அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாகியா அணி மோதின. போட்டியில் முதல் கோலை ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் அடித்தது.

    இதையடுத்து பெல்ஜியம் அணியால் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இந்த போட்டியில் ஸ்லோவேகியா அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் க்ரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும்.ஸ்டனீஸ்லாவ்  ரொபொட் ஆட்ட நாய்கனாக் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் டி பிரிவில் ஆஸ்டிரியா மற்றும் ஃப்ரான்ஸ் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோலை அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுப்பிடித்து 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்டிரியாவை வீழ்த்தியது பிரான்ஸ்.

    கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    உலக கோப்பை கால் பந்துக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை (யூரோ) போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐரோப்பிய கால்பந்து

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவரை 16 தொடர் முடிந்துள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. ஜூலை 14 வரை 1 மாதகாலத்துக்கு இந்த திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

    ஜெர்மனி, ஸ்காட்லாந்து, அங்கேரி, சுவிட்சர்லாந்து (குரூப் ஏ), ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா (பி), சுலோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து (சி), நெதர் லாந்து, பிரான்ஸ், போலந்து, ஆஸ்திரியா ( டி), பெல்ஜியம், சுலோவாக்கியா, ருமேனியா, உக்ரைன் (இ ), போர்ச்சுக்கல், செக் குடியரசு, துருக்கி, ஜார்ஜியா (எப்).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும். 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். 2-வது ரவுண்டில் 16 அணிகள் விளையாடும்.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    26-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 29-ந் தேதி நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. ஜூலை 9 மற்றும் 10-ந் தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந் தேதியும் நடக்கிறது.

    பெர்லின், முனிச், டார்ட்மன்ட், ஸ்டட்கர்ட், ஹம்பர்க் உள்பட 10 நகரங்களில் மொத்தம் 51 போட்டிகள் நடக்கிறது. இதனால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    ×