search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer kills"

    ஆலங்குளம் அருகே தோட்டத்துக்கு காவலுக்கு சென்ற விவசாயி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது49), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் ஊருக்கு வெளியே உள்ள மலைப்பகுதியில் உள்ளது. தோட்டத்தில் இவர் காய்கறி பயிரிட்டுள்ளார். இரவு நேரங்களில் மலைப் பகுதிகளில் இருந்து பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    இதனால் அவற்றை விரட்டுவதற்காக பேச்சி முத்து இரவு தோட்டத்திற்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பேச்சிமுத்து அவரது தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்தார். 

    இதுபற்றி ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மூலமாக பேச்சிமுத்துவின் உடலை மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் இரவு காவலுக்கு சென்ற பேச்சிமுத்து கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
    விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 75), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது. தற்போது அந்த நிலத்தில் கரும்பு பயிர் செய்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பாண்டுரங்கன் தனது நிலத்திற்கு சென்றார். அங்கு கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து பாண்டுரங்கன் மீது விழுந்தது.

    இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பாண்டுரங்கன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டுரங்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை கல்லாவி ரெயில் தண்டவாளம் அருகில் விவசாயி மர்மமாக இறந்து கிடந்தார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ளது வீராட்சிகுப்பம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 38), விவசாயி. இவர் நேற்று கல்லாவி ரெயில் தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோதண்டனின் உடலில் காயம் இருப்பதால் அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடியில் பீஸ் கேரியலை மாற்றிக் கொண்டிருந்த விவசாயி மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் கருகி பலியானார்.
    கடையநல்லூர்:

    புளியங்குடி சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது 37). இவருக்கு சொந்தமான தோட்டம் கோட்டமலை அருகே உள்ளது. இந்நிலையில் நேற்று அய்யாதுரை தோட்டத்திற்கு சென்றார். அங்கு தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டது. 

    இதையடுத்து அவர் பீஸ் கேரியலை மாற்றிக் கொண்டிருந்தார். இதில் எதிர்பாராமல் அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து புளியங்குடி போலீசார் பலியான அய்யாதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துமனைக்க அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பொன்னேரி அருகே அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்ததில் விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 60), விவசாயி. ஆமுர் ஊராட்சியில் குடிநீர் பம்ப் ஆபரேட்டராக இருந்தார்.

    நேற்று மாலை அவர் விளை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்தார்.

    இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘மின்சாரம் தாக்கி விவசாயி கன்னியப்பன் மயங்கி விழுந்த நிலையில் மின்சாரத்தை துண்டிக்க கோரி மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டால் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    வடக்குப்பட்டு கிராமத்தில் பல மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பது பற்றியும், மின் கம்பிகள் தாழ்வாக செல்லுவது குறித்தும் பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தாலேயே விவசாயியின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×