search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers demonstration"

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பாலக்கரையில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் மற்றும் வயலூர் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் ராமர், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க தலைவர் வக்கீல் தனவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். வடகிழக்கு பருவமழை குறைந்துவிட்டதால் 2018-19-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருத்தாசலம் நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வயலூர் ஏரியை என்.எல்.சி. நிதியில் ஆழப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும், விருத்தாசலம்-கடலூர் ரெயில் பாதையில் மூடப்பட்ட வயலூர் கேட்டினை பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    மத்திய-மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    மத்திய-மாநில அரசுகள் உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோக திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், ஏழை, விவசாய தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தஞ்சை சாந்தி, கமலா தியேட்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, விவசாய சங்கம் செந்தில்குமார், விவசாய தொழிலாளர் சங்கம் அபிமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மின் ஊழியர் மத்தியமைப்பு பொது செயலாளர் ராஜேந்திரன் விளக்க உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக 1982-ம் ஆண்டு பொது வேலைநிறுத்தத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலியான அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் உள்ளிட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வர்ணகுமார் தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் தனபால் மற்றும் மாவட்ட தலைவர் பரசுராமன் உள்பட 50-க் கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது, காய்ந்து கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். தென்பெண்ணை-பாலாறு நதிகளை இணைப்பு பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு விவசாயிகள் சென்றனர். கலெக்டர் ராமனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    ×