என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "female death"
- சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
- தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
திருவாரூர்:
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).
இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
- இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பின்னர் நேற்று இரவு தொடங்கிய பலத்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் புழலில் மழைக்கு வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புழல் அடுத்த லட்சமிபுரம், சப்தகிரி நகரை சேர்ந்தவர் முருகன். இறைச்சி கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது47). நேற்று காலை வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி லட்சுமி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு புழல் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் சேதம் அடைந்து இருந்த லட்சுமி வசித்த வீட்டின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
தனி வீடு என்பதால் லட்சுமி கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தது பக்கத்துவீட்டில் வசிப்பவர்களுக் கு தெரியவில்லை.
இதற்கிடையே இரவு 8.30 மணியளவில் முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு இடிந்து விழுந்ததில் மனைவி லட்சுமி சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்ந்தும் அவரது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
- ஆனால் அந்த பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த காமராஜ் மனைவி பவுனுத்தாய் (வயது 55). இவர் கடந்த 10 வருடங்களாக முருகமலை அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பணியில் இருந்த பவுனுத்தாய் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து நிறுவனத்தின் ஊழியர் அவரது மகன் பாண்டியராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதறியடித்துக் கொண்டு பாண்டியராஜன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
ஆனால் பவுனுத்தாய் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன் தனது தாய் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, எஸ்.எஸ்.ஐ. சவுந்தரவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் செஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
- மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கொத்தமங்கலம் ரோடு, கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி எட்வின் குயின் (வயது 35). இவர் கடந்த 15-ந் தேதி கப்பியாம்புலியூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு ஆள்சேர்ப்பு நேர்முகத் தேர்விற்கு கலந்து கொள்ள இவருடைய மைத்துனர் அறிவழகன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செஞ்சியிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் லட்சுமிபுரம், ஒரத்தூர், வழியாக முண்டியம்பாக்கம் அருகே உள்ள ெரயில்வே கேட் அருகே செல்லும் பொழுது பின்னால் வந்த டாரஸ் லாரி எட்வின் குயின் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு எட்வின் குயினுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான புகாரி ன்பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த எட்வின் குயினுக்கு வெற்றிச்செல்வி, கீர்த்தனா, ப்ரீத்தி வரலட்சுமி, என்ற 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
- அரசாயி அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
- அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார்.
கடலூர் :
வடலூர் அருகே பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அரசாயி (வயது 40) இந்நிலையில் நேற்று மாலை அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாட்டின் கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியை பிடிக்க அரசாயி சென்றார்.
அப்போது வயல்வெளியில் அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசாயி உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பகண்டைகூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
- கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரத்தை அடுத்த பகண்டை கூட்டுரோடு அருகே மரூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வெண்ணிலா (வயது 40). இவர் அதே கிராமத்தை சேர்ந்த புகழேந்தி என்பவரின் கிணறு அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்பதற்காக அருகே சென்றபோது கிணற்று மோட்டாருக்கு வரும் மின் ஓயரை எதிர்பாராதவிதமாக வெண்ணிலா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் பகண்டை கூட்டு்ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொள்ளிடம் ஆற்றை கடக்க முயன்ற போது படகு கவிழ்ந்து பெண் பலியானார்.
- ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர்.
கடலூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அனுமந்தபுரம் நாதல்படுகை பகுதியை சேர்ந்தவர் கணேசன். அவரது மனைவி காந்திமதி. இந்த தம்பதி மகன் ராசுகுட்டி. இவர்கள் கீழகுண்டல பாடி கொள்ளிடம் ஆற்று கரையோரம் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது கொள்ளிடம் ஆற்றில் திடீரென வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. உடனே சிறிய நாட்டுப் படகில் ஆற்றை கடக்க முயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் தோணி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் ராசுகுட்டி மற்றும் கணேசன் நீந்தி கரை தப்பினர். ஆனால் காந்திமதி நீரில் மூழ்கினார். உடனடியாக அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சையில் இருந்த காந்திமதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.
- மீனாட்சி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- இந்த நிலையில் வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை விஷம் குடித்த பெண் சாவுஅன்னவாசல் அருகே உள்ள காந்துப்பட்டியை சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி மீனாட்சி (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவதன்று வீட்டில் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.
இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தியாகதுருகம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலியானார்.
- தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி மனைவி சுசீலா (49) இவர் தனது கணவர் மற்றும் மகன் சத்யராஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று கொளஞ்சி திம்மலையில் இருந்து அலங்கிரி செல்லும் சாலையில் தனது விவசாய நிலத்தில் உள்ள நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்க்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரும் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்திற்கு வந்தனர். அப்போது கிணற்றில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது என சசீலா எட்டிப் பார்த்த போது தவறி கிணற்றில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட கொளஞ்சி, சத்யராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சுசீலாவை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சத்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- கடலூர் அருகே ரயில் மோதி பெண் இறந்தார்.
- எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் .
கடலூர் :
திருப்பதியில் இருந்து மன்னார்குடி நோக்கி எக்ஸ்பிரஸ் ெரயில் நெல்லிக்குப்பம் வழியாக நேற்று மாலை சென்று கொண்டிருந்தது . அப்போது கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே 50 வயது மூதாட்டி ஒருவர் சென்று கொண்டிருந்தார் . அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் மோதி மூதாட்டி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார் . இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த மூதாட்டி உடலை கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் . இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அருகே திருமணமாகி 3 வருடத்தில் தீயில் கருகி பெண் இறந்தார்.
- அஸ்வினி தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.
கடலூர்:
கடலூர் அருகே அழகியநத்தம் சேர்ந்தவர் திவ்யகுமார். அவரது மனைவி அஸ்வினி (வயது 22). இருவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணமாகி 7 மாதத்தில் அனுஸ்ரீ பெண் குழந்தை இருந்து வருகின்றது. சம்பவத்தன்று அஸ்வினி வீட்டில் விளக்கு ஏற்றி சாமிக்கு பூ போட்டு கொண்டிருந்தபோது நைட்டியில் திடீரென்று தீப்பிடித்த காரணத்தினால் அஸ்வினி அலறி கதறி துடித்து உள்ளார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த உறவினர்கள் தீயை அணைத்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அஸ்வினி தனது தந்தை வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அஸ்வினியை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 7 வருடத்திற்குள் அஸ்வினி இறந்ததால் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்