search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fraudulent"

    • கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.
    • தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் புதூர் பகுதி சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி தவமணி (வயது 39).

    இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் பிரபல பெயிண்ட் கம்பெனியின் டீலர்ஷிப் கேட்டு பதிவு செய்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து தவமணியிடம் போனில் பேசிய மர்ம நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் டீலர்ஷிப் தரப்படும் என்று கூறியதன் பேரில் மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் தவமணி ரூ. 7லட்சத்து24 ஆயிரத்து 999 செலுத்தியுள்ளார்.

    பின்னர் மேற்கண்ட நபரை தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது, இதையறிந்த தவமணி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் திவாகர் (29).

    இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு அதிகம் சம்பளம் தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்து பதிவு செய்துள்ளார். அதற்கு சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்ட மர்ம நபர் சில டாஸ்-க்குகளை செய்யச் சொல்லி அதன் மூலம் பணத்தைக் கட்ட சொல்லியுள்ளனர். இதை உண்மை என்று நம்பி திவாகர் ரூ.3 லட்சத்து 97 ஆயிரம் கட்டியுள்ளார்.

    சில நாட்களில் வேலை தருவதாக கூறி குறுந்தகவல் வந்ததை தொடர்ந்து காத்திருந்த திவாகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைத் தொடர்ந்து திவாகர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடன்குடி பகுதியில் உள்ள வியாபாரிகளின் போன் நம்பரை தெரிந்து கொண்டு சிலர் நான் உங்கள் கடையின் வாடிக்கையாளர்கள் என்று சொல்லி உங்கள் கடையில் நான் ஏகப்பட்ட பொருட்கள்வாங்கி இருக்கிறேன்.
    • இதுவரை சுமார் 9 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் உள்ள வியாபாரிகளின் போன் நம்பரை தெரிந்து கொண்டு, திடீரெனபெண் குரலிலும், ஆண் குரலிலும் பேசும், மர்ம நபர்கள் எங்களது உறவினருக்கு உடல் நிலை சரி இல்லை என்று சோக கதைகளை உருக்கமாக சொல்வதும், சிலர் நான் உங்கள் கடையின் வாடிக்கையாளர்கள் என்று சொல்லி உங்கள் கடையில் நான் ஏகப்பட்ட பொருட்கள்வாங்கி இருக்கிறேன்.

    எனக்கும் பக்கத்துஊருதான் என்று ஏதாவதுஒன்றை பேசி, நான் இருசக்கர வாகனத்தில்வரும் போது பெட்ரோல் இல்லாமல் நிற்பதாகவும் எனது நண்பரை அனுப்பி இருக்கிறேன். அவரிடம் பெட்ரோல் வாங்க ரூ.200 கொடுத்து விடுங்கள் என்றும், மற்றும் பல வகைகளில் மோசடியாகபேசி ரூ.300, ரூ.500 என ஏமாற்றி வாங்கிவிட்டு பின்பு போனை எடுப்பதில்லை.

    இப்படி இதுவரை சுமார் 9 வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தொடர்ந்து இப்படிப்பட்ட மர்ம போன் வியாபாரிகளுக்கு வருவதாகவும் வியாபாரிகள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம்.
    • சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்மநபர்களிடம் கொடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறை சென்று விட்டு தஞ்சைக்கு பஸ்சில் வந்தார்.‌

    பின்னர் தற்காலிக மார்க்கெட் அருகே உள்ள ஏ.ஓய். நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சரஸ்வதியின் அருகில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தினர்.

    இங்கு திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது. இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என சரஸ்வதியிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள் நகைகளுக்கு பதிலாக ஒரு கல்லை அந்தப் பையில் மறைத்து வைத்து கொடுத்தனர். அந்தப் பையுடன் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி அவிழ்த்து பார்த்த போது நகைகளுக்கு பதிலாக கல்லை ஏமாற்றி வைத்து தன்னை மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×