என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "general meeting"

    • முள்ளக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் கண்டன உரையாற்றினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முள்ளக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான சாமுவேல் ஞானதுரை தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மண்டல தலைவர் ராஜன், மடத்தூர் தனபால்ராஜ், காமாட்சி, தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முள்ளக்காடு கிராம காங்கிரஸ் கமிட்டி வைகுண்டவாசகம் வரவேற்றார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.வி. காங்கிரஸ் எடிசன் கண்டன உரையாற்றி பேசும்போது, இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் குடும்பத்தில் இருந்து வந்த ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை ஏற்கமுடியாது. ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி போராடும் என்று பேசினார். கூட்டத்தில் மகாராஜன், ரத்தினபாண்டி, பிரியா, இசக்கியம்மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

    • தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த தையொட்டி நெல்லை மாநகர் தச்சநல்லூர் பகுதி கழகம் சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு வர்த்தகர் அணி மாநில இணைச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான மாலைராஜா தலை மை தாங்கினார். முன்னாள் மண்டல சேர்மனும், கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கோகிலவாணி சுரேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பா ளர்களாக பேச்சாளர்கள் நெல்லை ரவி, முத்தையா, ராவணன், உடன்குடி தன பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இளைஞர் அணி வக்கீல் அலிப் மீரான், நிர்வாகிகள் அப்துல் கையூம், பூக்கடை அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் கோபி, அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள்மணி, மாவட்ட பிரதிநிதி இசக்கிபாண்டி, இளைஞரணி மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் 100 பேருக்கு சீருடையும், 500 பெண்களுக்கு சேலையும் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் செய்திருந்தார்.

    • ஒரத்தநாட்டில் நாளை (திங்கட்கிழமை) மாலை அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • பொதுக் கூட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நாளை(திங்கட்கிழமை) மாலை அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்-அமை ச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே பிரமாண்ட மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் மக்களுக்கான ஆட்சியை வழங்கிய எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் பொதுச் செயலாளராகி முதல் முறையாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார்.

    அதன்படி எடப்பாடி பழனிச்சாமி நாளை(திங்கட்கி ழமை) மாலை 3 மணிக்கு கபிஸ்தலத்தில் முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் உருவ சிலையை திறந்து வைக்கிறார்.

    இதைத்தொ டர்ந்து மாலை 5 மணிக்கு ஒரத்தநாட்டில் ஆயிரக்கண க்கானோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணையும் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் முதல்-அமை ச்சரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    தஞ்சை மாவட்டத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கிப்பட்டி, திருவையாறு, திருக்கருகாவூர், மேலஉளூர் உள்ளிட்ட இடங்களில் கட்சி பிரமுகர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே நிகழ்ச்சிகளில் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் பெருமளவு கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பட்டுக்கோ ட்டை முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.சேகர், ஒரத்தநாடு பேரூ ராட்சி தலைவர் மா.சேகர், மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஆர்.காந்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செ யலாளர் கு.ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தஞ்சை நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் என்.எஸ்.சரவணன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், தொண்டராம்பட்டு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.ஆசைத்தம்பி, தெலுங்கன்குடிக்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் பஞ்சு ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • நத்தக்காடையூரில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
    • அரசாணை 276-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    காங்கயம் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் பகுதி வரை செல்லும் கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை 276-ஐ ரத்து செய்ய கோரியும், மண் அணை மற்றும் மண் கால்வாயாக பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பழைய கட்டுமானங்களை இடிக்க கூடாது என்றும், காவிரி தீர்ப்பின்படி நீர் நிர்வாகம் உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கான்கிரீட் எதிர்ப்பு இயக்கத்தின் கீழ்பவானி பெயரல்ல - எங்கள் உயிர் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நத்தக்காடையூர், ஈஸ்வரன் கோவில் மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில் நத்தக்காடையூர், பழையகோட்டை, மருதுறை, பரஞ்சேர்வழி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கீழ்பவானி பாசன விவசாயிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    • கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார்.
    • காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டித்தும் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நகர தலைவர் நூகு சாகிப் தலைமை தாங்கினார். மாவட்ட நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அபூசாலிஹ் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தொடக்க உரையாற்றினார். திராவிடர் கழக பிரச்சார அணி மாநில செயலாளர் வக்கீல் அருள்மொழி, தமிழ் மையம் அமைப்பின் நிறுவ னர் ஜெகத் கஸ்பர் ராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் வக்கீல் பெரோஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் இப்ராஹீம் மக்கீ, தூத் துக்குடி மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர், செய லாளர் மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் மீராசா, கவுரவ ஆலோசகர் வாவு சம்சுதீன், தேசிய கவுன்சில் உறுப்பினர் முகம்மது ஹசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியின் பொறுப்பாளர்களான பாவா ஷேக்னா லெப்பை, அகமது ஜருக், மஹ்மூத் லெப்பை, அகமது சலாஹுத்தீன், முகம்மது முஹ்யித்தீன், முகம்மது சித்தீக், சுகைல் இப்ராஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். காயல்பட்டினத்தில் 2-வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரியும், ரெயில் நிலையத்தில் நடைபாதையை உயர்த்தக் கோரியும், நகராட்சியின் வார்டு மறுவரையறை குளறுபடிகளை நீக்க கோரியும், காயல்பட்டினத்தில் தாலுகா துணை அலுவலகம் அமைக்க வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது இஸ்மாயில் புகாரி நன்றி கூறினார்.

    • ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் நகராட்சியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, பொது போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் எம்.சக்கரபானி, அர்ஜுனன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, உதவி ஆணையர் (கலால்) சிவா உட்பட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். விழுப்புரம் நகரத்தில் உள்ள பழைய பஸ் நிலையம் அருகில் அரசியல் கட்சியினர், ஊழியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்பினர்கள் பொது கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதால், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கு மாறாக மேற்படி நிகழ்ச்சிகளை நடத்திட உரிய இடத்தினை தெரிவு செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் விழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் மேற்படி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்கிட போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. புதிய இடத்தில் மேற்படி நிகழ்ச்சிகளை நடத்துவதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்படின் அவற்றை களைவ தற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் கலெக்டர் பழனி உறுதியளித்தார்.

    • மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட, மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

    செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் பாபு, பாஸ்கரன், மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த மருந்து வணிகர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களுக்கு உரிமம் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    உரிமங்கள் இன்றி ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    உரிமங்கள் இல்லாத மருந்து வணிகர்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்கின்ற விநியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மீது மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை வழக்கு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
    • பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற இருந்த இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், அக்டோபர் மாதம் 2ம் தேதி நடைபெற இருந்த பொதுக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.

    பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    • தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.
    • கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

    மாவட்டச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் சுரேஷ் குமார் வரவேற்றார். செய்தி தொடர்பாளர் சண்முகம், சட்ட செயலாளர் மோகன், மகளிர் அணி அருள்மொழி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு மட்டும் எமிசில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இதர எமிஸ் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்துவதை முற்றிலும் கைவிட வேண்டும். பணி பாதுகாப்பு சட்டம்இயற்ற வேண்டும். ஆசிரியர்களின் பணி வரன் முறை, தகுதி தான் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்ற கருத்துக்கள் மீது உடனடி தீர்வு காண மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூரில் அயோத்தி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி, வீரபாண்டி களஞ்சியம் கூட்டமைப்பு நிர்வாகி சிவராணி, அயோத்தி பெண்கள் கூட்டமைப்பு முதன்மை செயல் அலுவலர் மேரிஸ்டெல்லா, வாழப்பாடி பெண்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் விஷ்ணுபிரியா ஆகியோர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், பொருளாதார மேம்பட்டிற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பங்குதாரர்களுக்கு சான்றிதழ்களும், உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.
    • நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    காளையார்கோவில்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணி அளவில் காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெப்பக்குளம் கீழ்கரையில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமை தாங்குகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராசா எம்.பி. சிறப்புரை யாற்றுகிறார். அமைச்சர்கள் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் பாகமுகவர்களுக்கு செல்போன் கழக முன்னோடிகளுக்கு நிதி உதவி, தொண்டு நிறுவனங்களுக்கு அரிசி மூட்டைகள் ஆகியவை வழங்கப்படுகிறது. 7 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன், ராசா எம்.பி., முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் வழங்குகின்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கி றார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள செங்குளம் பகுதியில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன் னிட்டு பொதுக்கூட்டம் நடந்தது. விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தலைமைக் கழக பேச்சாளர் சிங்கை.அம்புஜம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆர்.கே.ரவிச் சந்திரன் பேசியதாவது:-

    தமிழக மக்களிடம் நிறை வேற்ற முடியாத திட்டங்க ளையெல்லாம் நிறைவேற்று வதாக கூறி பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க.வின் இந்த 2½ ஆண்டு காலத்தில் மக்களை வாட்டி வதைக்கும் செயல்கள்தான் நடை பெற்று வருகிறது.

    இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. எனவே தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எடப்பாடி பழனி சாமி தலைமையில் ஆட்சி மலர அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலா ளர்கள் அம்மன்பட்டி ரவிச் சந்திரன், பூமிநாதன், ராமமூர்த்திராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் வீரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முனி யாண்டி, முத்துராமலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×