search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gift for students"

    • சிறப்பாக செயல்பட்டதால் பாராட்டு
    • வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடந்தது

    வேலூர்:

    வேலூர் 10-ஆவது பட்டாலியன் என்.சி.சி. படையில் சிறந்து விளங்கிய அலுவலர்கள், மாணவர்களுக்கு தமிழ்நாடு என் சி.சி. துணை இயக்குநரக ஜெனரல் பாராட்டு தெரிவித்தார்.

    வேலூர் காட்பாடி காந்தி நகரி லுள்ள 10-ஆவது பட்டாலியனில் சிறந்து விளங்கிய தேசிய மாணவர் படைஅலுவலர்கள், என்சிசி மாண வர்களை பாராட்டும் நிகழ்ச்சி வேலூர் ஊரீஸ் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில்,தமிழ்நாடு என்சிசி துணை இயக்குநரக ஜெனரல் அடுல்குமார் ரஸ்டோகி பங்கேற்றார். அவருக்குகல்லூரி என்சிசி மாணவர்கள் துப் பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    தொடர்ந்து, என்சிசியில் சிறப் பாக பணியாற்றிய அலுவலர்கள், வேலூர் 10-ஆவது பட்டாலியன் சார்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்ற என்சிசி ஊரீஸ் கல்லூரி மாணவி சத்தியப்பிரியா, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி என்சிசி மாணவர் கரண்குமார் ஆகியோருக்கும், முகாமில் சிறந்து விளங்கிய என்சிசி மாணவர்கள் அருண், ஸ்ரீகாந்த் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கினார்.

    சென்னை 'அ' பிரிவு குரூப்கமாண்டர் ஜர்னைல் சிங், காட்பாடி 10-ஆவது பட்டாலிய னின் கமாண்டிங் அதிகாரி சஞ்சய் ஷர்மா ஆகியோர் சிறப்பாக பணி யாற்றிய பேராசிரியர்களை கவுரவித்தனர். முன்னதாக, கல்லூரியின் நிதி காப்பாளர் எஸ்.கேலப்நோபுள் சந்தர் வரவேற்றார்.

    கல்லூரித் தலைவர் ஹெச்.ஷர்மாநித்யானந்தம் கல் லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கல்லூரித் துணை முதல்வர் ஜெ.ஆனிகமலாஃபிளா ரன்ஸ் தொடக்க உரையாற்றினார்.

    என்.சி.சி. அலுவலர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். ஊரீஸ் கல்லூரி என்சிசி அலுவலர் சி.ஞானலின்ஷைனி நன்றி கூறினார்.

    • செங்கத்தில் விளையாட்டு போட்டி நடந்தது
    • மார் 500 பேர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.சுந்தரபாண்டியன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார், பேரூர் செயலாளர் சீனுவாசன் உள்பட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நடந்தது
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி கல்வியாளர் அணி சார்பில் காமராஜர் பிறந்தநாளை ஒட்டி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.

    இதில் பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி திருப்பத்தூர் லிங்கண்ணமணி பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் ஸ்பார்க்பிரபாகரன் தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர் சசிகுமார் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோ. வெங்கடேசன், மாவட்டத் தலைவர் சி.வாசுதேவன், கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.

    க்ஷ நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், தண்டபாணி, பி.ஆர்.தேவராஜன், பாண்டியன், லிங்கண்ணமணி, உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • என் குப்பை எனது பொறுப்பு என வாசகம்
    • ஏாளமானோர் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களிடையே 'என் குப்பை எனது பொறுப்பு" பள்ளியின் தூய்மையில் மாணவர்களின் பங்கு நகரின் தூய்மையில் மக்களின் பங்கு மற்றும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் மாணவர் மற்றும் மாணவிகளுடையே பேச்சு போட்டி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். இப்போட்டியில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாணவி களுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெற்றது.

    இதில் முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி மற்றும் நகர மன்ற தலைவர் காவியா விக்டர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.

    மேலும் இவ்விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர் அன்பழகன், நகராட்சி பொறியாளர் கோபு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பிர்கள் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×