search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health workers"

    • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
    • ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகராட்சி பகுதியில் பணிபுரிந்து வரும் சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி சுகாதார ஒப்பந்த பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூ. 610 ஊதியமாக வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ. 7000 வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பிஎஃப் தொகை மற்றும் இதர தொகைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதனை சுகாதாரப் பணியா ளர்கள் ஏற்று க்கொள்ள வில்லை. தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் தொடரும் என போரா ட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும் போலீசாரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இன்று தொடர்ந்து நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் போராட்டம் குறித்து விளக்கி பேசி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் ஆண்கள் பெண்கள் என்று சுமார் 100 பேர் பங்கேற்றுள்ளனர்.

    • டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்ட மேட்டுப் பாளையம், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சுகாதார குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • பொதுமக்களிடையே பிரசாரம் செய்யவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியாகியுள்ளனர்.

    அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமி வீடு, வீடாக சென்று பரிசோதனை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் டெங்குவால் உயிரிழப்பு ஏற்பட்ட மேட்டுப் பாளையம், குருமாம்பேட் ஆகிய பகுதிகளில் சுகாதார குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து புதுவை முழுவதும் அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். இன்று சுகாதாரத்துறை ஊழியர்கள் நோணாங்குப்பம் பகுதியில் வீடு, வீடாக சென்று தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

    மாடிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை மூட வேண்டும், வீடுகளில் பயன்படுத்தாத பொருட் களில் தண்ணீர் தேங்கி–யுள்ளதை சுட்டிக்காட்டி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

    கொசு–வின் மூலம் டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படுவதாக அறிவுறுத்தி னர். மேலும் மைக் மூலம் பொதுமக்களிடையே பிரசாரம் செய்யவும் சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    • 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள், புது சீருடைகள், பரிசுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் முனிசிபல் காலனி குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    நெடுஞ்சாலைத்துறை இயக்குனர் (பொது) ஓய்வு பெரியராஜ் சுதந்திர தின கொடியினை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொறியாளர் முருகேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் மணிகண்டன் குடும்பத்தினர் முனிசிபல் காலனி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்று 10 -ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    சுகாதார பணிகளில் தன்னலமற்று சேவை செய்து வரும் முனிசிபல் காலனி பகுதி ஆறு சுகாதார பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உபகரணங்கள், புது சீருடைகள், பரிசுகள் வழங்கப்பட்டன

    முடிவில் நலச் சங்க உதவி செயலாளர் அமுதன் நன்றி கூறினார்.

    • மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை தெருத்தெருவாக சென்று சேகரித்தனர்.
    • பல வீடுகளில் எரிப்பதற்காக வைத்திருந்த பழைய துணிகள், டயர்கள் மற்றும் கழிவுகளை வழங்கினார்கள்.

    போகிப்பண்டிகையின் போது சென்னையில் வீடுகளில் பழைய துணிகள், டயர்கள் உள்ளிட்ட கழிவுகளை தெருவில் போட்டு எரிப்பது வழக்கம்.

    இதனால் கடுமையான புகைமூட்டம் ஏற்படும். காற்றும் மாசுபடும். இதை தவிர்க்க இந்த மாதிரி கழிவுகளை வீடு வீடாக சென்று சேகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    அதன்படி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று தெருத் தெருவாக சென்று சேகரித்தனர். கழிவுகளை தெருக்களில் எரிக்காதீர்கள். எங்களிடம் கொடுங்கள் என்று வீடு வீடாக கேட்டு வாங்கினார்கள்.

    பல வீடுகளில் எரிப்பதற்காக வைத்திருந்த பழைய துணிகள், டயர்கள் மற்றும் கழிவுகளை வழங்கினார்கள். இந்த பணிகள் தொடர்ந்து 13-ந் தேதி வரை நடத்தப்படுவதோடு மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

    • மதுரையில் நோய் தடுப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மதுரை மாநகரம் முழுவதிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது” என்றார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர் மழை செய்து வருகிறது. இதன் காரணமாக சாலை மற்றும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மாவட்டம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் படிப்படியாக பரவி வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 பேர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகினர். அதில் 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை சந்தைப்பே ட்டையை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை, டெங்கு பாதிப்பால் கடந்த 19-ந் தேதி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது.

    இந்த நிலையில் மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் 530 பணியாளர்கள் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டியில் மருந்து தெளித்தல், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து மருந்து தெளித்தல், மற்றும் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் கூறுகையில், சிறுமி டெங்கு பாதிப்பால் தான் இறந்தது என்று உறுதியாக கூற முடியாது. அந்த குழந்தைக்கு மற்ற பாதிப்பும் இருந்தது. மதுரை மாநகரம் முழுவதிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது" என்றார்.

    மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு சிறப்பு வார்டு தயார் நிலையில் இருப்பதாகவும், அங்கு 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும், ரத்த மாதிரிகளை எடுத்து டெங்கு சோதனை செய்யும் கண்டறியும் வசதி மருத்துவமனையில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று மட்டும் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 வயது குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×