என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "home fire accident"
- வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
- மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு திடீர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புதுவை காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு ராஜேஷ் தனது வீட்டின் முதல் தளத்தில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது அறையில் தீப்பிடித்து எரிந்து அறையில் இருந்த பிரிட்ஜ் பீரோ மற்றும் மரத்திலான மேசை நாற்காலி, உடைகள் உள்ளிட்ட பொருள்கள் மளமளவென எரிந்தது.
ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அவர்களால் வீடு எரிந்தது தெரியவில்லை. புகை மூட்டத்தில் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட பின்னரே வீடு தீ பிடித்து எரிந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர் ஆனால் புகை மூட்டத்தால் அவர்களால் வெளியேற முடியவில்லை.
வீடு எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ அணைக்கப்பட்டது.
புகை மூட்டத்தில் மூச்சு திணறி சிக்கிக் கொண்ட போலீசாரின் குடும்பத்தினரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் வந்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்து மற்ற பொருட்களுக்கும் தீ பரவியது.
இந்த சம்பவத்தால் சேதராப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு அங்கு ஓலை கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்த ஓலை கொட்டகையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென குடிசை முழுவதும் பற்றி எரிந்தது.
தீ விபத்து ஏற்பட்ட போது கொட்டகையில் வடமாநில தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இந்த தீ அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோனுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாதவரம்:
எர்ணாவூர், ஆதிதிராவிடர் காலணி, 15 வது தெருவை சேர்ந்தவர், ராஜம்மாள்,47.
இவர் நேற்றிரவு வீட்டை பூட்டி விட்டு, பாரத் நகரில் உள்ள, உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு, 9:00 மணிக்கு திடீரென, வீட்டின் கூரையில் தீப்பிடித்து,.
அருகருகே உள்ள, குடிசைகளுக்கும் பரவியது. தார் சீட் போட்ட வீடுகள் என்பதால், தீ மளமளவென பற்றி எரிந்தன.
தகவல் அறிந்ததும் எண்ணூர் திருவொற்றியூர், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.
தீ விபத்தில், வீட்டினுள் இருந்த, நகை, பணம் உள்ளிட்டவை எரிந்து விட்டதாக, வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 49) எலக்ட்ரீசியன். நேற்று ஜெயபால் மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
அப்போது வீட்டின் மேல் சென்ற மின்வயர் திடீரென ஒன்றுடன் ஒன்று உரசி வீட்டில் தீ பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் தீ மளமளவெள பரவியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதுபற்றி அவர்கள் தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் வீட்டில் இருந்த டி.வி, மிக்சி, கிரைண்டர், சேர் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமாகின. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே சமயன்குடிகாடு கிராமம் ஆற்றாங்கரை தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி மல்லிகா (வயது 40).
இவர் நேற்று அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு இரவு சென்றார். அப்போது அங்கு நடந்த கலை நிகழ்ச்சியை அவர் பார்த்துக்கொண்டிருந்த போது அவரது தெருவை சேர்ந்த சிலர் ஓடிவந்து வீடு தீப்பற்றி எரிவதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா வீட்டிற்கு விரைந்து சென்றார். அப்போது வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அவர் ஒரத்தநாடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார்.
ஆனால் தீ விபத்தில் வீடு முற்றிலும் எரிந்து ரூ.25 ஆயிரம் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர்:
கொரடாச்சேரியை அடுத்த அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 60). இவரது அண்ணன் துரைராஜ் (65). இவர்களின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்தநிலையில் சரவணன் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது.இந்த தீ அருகில் உள்ள துரைராஜ் வீட்டிலும் பரவியது.
இதுபற்றி திருவாரூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதிலும் 2 வீடுகளிலும் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.
இதுபற்றிய புகாரின் பேரில் கொரடாச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
தேவகோட்டை:
தேவகோட்டை நகர் சரஸ்வதி வாசக சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிசை வீட்டில் உள்ளனர்.
நேற்றிரவு முனியம்மாள் என்பவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவர் அலறிக் கொண்டு வீட்டில் இருந்து வேகமாக வெளியேறினார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அருகில் உள்ள தேவகி என்பவரது வீட்டிற்கும் தீ பரவியது.
இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் முனியம்மாள் மற்றும் தேவகியின் வீடுகள் எரிந்து நாசமாயின. வீட்டிற்குள் இருந்த பொருட்களும் கருகி சேதமடைந்தன.
தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்