search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In Templeகொள்ளை"

    • குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கோவிலை ஆய்வு செய்தனர்.

    பின்னர் கோவிலை சீரமைப்பது குறித்தும் கோவிலுக்கு உரிய இடங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை செய்தனர்.

    கோவை அருகே கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 2 ஐம்பொன் சாமி சிலைகள் மீட்கப்பட்டது.

    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 2 ஐம்பொன் சாமி சிலைகள் கிடந்தன. இதைப் பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கருமத்தம்பட்டி போலீசார் 2 சிலைகளையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    விசாரணையில் இந்த சிலைகள் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தை அடுத்த கள்ளப்பாளையத்தில் கடந்த மாதம் வேணு கோபால சாமி கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வேணுகோபாலசாமி- சத்யபாமா ஆகிய ஐம்பொன் சிலைகள் என்பது தெரிய வந்தது.

    ஐம்பொன் சிலைகள் திருட்டு தொடர்பாக திருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த சிலைகளை கருமத்தம்பட்டி அருகே சாலையில் வீசிச் சென்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC

    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சில மகளிர் அமைப்புகள் வரவேற்றன. ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கடுமையாக எதிர்த்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜனவரி 22-ந்தேதி விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. அதே சமயம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

     


    நவம்பர் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதால் இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

    சபரிமலை தொடர்பான வழக்கை ஜனவரி 22-ந்தேதி விசாரிப்பதாக ஏற்கனவே கூறி விட்டோம். அப்போது மட்டும்தான் விசாரிக்க முடியும். அதற்கு முன் இது தொடர்பாக எந்த மனுவையும் விசாரிக்கவோ, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவோ முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் வீதி உலா நடை பெறும்.

    விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் விநாயகர் வீதி உலா நடைபெற்றது.



    இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலை, மாலை சாமி வீதியுலாவும், விநாயகர், சந்திரசேகர் வீதியுலாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தலைமை யிலான விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாட்கள் மற்றும் விசே‌ஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தற்போது ஆனி பிரம்மோற்சவம் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
    ×