என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "inspects"
- கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக புகழூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் நேரில் ஆய்வு செய்து பணியினை துரிதப்படுத்தி முடிக்க கூறினார். ஆய்வின் போது நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 58 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு , பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- இந்த முகாம்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.ஸ்ரீதரன் ஆய்வுகள் மேற்கொண்டு முகாம் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினா
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 58 வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு , பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாம்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.ஸ்ரீதரன் ஆய்வுகள் மேற்கொண்டு முகாம் அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின் போது கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராமசாமி, வட்ட வழங்கல் அலுவலர் உத்திராபதி,கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- மரம் வளர்ப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்
- மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அதன் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள சிட்டங்காட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குறுங்காடு திட்டத்தை, மரக்கன்றுகள் நட்டு வைத்து சுற்றுசூழல் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதன் குறுங்காடு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, அதன் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் எந்த மரக்கன்றுகளும் பழுதாகாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அனைத்தும் மரமாக வேண்டும், நன்கு வளர்ந்து மரமாகி பயன்தர மேலும் என்னென்ன, செய்ய வேண்டும் என்பது குறித்து அவர் கேட்டறிந்ததோடு, தேவையான அறிவுரையும் அவர் வழங்கினார். திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, அத்திட்டத்திற்கான பணிகள் செவ்வனே நடைபெறுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து கண்காணித்து வரும், அமைச்சர் மெய்யநாதனின் நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- பெரம்பலூரில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.
பெரம்பலூர்,
ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான முதல்கட்ட தேர்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஆன்லைனில் நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை செய்து, தகுதியானவர்களை ராணுவப் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான முகாம் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட உள்ளது.
முகாம் நடைபெற உள்ள மைதானத்தில், ஆயத்த பணிகள் குறித்து கலெக்டர் கற்பகம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார் ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து உள்விளையாட்டு அரங்கில் கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முகாமில் போதிய இடங்களில் இரண்டடுக்கு தடுப்புகள், இணையதளத்துடன் கூடிய கணினி வசதிகள், இரவு நேரத்தில் மைதானம் முழுவதும் மின் விளக்குகள் அமைத்தல், சாமியானா பந்தல்கள் அமைத்தல், போதிய குடிநீர் வசதி செய்தல், குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்தல் குறித்து கலெக்டர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராதா உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும் புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது :- ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள பல்வேறுபகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த வகையில், எஸ்.பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம்மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி , ஊத்துக்குளி ஊராட்சிஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவுக்கூடம் மற்றும் கூடுதலாக கட்டப்பட்டு வரும்புதிய வகுப்பறை கட்டடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்படும்பாடத்திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டும், ஊத்துக்குளி ஆர்.எஸ்நியாயவிலைக்கடையிலுள்ள அத்தியாவசயப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம்குறித்தும், அதே பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்குவழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளின் தரம் குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டு அறியப்பட்டது.
மேலும் ஊத்துக்குளி தேர்வு நிலை பேரூராட்சி வார்டு எண்.8 கிழக்கு வீதியில்மூலதான மான்ய திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும்வாரச்சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிக்குவழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும், மருந்துகளின்இருப்பு குறித்தும், ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பல்லேகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விரிவான பள்ளிஉள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிகட்டடம் பழுது பார்த்தல் பணி உள்பட மொத்தம் ரூ.3.53 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஊத்துக்குளி டவுன் அங்கன்வாடி மையத்தில் மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கினால் இறப்பைத் தடுக்க தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் இருவார முகாமினை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு ஓஆர்எஸ்., பவுடர் வழங்கப்பட்டது. இந்த முகாம் இன்று முதல் 25.6.2023 வரை நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5-வயதிற்குட்பட்ட 1,77,901குழந்தைகளுக்கு ஓஆர்எஸ் ., பவுடர் வழங்கப்படவுள்ளது. எனவே பெற்றோர்கள் தங்களதுகுழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகளை களைந்து ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
அப்போது துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)ஜெகதீஸ்குமார், ஊத்துக்குளி பேரூராட்சித்தலைவர் பழனியம்மாள்,ஊத்துக்குளி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ்குமார், சாந்தி லட்சுமி, உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
- தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கூடுதல்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
தாராபுரம் :
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.24 கோடியில் கூடுதல்கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தரைத்தளத்தில் வரவேற்பறை, கதிரியக்க அறை சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் அறை ஆய்வகம் 2 எண்ணிக்கையிலும், அல்ட்ரா கதிர்வீச்சு அறை வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை மற்றும் மருந்தக இருப்பு அறைகளும் கட்டப்படுகிறது.
முதல் தளத்தில் டயாலிசிஸ் வார்டு, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு பதிவறை, மருந்து இருப்பு அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 2-ம் தளத்தில் அறுவை அரங்கு 2-ல் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்தும் அறை, பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வதிகள்.3-ம் தளத்தில் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு, மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறைகள்.
4-ம் தளத்தில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர்அறை, பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகள்.5-ம் தளத்தில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம் கழிவறை வசதிகள். 6-ம் தளத்தில் கண் சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) ரத்த வங்கி, கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- அரியலூரில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) திரு.எஸ்.முருகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்
- இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நீளம் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அரியலூர்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிற்கிணங்க நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில், மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர் மற்றும் ஆற்று பாதுகாப்புக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் முட்புதர்கள் மண்டியும் மண்மேடிட்டு தூர்ந்தும் காணப்பட்டது.
மேலும் நீர் வெளியேற்றும் திறன் குறைந்து தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ள நீர் முழுமையாக வடிய இயலாமல் பாசன நிலங்களில், நீர்தேங்கி விவசாய சாகுபடி பயிர்களுக்கும் மற்றும் நிலங்களுக்கும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. எனவே 13 தூர்வாரும் பணிகள் 42.80 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணைக்கு தண்ணீர் வரும் காலத்திற்குள் பணிகளை முடிக்க ஆணையிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து 13 பணிகளும் போர்க்கால அடிப்படையில் துவங்கி 10.06.2023-க்கு முன் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட உள்ளது. இதில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின்கீழ் மருதையாறு வடிநிலக்கோட்டத்தில் அரியலூர் வட்டத்தில் பெரிய நாகலூர் ஓடை, அருங்கால் ஓடை, உடையார்பாளையம் வட்டத்தில் சோழமாதேவி கிராமம் 4-வது புதிய பிரதான வாய்க்கால், சிந்தாமணி ஓடை, சித்தமல்லி நீர்த்தேக்க உபரிநீர் வாய்க்கால், கருவாட்டு ஓடை (பொன்னேரி வரத்து வாய்க்கால்) ஆகியவற்றுக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு சில பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மழைநீர் தேங்கி உள்ளதாலும், ஈரப்பதம் அதிகமாக உள்ளதாலும், தூர்வாரும் பணி சற்று தாமதமாக நடைபெறுவதாக அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைவாகவும், முழுமையாகவும் வரும் 31.05.2023–க்குள் முடித்து கரைகளை பலப்படுத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியும், பாசன வாய்க்கால் மூலமாக பயனடையும் விவசாய நிலங்களின் பரப்பளவு குறித்தும், இதுவரை தூர்வாரப்பட்டுள்ள நீளம் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறுகையில், தற்போது வரை 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடையும் போது சுமார் நான்காயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடையும் என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
- பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மங்குழி பகுதியில் மூலதன மானிய நிதிதிட்டத்தின் கீழ் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சமும், பொது நிதியில் இருந்து ரூ.26 லட்சமும் என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பில் 35 மீட்டர் நீளம் மற்றும் 5.15 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியினையும், வேடன் வயல் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் 12 மீட்டர் நீளம் மற்றும் 6 மீட்டர் அகலத்தில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும், தலைகுந்தா, கல்லட்டி, தெப்பக்காடு சாலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.199 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணியையும் நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜல்ஜீவன் மிஷன், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பொதுநிதி செலவினம் போன்ற பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா, கூட லூர் வருவாய் கோட்டாட்சியர் முகம்மது குதுரதுல்லா, கூடலூர் நகராட்சி ஆணை யாளர் பிரான்சிஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிகண்டன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, பொறியாளர் ஆல்துரை, கூடலூர் தாசில்தார் சித்த ராஜ், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
- நோயாளிகளுக்கு உயர்தரமான சிறப்பான சிகிச்சையினை தொடர்ந்து வழங்க சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை–களின் சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண–சரஸ்வதி முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித்துறை அரசு கூடுதல் தலை–மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வை–யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஜெயங் கொண்டம், மேலக்குடி–யிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஜெயங் கொண்டம் தெற்கு மற்றும் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்தும், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்து, சரியான நேரத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், பள்ளி குழந்தைக–ளுக்கு தொடர்ந்து சரியான நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஜெயங் கொண்டம் ஆதிதிரா–விடர் நல மாணவி–யர் விடுதியினை பார்வையிட்டு, விடுதியின் அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு செய்தார். மேலும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு, மருத்துவ–மனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். சிகிச்சை பெற வருகை தந்த நோயாளிகளிடமும் சிகிச்சையின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். மேலும், நோயாளிகளுக்கு உயர்தரமான சிறப்பான சிகிச்சையினை தொடர்ந்து வழங்கவும் சம்மந்தப்பட்ட மருத்துவர்களுக்கு அறிவு–றுத்தினார். மேலும், ஆண்டி–மடம் ஊராட்சி ஒன்றியம், விளந்தை அரசினர் பெண் கள் உயர்நிலைப் பள்ளி–யில் ரூ.6.77 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணி–களை பார்வையிட்டு, கட்டுமான பொருட்களின் தரம், பணிகள் ஆரம்பித்த நாள், பணி முடிவடையும் நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்ட–றிந்து ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை தரமான முறையில் விரை–வாக கட்டி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஆண்டிம–டம் வட்டாட்சியர் அலுவல–கத்தினை பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமக்கக்கப்பட்டு வரும் பதிவே–டுகள் குறித்தும், ஆன்லைன் பட்டா மாறுதல் மற்றும் பிற சேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ் களை தொடர்ந்து விரை–வாக வழங்கவும் அலுவலர்க–ளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவல–கத்தினை பார்வையிட்டு, பணிகள் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பிற பணிகள் குறித்து கேட்ட–றிந்து ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கான அத்தி–யாவசிய பணிகளில் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றவும் அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தி–னார். மேலும், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சிந்தா–மணி ஊராட்சி மன்ற அலுவ–லகத்தினை பார்வையிட்டு, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, கீழ சிந்தாமணி நடுத்தெருவில் ரூ.9.29 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட கால் வாய் அமைத்தல் பணியை–யும், மேல சிந்தாமணி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பயனா–ளிகளையும் பார்வை–யிட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசின் திட்டப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா சம்மந்தப்பட்ட அலுவ–லர்களுக்கு அறிவுறுத்தினார்.
- புதுச்சத்திரம் வட்டாரத்தில் அயர்ன்வாம் திட்ட பகுதிகளை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர்.
- விதை பண்ணை குழுவிற்கு வழங்கப்பட்ட சூழல் நிதி முறையாக ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்டுள்ளதா குறித்து ஆய்வு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் வட்டாரத்தில் அயன்வாம் திட்டம் பகுதி 2, திருமணிமுத்தாறு உபவடிநீர் பகுதி கிராமத்தில் உலக வங்கி குழு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆய்வு விவசாயிகளுடன் செயல்பாடு, விதை, பண்ணை அமைத்தல், விதைப் பண்ணையின் மூலம் கொள்முதல் செய்யப்படும் விதைகளின் விற்பனை குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது விதை பண்ணை குழுவிற்கு வழங்கப்பட்ட சூழல் நிதி முறையாக ஆண்டுதோறும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளுக்கு தரமான சான்று பெற்ற விதைகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்குமாறு கூறினர்.
தரமான விதைகளை உற்பத்தி செய்வதற்காக விவசாயிகளுக்கு பாசிப்பயறு கரு விதை சோளம் கே-12 கரு விதை நிலக்கடலை டி.எம். பி 14 கருவிதை உயிர் உரங்கள் உயிரியல் காரணிகள் ஆகிய இடுபொருட்கள் ஆய்வு குழுவினர் வழங்கினர்.
கூட்டத்தில் போது வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ராஜகோபால், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பேபி கலா, வேளாண்மை உதவி இயக்குனர் இந்திராணி, வேளாண்மை அலுவலர் துணை வேளாண்மை அலுவலர் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இக்கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 30 ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இன்று திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் லலிதா, சீர்காழி கோவில் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான், மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன் எம்.எல்.ஏ , மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்கு–பேரன் உடன் இருந்தனர். தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோயிலிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்