என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "interim stay"
- ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு.
- ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விநியோக உரிமைக்கான ரூ.1.84 கோடி பாக்கி தொகையை வழங்கும் வரை படத்தை வெளியிடக்கூடாது என ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம், ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.
இரண்டாம் குத்து படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், ஒப்பந்தப்படி 4.85 கோடியில் 2 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.
மத்தியஸ்தர் உத்தரவுப்படி பணத்தை வழங்காமல் ராக்போர்ட் நிறுவனம் பிசாசு 2 படத்தை தயாரித்து வெளியிட உள்ளதாக பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், பிசாசு-2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
- வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.
அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குரூப் 2 தேர்வு அறிவிப்பில், இறுதிவிடை குறித்து, விடைத்தாள் நகல் பெறுவது குறித்த விதிகளை சட்டவிரோதம் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
- 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் தடை 6 மாதத்தில் காலாவதி ஆகி விடும் என தீர்ப்பளித்தது
- காலதாமதம் நடைமுறை சிக்கல்களாலும் ஏற்படலாம் என இன்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது
கடந்த வருடம், ஏசியன் ரீசர்ஃபேசிங் ஆஃப் ரோட் ஏஜென்சி (Asian Resurfacing of Road Agency) எனும் நிறுவனத்தின் இயக்குனருக்கும் மத்திய புலனாய்வு துறைக்கும் (CBI) இடையே நடைபெற்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச், உயர் நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் வழங்கும் "இடைக்கால தடை உத்தரவு" (interim stay) என்பது 6 மாதங்கள் கடந்தததும் - பிரத்யேகமாக நீதிமன்றத்தாலேயே நீட்டிக்கப்படாத நிலையில் - தானாக செயலற்றதாகி விடும் என கடந்த 2018 டிசம்பர் 1 அன்று தீர்ப்பளித்தது.
இதன் விளைவாக, விசாரணை அமைப்புகளுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பெற்றவர்கள், 6 மாத காலகட்டத்திற்கு பிறகு எந்த விசாரணை அல்லது அதிகாரபூர்வ நடவடிக்கைகளை அந்த அமைப்புகள் நிறுத்தி வைக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது எனும் நிலை ஏற்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்தான மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளை (ஏ.எஸ்.ஓகா, ஜே.பி.பர்திவாலா, பங்கஜ் மிதால் மற்றும் மனோஜ் மிஸ்ரா) கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அந்த தீர்ப்பிலிருந்து மாறுபடுவதாக தெரிவித்து இன்று அதனை ரத்து செய்தது.
இது குறித்து 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தெரிவித்ததாவது:
ஒரு நபருக்கோ, அல்லது நிறுவனத்திற்கோ, அல்லது அமைப்பிற்கோ எதிராக விசாரணை அல்லது நடவடிக்கை தொடங்கப்பட்ட பிறகு, அது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், வழக்கு விசாரணை முடியும் வரை அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிறப்பிக்கும் தடையுத்தரவு காலவரையற்றதாக இருந்து, தொடர வேண்டிய வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நீடித்து கொண்டே சென்றால், நியாயமான சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை தொடர்வதிலும், தங்கள் கடமையை செய்வதிலும், அதிகார மையங்களுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் சிக்கல் ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கிறோம்.
ஆனால், நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஏற்படும் பெரும்பாலான காலதாமதங்கள், வழக்கை எடுத்து கொள்வதில் ஏற்படும் தாமதம், நீதிமன்ற விடுமுறை போன்ற பல காரணங்களை உள்ளடக்கியது.
எனவே, 6 மாதத்தில் தடையுத்தரவு தானாக காலாவதியாகி விடும் என்பது அந்த உத்தரவை போராடி பெற்ற மனுதாரர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகலாம்.
எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
இவ்வாறு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விளக்கம் அளித்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்