search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadayam"

    • கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி ஊரணியில் 100 பனைவிதைகள் விதைப்பு பணி நடைபெற்றது.
    • தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேமராதா ஜெயம் முதல் பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள புங்கம்பட்டி ஊரணியில் 100 பனைவிதைகள் விதைப்பு பணி நடைபெற்றது. தெற்கு மடத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் பிரேமராதா ஜெயம் முதல் பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சிவக்குமார், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியன் வெங்காடம்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார். மாவட்ட உதவி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி திருமலை முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொருள் செல்வி, அம்பிகா , சரஸ்வதி, விஜயா, ரேகா, பற்றாளர் அசோக், ஊராட்சி செயலர் பாரத், வேளாண் துறை அதிகாரி, பொறியியல் துறை உதவி பொறியாளர், கால்நடை மருத்துவர் , வெங்காடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது.
    • இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சி ராஜாங்கபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 9.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார். இதில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள் நாகராஜன், சுகிர்தா , ஊராட்சி செயலர் மூக்காண்டி, மற்றும் மாரித்துரை , முப்புடாதி, அழகையா, முருகையா, சுப்பிரமணியன், கணபதி, சீவலமுத்து, குடிநீர் இயக்குபவர் குமார், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரம்பை மண் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
    • 3 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை ஓட்டி வந்த டிரைவர்களையும் கைது செய்தனர்.

    நெல்லை:

    கடையத்தில் குளங்களில் இருந்து கரம்பை மண் எடுத்து செல்வதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளுக்கு அவற்றை எடுத்து சென்று விற்பனை செய்வதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து கடையம் சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில ரோந்து சென்றனர். அப்போது கரம்பை மண் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது அவர்கள் உரிய அனுமதி சீட்டு இல்லாமலும், விவசாயத்தி ற்காக அல்லாமல் விற்பனைக்கு செங்கல் சூளைக்கு கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து 3 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஓட்டி வந்த டிரைவர்களான கடையம் திரவியம் நகரை சேர்ந்த மாரியப்பன்(வயது 45), அழகப்பபுரம் ராஜா(20), மீனாட்சிபுரம் ரவி(37) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் தப்பியோடிய கடையம் திரவியம் நகரை சேர்ந்த ராஜன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு 5 வகையான பழச்செடிகளின் தொகுப்பு 75 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
    • தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

    ஆழ்வார்குறிச்சி:

    கடையம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மா, நெல்லி,எலுமிச்சை, சீதாப்பழம், மாதுளை போன்ற 5வகையான பழச்செடிகளின் தொகுப்பு 75 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்குடி பகுதியில் விவசாயிகளுக்கு பழச் செடிகளின் தொகுப்பு வழங்கப்பட்டது. தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியின்போது தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினார். இதில் தோட்டக்கலை அறிவியல் விஞ்ஞானி இளவரசன், துப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து மற்றும் முன்னோடி விவசாயிகளான ஏழுமலை, உலகநாதன், முத்துக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கடையம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ஞானசேகரன், தோட்டக்கலை அலுவலர் ஷபா பாத்திமா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கோவிந்தராஜன், திருமலைகுமார், பார்த்தீபன், பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் பரி பேதுரு ஆலய வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் கண் பரிசோதனை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் பரி பேதுரு ஆலய வளாகத்தில் கடையம் பாரதி அரிமா சங்கம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், டாக்டர் அகர்வர்வால் கண் மருத்துவமனை மற்றும் தென்காசி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக பெடரல் வங்கி கிளை மேலாளர் பொன்னம்மாள், கடையம் பாரதி அரிமா சங்க தலைவர் அரிமாகாளிதாஸ், ஆசீர்வாதபுரம் ஆசீர் மோசஸ்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    முகாமில் தென்காசி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் பாரதிராஜன், பாத்திமா, அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் மாணிக்கம் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் மற்றும் கண் பரிசோதனை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் கேன்சர் விழிப்புணர்வு படக்காட்சி ஒளிபரப்பபட்டது. முகாமில், கடையம் பாரதி அரிமா சங்க செயலாளர் அரிமா தயாள லெட்சுமணன், பொருளாளர் அரிமா கோபால், அரிமாகுமரேசன், அரிமா இந்திரஜித், அரிமா முருகன், அரிமா இளங்கோ, ஏ அரிமா அழகுதுதுரை, அரிமா அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    • கோவிந்தபேரி மற்றும் ராஜாங்கபுரத்திற்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், ஷோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் ஒரு லட்சம் பனை மரங்கள் வளர்ப்பு திட்டம் மற்றும் ராஜாங்கபுரத்தில் ரூ.42 லட்சத்தில் 2 அடுக்குமாடி சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா, கோவிந்த பேரி மற்றும் ராஜாங்கபுரத்திற்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் திறப்பு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    கலெக்டர் ரவிச்சந்திரன்

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலை வகித்தார். இதில் இந்திய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், ஷோகோ நிறுவனருமான ஸ்ரீதர் வேம்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    கோவிந்த பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி.கே. பாண்டியன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கடையம் யூனியன் கமிஷனர் திருமலை முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழக்கடையம் பூமிநாத், ஏ.பி. நாடானூர் அழகுதுரை, மந்தியூர் கல்யாண சுந்தரம், பொட்டல்புதூர் கணேசன், திருமலையப்பபுரம் மாரியப்பன், கீழ ஆம்பூர் மாரி சுப்பு , ரவணசமுத்திரம் முகமது உசேன், கோவிந்த பேரி பஞ்சாயத்து துணை தலைவர் இசேந்திரன்,ஊராட்சி செயலர் மூக்காண்டி, மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராமையா, கடையம் தெற்கு வட்டாரத்தலைவர் முருகன், ஊர் தலைவர்கள் சிங்கக்குட்டி , தட்சிணாமூர்த்தி, சுப்பையா, கிருஷ்ணன், கணேசன், நாகராஜன், மாணிக்கம், மாரியப்பன், பூலோக பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வீட்டுக்கு ஒரு மரம்

    நிகழ்ச்சியில் பேசிய கலெக்டர் ரவிச்சந்திரன், மரங்கள் இல்லாததால் தான் பருவகால மாற்றங்களினால் மழை பெய்வதில்லை. அனைத்து ஊராட்சிகளிலும் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்து பஞ்சாயத்து களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். என்றார். மேலும் மரங்கள் வளர்ப்பதினால் உண்டாகும் நன்மைகளையும் எடுத்து கூறினார்.

    நிகழ்ச்சியின்போது தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

    முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் ஆகியோர் ராஜாங்கபுரம் மற்றும் கோவிந்த பேரியில் சாலை ஓரங்களில் பனை விதைகளை நடவு செய்து கல்வெட்டினை திறந்து வைத்தனர்.

    இதில் முதற்கட்டமாக 10 ஆயிரத்து 8 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

    • உயிரிழந்த கடையம் பகுதியை சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி கடையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
    • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம், கடையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்ற பஸ் குன்னூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து , விபத்துக்குள்ளானதில் கடையம் பகுதியை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 9 பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இதையடுத்து உயிரிழந்த கடையம் பகுதியை சேர்ந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி கடையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். முன்னதாக அவர்களது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், ஆர்.டி.ஒ. லாவன்யா, தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், மாநில சுற்றுச்சூழல் அணித்தலைவர் பூங்கோதை ஆலடிஅருணா, மாவட்ட ஊராட்சித்தலைவர் தமிழ்செல்விபோஸ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, சேக்தாவூது, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரவிசங்கர், சீனித்துரை, சுரேஷ், பேரூர் செயலாளர் லட்சும ணன்,முன்னாள் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், தென்காசி யூனியன் துணை சேர்மன் கனகராஜ் முத்து பாண்டியன், மாவட்ட துணைச் செய லாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புளியரையில் இருந்து கேரளா செல்லும் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • கிராம சாலைகள் அதி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை.

    கடையம்:

    தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் புளியரையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலை மலைப்பாதையாகவும், குறுகிய சாலையாகவும் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தென்காசி மாவட்ட மக்கள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்லும் போது போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு பாதிப்புக்கு உள்ளாகிறது.

    தென்காசி மாவட்டத்தி லிருந்து வளைகுடா நாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் போக்கு வரத்து நெரிசலால் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். அதிக அளவில் கனரக வாகனங்கள் கனிமங்களை ஏற்றி செல்வதால் சாலைகள் பாதிக்கப்படுவதோடு சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் மாசு படுகிறது.

    மேலும் குறைந்த யூனிட் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு அதிக யூனிட் கனிம வளங்களை ஏற்றி செல்வதால் தமிழக அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படுகிறது. தற்போது பெரும்பாலான குவாரிகள் உள்ள கிராம சாலைகள் அதி கனரக வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியே கனரக வாகனங்கள் செல்வதால் சாலைகள் சேதம் அடைகிறது.

    கிராமச் சாலைகள் அதிகனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்றது தானா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட்ட வேண்டும்.

    எனவே கேரளாவிற்கு புளியரை வழியாக அதிகனரக வாகனங்கள் செல்ல நிரந்தரமாக தடை செய்ய உரிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு புளியரை சோதனை சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மூலம் கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்தது.
    • அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் சிறப்பு தீர்மானம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும்.

    கடையம்:

    முதல்-அமைச்சருக்கு, தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் இருந்து குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் நடக்கும் கட்டுமான பணிகள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் அந்த மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை அவர்கள் பயன்படுத்துவ தில்லை.

    இந்நிலையில் கனிம வள கொள்ளையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மூலம் கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்தது. இதன் மூலம் கனிம வள கொள்ளை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கும் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது.

    கேரளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பெரும்பா லான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாது காப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டது. இதனால் அம்மாநிலத்தில் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போலவே தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தான் அமைந்துள்ளது. இந்த பகுதிகளை ஏன் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கூடாது? மேலும் கனிம வளங்கள் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படு வதால் விவசாயமும் அடியோடு அழிவதுடன் அடுத்த தலைமுறைகளுக்கு இந்த கனிம வளங்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

    அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் சிறப்பு தீர்மானம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும். தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களையும் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விழாவை முன்னிட்டு தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
    • இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள பாப்பாங்குளம்- மயிலப்பபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவில் ஆவணி கொடை விழா கடந்த 5-ந்தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று மதியம் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் பால்குட ஊர்வலமும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மியடித்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் கிடா வெட்டும் நிகழ்வும், மஞ்சள் பானையில் நீராடும் நிகழ்ச்சி நடை பெற்றது. விழா விற்கான ஏற்பாடு களை மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த விழாக் கமிட்டியினர் செய்தி ருந்தனர்.

    • கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
    • புதியமின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 9.35 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் மூலம் ரவணசமுத்திரம் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் ஊராட்சி சின்னத்தெரு கிட்டகல் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்நிலையில் போதிய மின் அழுத்தம் இல்லாததால் இக்கிராமத்தில் கடந்த 15 வருடங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    இதையடுத்து ரவணசமுத்திரம் ஊராட்சிமன்றத் தலைவர் முகம்மது உசேன், மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததையடுத்து புதியமின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 9.35 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் மூலம் ரவணசமுத்திரம் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டது. பொதுமக்கள் புதிய மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் முகம்மது உசேன், மின் வாரிய கல்லிடைக்குறிச்சி கோட்ட பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி, உதவிப் பொறியாளர்கள் ஜீவானந்தம், விஜயராஜ், ரவணசமுத்திரம் ஜமாத் தலைவர் சாகுல் கமீது, செயலாளர் செய்யது அப்பா, சிராஜிதீன், ரிபாய், ஊராட்சி துணைத் தலைவர் ராமலட்சுமி, ஊராட்சி உறுப்பினர்கள் கோமதி, மொன்னா முகமது, முகம்மது யஹ்யா, மெகருண்நிஷா, ஜானகிராமன், கனகா, முகைதீன் அப்துல் காதர், ஜமீலா காத்தூன், சமூக ஆர்வலர் நாகூர் மீரான் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×