என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "knife attack"
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராஜ் என்ற சிவக்குமார் (வயது 30). இவர் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஆண்- பெண்களுக்கான அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) நடத்தி வருகிறார்.
நேற்று மாலை இந்த பியூட்டி பார்லருக்கு ஒருவர் போன் செய்து மசாஜ் செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு கடையில் இருந்த பெண் ஊழியர் மசாஜ் செய்ய ஆண் ஊழியர் இல்லை என்று தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் 4 பேர் கொண்ட கும்பல் பியூட்டி பார்லருக்கு வந்தது. அவர்கள் தங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று பெண் ஊழியர்களை மிரட்டினர்.
மேலும் பியூட்டி பார்லரில் இருந்த சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். இதனை பார்த்ததும் பெண் ஊழியர்கள் அலறினர். ஆனால், ஆத்திரம் அடைந்த கும்பல் பெண் ஊழியர் ஒருவரை கத்தியால் குத்தியது.
இதையடுத்து பெண் ஊழியர்கள் அனைவரும் அங்குள்ள அறைகளுக்குள் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டனர். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாகீர் உசேன், தயாளன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ரகளையில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை மடக்கி பிடித்தனர். மேலும் கத்தி குத்தில் காயம் அடைந்த பெண் ஊழியரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கருவடிகுப்பத்தை சேர்ந்த கலையரசன், (34), பாலமுருகன் (29), சபரிநாதன் (28) மற்றும் அகிலன் (28) என்பது தெரியவந்தது.
இதில் ரவுடியான கலையரசன் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கலையரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பியூட்டி பார்லரில் புகுந்து ரவுடி கும்பல் அட்டகாசம் செய்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகப்பா சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(வயது 45). இளநீர் வியாபாரி. இவர் காட்டுவேகாக்கொல்லை பகுதிக்கு இளநீர் கொண்டு சென்றார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(40). அவரது மகன்கள் ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோர் கந்தவேலிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். பின்பு அவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த கந்தவேல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் கடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார். ஜெயசந்திரன், மதியழகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
மதுரை:
மதுரை தெற்குவாசல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட காஜா தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். இவரது மகன் பஷீர் முகமது (வயது 26). இவர் கே.கே. நகர் 80 அடி ரோட்டில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனையகத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை பஷீர் முகமது தனது நண்பர்கள் பெருங்குடி பள்ளி வாசல்தெருவை சேர்ந்த சுல்தான் அலாவுதீன், வில்லாபுரம் ஹவுசிங் போர்டை சேர்ந்த வீரார் அப்துல்லா (28), தெற்கு மாசி வீதி முகமது யூசுப் (25) மற்றும் சிலருடன் சோலையழகுபுரத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுகுடிக்க சென்றார்.
அப்போது சுற்றுலா செல்வது தொடர்பாக பஷீர்முகமதுவுக்கும், சுல்தான் அலாவுதீனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இதனால் சுல்தான் அலாவுதீன் அங்கிருந்து சென்றுவிட்டார்.
மதுகுடித்துவிட்டு பஷீர்முகமது, நண்பர்கள் வீரார் அப்துல்லா, முகமது யூசுப் ஆகியோர் பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுல்தான் அலாவுதீன் மீண்டும் அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த சுல்தான் அலாவுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பஷீர் முகமதுவை கொடூரமாக குத்தினார். இதை தடுக்க வந்த வீரார் அப்துல்லா, முகமது யூசுப்புக்கும் கத்திக் குத்து விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அங்கிருந்த வர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பஷீர் முகமது பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுல்தான் அலாவுதீனை தேடி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் மாலதி. திருமலாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வேலைகளை முடித்து விட்டு வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர் ஒருவர் நைசாக கதவைத் திறந்து உள்ளே புகுந்தார். அப்போது ஆசிரியை மாலதியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயற்சித்தார். ஆனால் அவர் நகையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையன் மாலதியை கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார்.
படுகாயமடைந்த ஆசிரியை மாலதி போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போடி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மணி (வயது 21) என்பவர்தான் ஆசிரியை மாலதியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலசொக்கநாதபுரம்:
போடி பஸ்நிலையம் அருகே வசிப்பவர் சங்கரநாராயணன். இவரது மனைவி மாலதி(வயது42). திருமலாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இன்று காலை மாலதி வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வாலிபர் ஒருவர் மாலதியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை அங்கிருந்து செல்லும்படி மாலதி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாலதியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.
வலி தாங்கமுடியாமல் மாலதி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடினர். வாலிபர் கையில் ரத்தக்கறையுடன் கத்தியை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றனர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த மாலதியை போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியையை கத்தியால் குத்தியவர் மாணவரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக மர்மநபர் கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்