search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lighting"

    • சேதம் அடைந்த மின்னணு கழிவுகளான சுவிட்போர்டுகள், விளக்குகள் டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.
    • பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீவிர நடவடிக்கைகள் கொடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் பாலித்தீன் பைகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி விற்கும் கடைகளின் உரிமை–யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் டன் கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் மின்னணு கழிவுகள் சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு வாரகாலமாக தஞ்சை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் உள்ள 14 கோட்டங்களிலும் இந்த மின்னணு கழிவுகளான சேதம் அடைந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மின்விசிறிகள், டியூப் லைட்கள், சுவிட்போர்டுகள், விளக்குகள், என டன் கணக்கில் சேகரிக்கப்–பட்டுள்ளன.

    அவ்வாறு சேகரிக்கப்–பட்டுள்ள பொருட்கள் தஞ்சை திலகர் திடலில் காட்சிபடுத்தப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கூடை தயாரித்தல், பிளாஸ்டிக் மாற்றாக உபயோகப்படுத்தப்படக் கூடிய பொருட்களும் காட்சி படுத்தப்பட்டன.

    இவற்றை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜயபிரியா, தாசில்தார் சக்திவேல் மற்றும் அதிகாரிகள், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.

    பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியும் மேற்கொண்டனர். அதை தொடர்ந்து கலெக்டர் திலகர் திடல் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டதோடு, மின்னணு கழிவுகள் சேகரிப்பு வாகனத்தையும் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 15 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இன்னும் 3 நாட்கள் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சேகரிப்பு பணியில் 15 வாகனங்கள், 250 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 100 டன் வரை மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட உள்ளன.

    இந்த கழிவுகள் அனைத்தும் மறு சுழற்சிக்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது"என்றார்.

    • 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
    • மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரு.5 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து முடிந்தன.

    தஞ்சை மாநகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ.3 கோடி மதிப்பில் 1200 மீட்டர் தூரத்திற்கு நடைபாதை, 750 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை, 75 மின்விளக்குகள், 75 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.2 கோடியில் திறந்தவெளி ஸ்கேட்டிங் தளம், கையுந்து பந்து மைதானம் மேம்படுத்துதல், கழிவறை வசதி அமைத்தல், நுழைவு வாயில் அமைத்தல் போன்ற பணிகளு முடிக்கப்பட்டுள்ளன.

    இந்த மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் வரவேற்றார்.

    விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அன்னை சத்யா அரங்கில் முடிக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்தார்.

    முதலில் ஸ்கேட்டிங் மைதானத்தை திறந்து வைத்து மாணவ-மாணவிகளுக்கான ஸ்கேட்டிங் பயிற்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் நடைபாதை, கையுந்துபந்து மைதானத்தை திறந்து வைத்து மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன் , டி.கே.ஜி.நீலமேகம் , கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார்மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு சென்று மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா படத்தை திறந்து வைத்தார்.

    முன்னதாக தஞ்சைக்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விளாங்குடி, பள்ளியக்கிரஹாரம் பிரிவு சாலை, கரந்தை பஸ் நிறுத்தம், கொண்டிராஜபாளையம் ரவுண்டானா, பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை, புதுஆற்றுப்பா லம், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    • 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கும் நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி 466 ஆம் ஆண்டு கந்தூரி விழா டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாகூர் தர்காவின் மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் நாகூரே விழா கோலம் பூண்டுள்ளது.

    தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது கண்டு பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கழுகு பார்வை காட்சிகள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் 02 ஆம் தேதி நாகையிலிருந்து சந்தன கூடு ஊர்வலமும் 03ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    • வாலிபால் மைதானம், மின்னொளி விளக்கு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
    • பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பதை கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் உள்ள அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் ஸ்கேட்டிங் மைதானம், வாலிபால் மைதானம், நடைப்பயிற்சி மேற்கொள்ள பாதை, மின்னொளி விளக்கு, கழிவறை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அரசின் முதன்மை செயலாளர் அபூர்வா இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் எந்த அளவுக்கு முடிந்துள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.

    பணிகளை விரை வாகவும் தரமாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை.
    • தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அவைகூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபால், மேலாளர் காதர்கான், நகரமைப்புஆய்வாளர் நாகராஜன், வருவாய்ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை அலுவலர் ராஜகணேஷ் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,

    வேல்முருகன்: சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை. அதேபோல் சாலைகளில் வாழைமரங்கள், கீற்றுகள் போன்ற குப்பைகள் அகற்றபடாமல் மாதகணக்கில் கிடக்கிறது.

    சாமிநாதன்: ஈசானியத்தெரு எரிவாயு தகண மேடை டெண்டர் விடாமல் ஏன் காலதாமதமாகிறது. முன்பு நடத்தி அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு தகணமேடை நடத்திட வேண்டும்.

    ஆணையர் ராஜகோபால்: எரியாயு தகண மேடை டெண்டர் விரைவில் விடப்படும்.

    ராஜசேகரன்: அரசு மருத்துவமனை கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது என பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தூய்மைபணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    கிருஷ்ணமூர்த்தி: எனதுவார்டில் புதிதாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும்.

    முபாரக் : சீர்காழி மணிகூண்டு பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்காலிகமாக பேட்ஜ் பணியாவது செய்து அதனை நிரப்பவேண்டும்.

    ராஜேஷ்: சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் பயணிகளை இறக்கவிட்டு செல்வதை தடுத்திட தீர்மானம் கொண்டுவரவேண்டும்.

    தலைவர் துர்காபரமேஸ்வரி: சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடைவிதிக்கவும், புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படாமல் நடவடிக்கை எடுத்திடவும் கலெக்டர், கோட்டாட்சியர், போக்குவரத்து துறை அதிகாரிகளை அனைத்து உறுப்பினர்களும் நேரில் சென்று வலியுறுத்துவோம். அனைத்து வார்டுகளிலும் வாரம் 1 முறை மெகா தூய்மைபணி நடத்தப்படும். நகரை தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

    ×