search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M. K. Stalin"

    • முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனுவை நகர்மன்ற தலைவர் வழங்கினார்.
    • சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டு கோள் விடுக்கிறோம்.

    சிவகங்கை

    சிவகங்கை தி.மு.க. நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் முதல் அமைச் சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் விடு தலைக்கு தமிழ்நாட்டிற்கு தனிச்சிறப்பு உண்டு. அதில் மாமன்னர் மருதுபாண்டி யர்கள் வீரம், கொடை, சாதி மதம் பாராமல் சமூக நீதி பார்வையோடு இந்திய நாட் டின் விடுதலைக்கு பாடுபட்ட வரலாற்று சிறப்புமிக்க மாமன்னர் மருது பாண்டியர் களின் நினைவை போற்றும் விதமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெண்கல சிலையை வைப்பதற்கு ஆணை பிறப் பித்த முதல் அமைச் சருக்கு சிவகங்கை நகர்மன்றத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதுபோல சிவகங்கையை ஆண்ட மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் வெண்கல சிலை வைப்பதற்கு ஆணை பிறப்பிக்க சிவகங்கை நகர்மன்றத்தால் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. (நகர்மன்ற தீர்மானம் எண்.202) மேலும் சிவகங்கை நகரில் மன்னர் மருதுபாண்டியர்களுக்கு வெண்கல சிலையை அமைப்பதற்கும், சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு மன்னர் மருதுபாண்டியர் களின் பெயரை சூட்டவும், காளையார்கோவில் நினைவிடம் அருகில் மணி மண்டபம் அமைக்கவும், சிவகங்கை நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற சிவகங்கை மாவட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணலி வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க நிதி குழு தலைவர் சந்தனா என். சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர், நிதிக்குழு செயலாளர் சமுத்திர பாண்டியன், பொருளாளர் எஸ். எஸ். காட்வின், செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராஜேஷ், வேதா, துணை தலைவர் ராதாகிருஷ்ணன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்ரம ராஜாவின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 50 ஆயிரத்துக்குட்பட்ட நிலுவை வரிகளை அடியோடு ரத்து செய்தும் அதற்கு மேல் உள்ள நிலுவை வரியினை எந்தவித அபராதமும் இன்றி, 50 சதவீதம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்க இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை கணேஷ், கனிராஜன், வேல்முருகன், சூர்யா, சரவணன், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி தலைவி சுபத்ரா, மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.6.2022 அன்று திறந்து வைத்தார்.
    • அருங்காட்சியகத்திற்கு டெல்லியில் “உலகளாவிய வடிவமைப்பு” விருதுகள் வழங்கப்பட்டது

    சென்னை:

    சென்னை காமராஜர் சாலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள "அனைத்தும் சாத்தியம்" என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.6.2022 அன்று திறந்து வைத்தார்.

    இந்த அருங்காட்சியகமானது மாற்றுத்திறனாளிகள் உபயோகப்படுத்தும் 200-க்கும் மேற்பட்ட உதவி உபகரணங்கள் மற்றும் அவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அங்கு வருகை புரிபவர்களுக்கு அவர்கள் தனிச்சையாக வாழ்வதற்கு ஏதுவாக காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்திற்கு டெல்லியில் "உலகளாவிய வடிவமைப்பு" விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதினை நலத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார்.
    • மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார்.

    கோவை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை கணபதியில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதயாத்திரையை மத்திய தகவல் ஒலிபரப்புதுறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

    இந்த பாத யாத்திரை இரவு 10.30 மணியளவில் இடையர்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது. அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    கோவை பா.ஜனதாவின் கோட்டை. அந்த அளவுக்கு கோவையில் கட்சியினர் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துள்ளார்கள். இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் மோடி ஒவ்வொருவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

    பாதயாத்திரையில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் காரணமாக 2 கி.மீ தூரத்தை கடக்க 3 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. நேரமின்மை மற்றும் போலீசாரின் அறிவுறுத்தல் படியே 6 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் வந்தேன்.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 400 எம்.பிக்களை பெற்று மீண்டும் பிரதமாக மோடி அமர்வார். தமிழகத்திலும் 39 இடங்களையும் பெறுவதே நமது இலக்கு.

    பிரதமர் மோடி தமிழ் மீது அதிக பற்று வைத்துள்ளார். தமிழ் மண்ணையும், மக்களையும், கலாசாரத்தையும் மோடி மிகவும் நேசிக்கிறார். அவருக்கு தமிழ் மொழியை சரளமாக பேச முடியவில்லை என்பது தான் வருத்தம். அவர் தமிழ் மொழியில் சரளமாக பேசிவிட்டால் தமிழகத்தையும் ஆட்சி செய்து விடுவார்.

    பிரதமர் மோடி குடும்ப அரசியலுக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார். ஏழைகளுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. இதனால் உலகளவில் இந்தியா 5-வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் உலகின் 3-வது பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும் என்று மோடி கூறியுள்ளார். பொருளாதார முன்னேற்றம் அடைய நேர்மையான ஊழல் இல்லாத அரசால் தான் முடியும். அது பா.ஜ.க அரசு அளிக்கும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ள 11 அமைச்சர்களின் மீது ஊழல் வழக்கு இருக்கிறது.

    இந்தியாவின் வளர்ச்சிக்கு கோவை மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் மின் கட்டண உயர்வால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு, சொத்துவரி உள்ளிட்ட பல்வேறு வரியை உயர்த்திவிட்டார். தி.மு.க. சனாதன தர்மம், இந்து தர்மத்திற்கு எதிரானது. சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழகத்தில் அவர் மீது பா.ஜ.க.வினர் 400 பேர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையோ, வழக்கோ இல்லை.

    சனாதனத்தை இழிவாக பேசிய உதயநிதிக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டனை தருவார்கள். மேலும் இந்து தர்மம், சனாதனம் மற்றும் நரேந்திர மோடியை பழித்தால் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வரலாறு காணாத தோல்வியை சந்திக்கும்.

    கோவையில் பேசிய நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு கூட்டம் வரும் போது, கட்சிக்கு வரவில்லையே என பேசியிருக்கிறார். படத்திற்கு வந்த கூட்டம் என்பது அவர் நன்றாக நடிப்பதால் வந்தது.

    கட்சி ஆரம்பித்ததில் இருந்து தி.மு.க.வை எதிர்த்து வந்த கமல்ஹாசன் தற்போது தனது தன்மானத்தை மொத்தமாக தி.மு.க.விடம் அடகு வைத்துவிட்டார். அவர்கள் சொல்வதை கேட்கிறார். அவர்களது கம்பெனி படத்தில் நடிக்கிறார். இப்படி எல்லாம் செய்து தனது தன்மானத்தை இழந்ததாலேயே கமல்ஹாசனின் அரசியலுக்கு கூட்டம் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவிற்கு நாளை (15-ந்தேதி) மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கப்ப டுகிறது.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மு.மணி மாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    செம்மொழி நாயகர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க நூலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மதுரை விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம் வரை பல்லாயிரக் கணக்கான தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, எழுச்சிமிகுதியுடன் வரவேற்க வேண்டும்.

    இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்வில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர் கள், துணை அமைப்பாளர் கள், கழக முன்னோடிகள், உள்ளா ட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர், கழக உடன்பிறப்புகள் என பல்லாயி ரக்க ணக்கானோர் பங்கேற்க வேண்டும்.

    இந்த வரவேற்பு நிகழ்வில் பொதுமக்களுக் கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி தி.மு.க.வினர் மிக உற்சாக மாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
    • அமைதியுடனும், உடல்நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு எனது நெஞ்சம் நிறைந்த 50-வது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தாங்கள் எப்போதும் அமைதியுடனும், உடல் நலத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்நன்னாளில் விழைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு திருப்பூர் வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். இதில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வருகிற 24-ந் தேதி கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வடுகபாளையம், மன்றாம்பாளையம், நெகமம் வழியாக திருப்பூர் மாவட்டத்துக்கு இரவு வருகிறார். பல்லடத்தில் உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பல்லடம், மங்கலம் வழியாக திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் பாப்பீஸ் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் காலையில் அந்த ஓட்டலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இந்த மாநாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்கிறார்கள். 25-ந் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு குன்னத்தூர் வழியாக ஈரோடு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    ×