என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Marmachau"
- உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்து செல்வி (27). இவர்களுக்கு 4 வயதில் ஒருமகள் உள்ளார்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு வேலுச்சாமிக்கு கிட்னியில் கல் அடைப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் அவர் 3 நாட்கள் ஓய்வில் இருந்தார்.
மீண்டும் வேலுச்சாமி கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்றார். அப்போது மில்லில் காவலாளியாக வேலை பார்க்கும் சார்லி என்பவர் வழக்கமாக வேலுச்சாமியை தூக்கி விளையாடுவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவரை தூக்கி விளையாடினார். அப்போது நிலைகுலைந்த வேலுச்சாமி தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தார். அவரது வாயிலும் மூக்கிலும் இருந்து ரத்தம் வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வேலுச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் காவலாளி விளையாட்டாக தூக்கியதால் வேலுச்சாமி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமங்கலம் அருகே 14 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.
- தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் மார்கழி வாசகன் (வயது41). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் தனது 43-க்கும் மேற்பட்ட ஆடுகளை சம்பவத்தன்று தனது வீட்டு அருகே உள்ள கொட்டத்தில் அடைத்துள்ளார். அங்கு ஆடுகளுக்கு கழனி தண்ணீர் வைத்துள்ளனர். கழனி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 14 ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி இறந்துவிட்டது
இதனால் அதிர்ச்சியடைந்த மார்கழிவாசகன் இச்சம்பவம் குறித்து வில்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆடுகள் எப்படி இறந்தது? தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.
- சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார்.
- இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.
சேலம்:
சேலம் அருகே உள்ள பெருமாம்பட்டி அடுத்த வலியங்காடு ஓங்காளியம்மன் கோவில் அருகில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் லோகநாதன் (வயது 31). பிளம்பராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில், வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் லோகநாதன் வெளியே சென்றுள்ளார். ஆனால் இன்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.
பிணமாக மீட்பு
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் செம்மண் திட்டு அருகே சாலையோரத்தில், தலையில் ரத்த காயங்களுடன் லோகநாதன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் அருகிலேயே கிடந்தது.
இது குறித்த தகவலின் பேரில், இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த லோகநாதன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக இறந்து போன லோகநாதனின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலையா?
இதில், லோகநாதன் குடும்பத்தினருக்கு ஏற்கனவே நிலப்பிரச்சினை இருந்து வந்ததாகவும், முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், லோகநாதன் எவ்வாறு இறந்தார், அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்