என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mystery gang"
- மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
- பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
- பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான உலக புகழ்பெற்ற அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகலேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலின் 20 அடி உயரம் உள்ள சுற்றுப்புற மதில் சுவர் ஏறி உள்ளே புகுந்த திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்யும்போது குடமுழுக்குக்காக திருப்பணி செய்யும் பணியாளர்கள் பார்த்து கூச்சலிட்டதால் அருகில் குடியிருந்த பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது. தப்பிச்சென்ற மர்ம கும்பல் பற்றி பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பெண்ணாடம் பகுதி பொதுமக்கள் இரவு கோவிலில் ஒன்று திரண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது.
- பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடலூர்:
வடலூர் அருகே ஆபத்தானபுரத்தைச் வடக்கு வீதியில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 55). இளநீர் வியாபாரி. இவர் நேற்று இரவு வீட்டின் வெளிப்புற கதவை பூட்டாமல், குடும்பத்தாருடன் ஒரு ரூமில் படுத்து உறங்கினார். காலையில் எழுந்து ரூமிலிருந்து வெளியில் வர கதவைத் திறந்தார். கதவை திறக்க முடியவில்லை. இதனால் சப்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது ரூமின் வெளிப்புறத்தில் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பூட்டை திறந்து ஆறுமுகம் குடும்பாத்தாரை பொது மக்கள் வெளியில் அழைத்து வந்தனர். வெளியில் வந்த ஆறுமுகம், வீட்டிலிருந்த மற்றொரு ரூமுக்கு சென்றார். அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடி க்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். வெளிப்புற கதவை பூட்டாததால் உள்ளே வந்த கொள்ளையர்கள், ரூமில் படுத்திருந்தவர்கள் வெளியில் வராமல் இருக்க கதவை பூட்டி விட்டனர். பின்னர் மற்றொரு ரூமிற்கு சென்ற கொள்ளையர்கள், பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. பீரோ மற்றும் கதவுகளில் இருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த வடலூர் போலீசார், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் வடலூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
- ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.
- கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியில் பரபரப்பான மாலை வேளையில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 மர்மநபர்களால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு எப்போதும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலையில் எந்நேரமும் வாகன போக்குவரத்தும், உழவர் சந்தை மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் சாலையில் இருபுறமும் ஏராளமான நகர்கள் உள்ளதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன.
இதனால் பொதுமக்கள் அடிக்கடி கடைத்தெருவிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இப்பகுதியில் ஒரு சி நபர்கள் கடைத்தெரு மற்றும் கடைகளுக்கு வரும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் பணத்தை பறித்து செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் நாஞ்சிக்கோட்டை சாலையில் பல வங்கிகளின் ஏ.டி.எம்.களும் அமைந்துள்ளன. இந்த ஏ.டி.எம்.களின் அருகிலும், எதிரிலும் ஒரு சிலர் அமர்ந்து கொண்டு பணம் எடுக்க வருவோரை கண்காணித்து பணத்தை பறித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்படும் பலரும் இதுபற்றி போலீசில் உரிய புகார்கள் அளிப்பதில்லை. இதனால் இந்த மர்ம கும்பலுக்கு இது வசதியாக போய் விடுகிறது.
இந்த மர்மநபர்கள் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாகி கிடப்பதால் பணம் இல்லாதபோது இதுபோன்ற வழிப்பறியில் அடிக்கடி ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு சண்முகாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி. இவரது மகன் ஞானசேகரன் ( வயது 44). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக உள்ளார்.
இந்த நிலையில் இவர் நேற்று மாலை நாஞ்சிக்கோட்டை சாலை பர்வீன் தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஞானசேகரனை வழி மறித்து நிறுத்தினர்.
திடீரென அவர்கள் ஞானசேகரனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். இதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனடியாக அந்த மர்ம நபர்கள் ஞானசேகரன் சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட்டில் சோதனை செய்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.
கழுத்தில் கத்தியை வைத்து இருந்ததால் ஞானசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இதை அடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது,தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இது போன்ற வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் பணம் பறிக்கின்றனர்.
பெண்கள் நடந்து சென்றால் அவர்களின் நகைகளை பறிக்கின்றனர். வாகனத்தில் செல்பவர்களையும் அவர்கள் விடுவதில்லை. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றோம்.
எனவே இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அடிக்கடி போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.
- கோட்டகுப்பம் அருகே பெரிய முதலியார் சாவடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பம் உள்ளது.
- அந்த வழியாக சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே பெரிய முதலியார் சாவடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு இந்த பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் இந்த கொடி கம்பத்தை வெட்டி பின்புறம் உள்ள காலி மனையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இன்று காலை அந்த வழியாக சென்ற விடுதலைச் சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சுமார் 50-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பெரியமுதலியார் சாவடியில் ஒன்று திரண்டனர். அவர்கள் கொடிக்கம்பத்தை வெட்டி வீசிய நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி மித்ரன் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்வோம் என்று கூறியதின் பெயரில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையோர கோட்டகுப்பம் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பெரிய முதலியார் சாவடியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை சேதப்படுத்திய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்