search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Service Scheme Camp"

    • முகாமின் போது மாணவர்கள் ரத்ததான விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல் ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
    • நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து சிவகிரி மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உழவாரப்பணி, விஸ்வநாதபேரி பகுதிகளில் ரத்ததான விழிப்புணர்வு முகாம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம், வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாம், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல், கோம்பை ஆறு படுகையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கேன்களை அப்புறப்படுத்துவது ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளியின் வளாகத்தில் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.

    சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், கல்விக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காசிராஜன், வீரகுமார், மோகன், அருணாசலம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி இதுபோன்று தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.

    இதில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் பாண்டி, கல்வி பணிக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தர தீர்மானிக்கப்பட்டது.
    • நாட்டு நலப்பணித்திட்ட முகாமை பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் கு.பார்வதி மோகன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் லவ்லின் மேபா, துணைத்தலைவர் நம்பி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தர தீர்மானிக்கப்பட்டது. மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.முகாமை பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தொடங்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லதாராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பி.குமார், மகாராஜன், பேரூராட்சி மன்ற அலுவலர்கள் ஆறுமுகம், கலையரசி, நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஆவுடையப்ப குருக்கள், ரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 48 சார்பில், வெள்ளாளன்விளை கிராமத்தில் சிறப்பு முகாம் ஒரு வாரம் நடந்தது.
    • முகாமில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 48 சார்பில், வெள்ளாளன்விளை கிராமத்தில் 'தூய்மை பணியில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் சிறப்பு முகாம் ஒரு வாரம் நடந்தது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். வெள்ளாளன்விளை தூய திரித்துவ ஆலய சேகர தலைவர் தினகரன் சாலமன், சுரேகா தினகரன் சாலமன், பஞ்சாயத்து தலைவர்கள் பரமன்குறிச்சி லங்காபதி, வெள்ளாளன்விளை ராஜரத்தினம், முன்னாள் விலங்கியல் துறை தலைவர் சாமுவேல், ஆலய பரிபாலன கமிட்டி செயலாளர் சாமுவேல் ஞானபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முகாம் நாட்களில் மாணவர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகள், சமூகசேவைகள், விழிப்புணர்வு பேரணிகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தினர். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. இயற்கை விவசாயி முரளி, ஆசிரியர் நாராயணன் ஆகியோர் உரையாற்றினர். இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. டாக்டர்கள் வான்மதி, ஸ்ரீவிக்னேஷ்வரி ஆகியோர் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை, மருந்து மாத்திரைகள் வழங்கினர். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், ஐடியல் குரூப் அருள்ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாம் நிறைவு நாளில் கல்லூரி முதல்வர் மகேந்திரன் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வாழ்த்தி பேசினார். ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கவிதா செய்து இருந்தார்.

    ×