search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Unity Day"

    • ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
    • அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்.

    இன்று அக்டோபர் 31ம் தேதி, இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள். இந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி குஜராத் மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதன்படி குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமைப் பேரணி மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "நாடுகள் பிரிந்து செல்கின்றன, ஆனால் இந்தியாவை நெருங்கி வருகின்றன. இது சாதாரண விஷயமல்ல, புதிய வரலாறு எழுதப்படுகிறது. இந்தியா தனது பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது. எனவே நாம் நமது ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்."

    "இந்தியாவின் எழுச்சியைப் பற்றி சில வக்கிர சக்திகள் கவலைப்படுகின்றன. இந்தியாவிற்குள்ளும், அதற்கு வெளியேயும் இத்தகையவர்கள் நிலையற்ற தன்மை மற்றும் அராஜகத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு தவறான செய்தி செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்."

    "இவர்களின் இலக்கு பெரும் சக்திகள் ஆகும், அவர்களை குறிவைத்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் சாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் சமூகத்தையும், ஒற்றுமையையும் பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளனர்."

    "'ஏழை இந்தியா, பலவீனமான இந்தியா' என்ற அரசியல் அவர்களுக்குப் பொருந்துவதால், இந்தியா வளர்ச்சியடைவதை அவர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் அரசியலமைப்பின் பெயரால் இந்தியாவை உடைக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.

    • தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
    • ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.

    இதில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையில் மாணவ-மாணவிகள் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேக் அப்துல்லா தேச ஒற்றுமையை வலியுறுத்தி பேசினார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ் மற்றும் பாத்திமா கனி ஆகியோர் செய்திருந்தனர்.

    • சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்டம் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில கோஜூரி யோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஒற்றுமை தின விழா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் ஒற்றுமை தின விழாவின் உறுதி மொழியை ஏற்றனர்.

    மேலும் பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நிகழ்ச்சியினை காணொளி மூலம் நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் கண்டு களித்தனர். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு நடந்தது
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    வேலூர்:

    தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு வேலூர் தலைமை தபால் நிலையம் சார்பாக பொதுமக்கள் இடையே தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று காலை நடந்தது. இந்த பேரணி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையம்,வெங்கடேச பெருமாள் கோவில் வழியாக, இறுதியில் தலைமை தபால் நிலையத்தை வந்தடைந்தது.

    பேரணியில் வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் ,வேலூர் தலைமை தபால் நிலைய முதுநிலை அஞ்சல் அதிகாரி முரளி, வேலூர் உதவி கோட்ட கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீரன் உட்பட 100-க்கும் மேற்பட்ட தபால் நிலைய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • “தேசிய ஒற்றுமை தினம்“ உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்சேக் முகையதீன் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று"தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 31-ஆம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் இந்திய அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் சுதந்திர இந்தியாவின் சிற்பியாக சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை இந்தச் சந்தர்ப்பம் அங்கீகரிக்கிறது.

    தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தாங்கும் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள் இதுவாகும். இதை முன்னிட்டு "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் "இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், உளமார உறுதியளிக்கிறேன்.

    சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்" என "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்தது
    • ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைந்த இந்தியாவின் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினமான ேநற்று தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி மற்றும் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் தலைமையில் நடைபெற்றது.

    தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ்.சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழ்வாணன், சாந்தி, கமலநாதன், ஜீவா உள்பட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

    • எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி, தேசிய ஒற்றுமை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல் புகழை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய்பட்டேலின் தொலைநோக்குப்பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர் வினைப்பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன். என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.
    • சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    ஈரோடு:

    இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் மற்றும் பாதுகாப்பையும் பேணவும், மேலும் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும், சாத்தியமாக்கப்பட்ட ஒன்றினைந்த தேசத்தின் நல்லுணர்வினை பேணவும் மற்றும் நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய பங்களிப்பை வழங்கும் பொருட்டும், தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது.

    உறுதி மொழியை மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் பின் தொடர்ந்து வாசித்து ஏற்றுக் கொண்டனர்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசிய ஒற்றுமை தின விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேரணியானது, கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, முக்கிய சாலைகள் வழியே சென்று அரசு தலைமை மருத்துவ–மனை வளாகத்தை வந்தடைந்தது.

    இதில் சுமார் 250 மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் எஸ்.கணேஷ் (பொது), தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) குமரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார், தொடக்க கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×