என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Notice board"
- விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
- அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச்சாம் பாளையம் ஆவாரம் காட்டு தோட்டம் பகுதியில் ஒரு நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தென்னை நார் ஆலையில் இருந்து நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் தேங்காய் மட்டைகளை குவித்து பரப்பி பதப்படுத்து வதற்காக நீரில் நனைத்து பின்பு கழிவு நீரை அப்படியே நிலத்தடியிலும் ஓடையிலும் விடுவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறினர்.
இதனால் செம்புளிசாம் பாளையம் பகுதியில் குடிநீர், பொது நிலத்தடி நீர், ஆழ்துளைக்கிணறின் நீர் மற்றும் சுற்றுவட்டார வேளாண்மை மக்களின் குடிநீர் ஆதாரங்களும் பகுதியில் உள்ளதால் கடுமையாக மாசடைய வாய்ப்புகள் உள்ளது என அவர்கள் கூறினர்.
எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார விவ சாயிகள் ஏற்படும் இன்னல் களில் இருந்து பாதுகாத்து தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதனை அடுத்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அத்தாணி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அறவழியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர். அந்த மனுவின் நகலை எம்.எல்.ஏ.வுக்கும் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.
இதனை அடுத்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக அந்தப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி னார்.
அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அத்தாணி பேரூராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.வெளியிடங்களில் இருந்து பொதுமக்க ளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் தென்னை நார் கழிவுகளை அத்தாணி பேரூராட்சி கிராமப் பகுதிகளில் மற்றும் விவசாய நிலங்களிலும் கொட்டி வைப்பதை தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வ துடன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பு பலகையில் வாசங்கள் எழுதப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் மெதுவாக செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
- புதிதாக அந்த ரோட்டில் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவிலில் இருந்து உப்புபாளையம் வழியாக வள்ளியரச்சல் செல்லும் ரோட்டில் ஒரு வளைவில் நெடுஞ்சாலை த்துறை சார்பில் அபாயகரமான வளைவு மெதுவாக செல்லவும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவிப்பு பலகை இல்லாமல் அதற்காக அமைக்கப்பட்ட கம்பம் மட்டும் உள்ளது, பலகை காற்றில் பறந்து விட்டதா இல்லை யாராவது எடுத்துச்சென்று விட்டார்களா தெரியவி ல்லை, பல மாதங்கள் ஆகியும் அறிவிப்பு பலகை வைக்காமல் இருப்பதால் புதிதாக அந்த ரோட்டில் வருபவர்களுக்கு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
- திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலை பணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சத காண்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நேற்று தொடங்கியது.
தொடர்ந்து வருகிற 11-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுகசபை விருந்தினர் விடுதி இணைப்புச்சாலை வழியாக திருச்செந்தூர் சென்று வருகிறது.
மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோல திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் தெற்கு பகுதியில் ஏற்கனவே உள்ள சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்நிலையில் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதிகளில் சரியான அறிவிப்பு பலகைகளோ, போக்குவரத்து காவலர்களோ இல்லாமல் இருப்பதால் எதிரெதிரே வரும் வாகனங்களால் மிகப்பெரிய ஆபத்து நடக்கக்கூடும் சூழல் காணப்படுகிறது. மேலும் பாலம் பணி நடைபெறும் பகுதியில் மின்விளக்குகளே இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே பாலம் வேலை நடைபெறும் உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்