என் மலர்
நீங்கள் தேடியது "nurse"
- விருதுநகரில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியருக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.
- இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது55). அரசு செவிலியராக பணியில் சேர்ந்த இவர் கடந்த 37 வருடங்களாக கன்னிசேரி புதூர், எம்.ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம உதவி செவிலியராக பணியாற்றி உள்ளார். பணியில் இருந்த போது அர்ப்பணிப்பு சேவையுடன் நோயாளிகளுக்கு மங்கம்மாள் சேவை செய்தார். தற்போது இவர் ஆர்.ரெட்டியபட்டியில் உதவி செவிலியராக உள்ளார்.
இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது. அதன்படி மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அளித்தது. இதனை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு சான்றிதழை வழங்கி மங்காம்மாவை பாராட்டினார்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மங்கம்மாள் தேசிய விருது பெற்று விருதுநகர் மாவட்டத்தை பெருமை அடைய செய்துள்ளார்.
- மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் நர்சு உள்பட 2 பேரிடம் நகை பறித்த விருதுநகர் வாலிபரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
- நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோட்டை சேர்ந்தவர் அனிதா ஆரோக்கிய செல்வி. இவர் அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது தாய் நான்சி மற்றும் தோழி கீதாலட்சுமி ஆகியோருடன், பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள தேவாயலத்துக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு அவர்கள் டவுன்ஹால் ரோட்டில் மற்றொரு தேவா லயத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்ேபாது அவர்களை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். அந்த நபர் திடீரென்று அனிதாஆரோக்கிய செல்வி, கீதாலட்சுமி ஆகி யோர் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.
இதனால் அதிர்ச்சி யடைந்த 2 பேரும் திருடன்... திருடன்... என கூச்ச லிட்டனர்.அப்போது அந்த வழியாக ரோந்து வந்த திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி நகை பறிப்பு சம்பவத்தை அறிந்து, உடனே கொள்ளையனை பிடிக்க நடவடிக்கை மேற் கொண்டார். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை யில் அந்த நபர் பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தியதில் நகை பறிப்பில் ஈடுபட்டது விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (வயது 28) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து அனிதா ஆரோக்கிய செல்வியின் 1 பவுன் 5 கிராம் தங்க சங்கிலி மற்றும் கீதா லட்சுமி அணிந்திருந்த கவரிங் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
- கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.
- இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு உடனே தொடங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மஞ்சுளா பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி வாழ்த்துரை வழங்கினார்.
மாநில நிர்வாகிகள் ராஜலட்சுமி, வளர்மதி, கண்ணகி, நிசா சத்தியன், லலிதா, லதா, தனலட்சுமி, சபியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டாக்டர்கள் முருகபிரியா , வானதி ஆகியோர் பெண்களின் நலன் குறித்து பேசினர்.
இந்த கூட்டத்தில், கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு உடனே தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தஞ்சை மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி நன்றி கூறினார்.
- தென்காசி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்க ளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
- இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண் ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஜி.என்.எம். அல்லது பி.எஸ்.சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்க ளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்்படவுள்ளனர்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண் ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இன் ஜி.என்.எம். அல்லது பி.எஸ்.சி. நர்சிங் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு புதுப்பித்தி ருக்க வேண்டும்.
மேற்கண்ட பணியிடங்க ளுக்கான விண்ணப்ப படி வங்கள் தென்காசி மாவட்ட வலைதளம் https://tenkasi.nic.in/notice_category/recruitment/-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ துணை இயக் குநர் சுகாதாரப் பணிகள் (மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம்), தென்காசி - 627 811 என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப் பங்கள் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- மயங்கி விழுந்தவருக்கு முதலுதவி அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
- நிர்மலாவின் மனித நேய உதவியை பலரும் பாராட்டினார்கள்.
காஞ்சிபுரம்:
கண்முன்னால் ஒருவர் உயிருக்கு போராடினால் கூட நமக்கேன் வீண் வேலை என்று அந்த இடத்தைவிட்டு கடந்து செல்பவர்கள்தான் அதிகம்.
அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் விஜயா நிர்மலா சிவா போன்ற மனிதாபிமானமும், பணியின் மீதான அர்ப்பணிப்பு எண்ணம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இரவு 7.30 மணி... காஞ்சிபுரம் பஸ் நிலையம் பரபரப்பாக இருந்தது வேலைகளுக்கு சென்று விட்டு வீடு திரும்புபவர்கள் பஸ்களை பிடிப்பதற்காக அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவராகத் தான் நிர்மலாவும் பஸ்சை பிடிப்பதற்காக ஓடி கொண்டிருந்தார். 35 வயதாகும் நிர்மலா கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர். காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்க்கிறார். 2-வது ஷிப்டு முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது விசாரணை அலுவலகம் அறைக்கு அருகில் ஓய்வு பெற்ற பஸ் டிரைவர் ராஜேந்திரன் (68) திடீரென்று கீழே மயங்கி சாய்ந்துள்ளார். உயிருக்கு போராடிய அவரை சுற்றி நின்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தை விலக்கி கொண்டு உள்ளே சென்ற நிர்மலா உயிருக்கு போராடிய அவரை பார்த்ததும் சற்றும் தாமதிக்காமல் முதலுதவி சிகிச்சை செய்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு ராஜேந்திரன் மூச்சு விட தொடங்கினார்.
உடனே தனது சக ஊழியர்களை தொடர்புகொண்டு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். தக்க தருணத்தில் சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். நிர்மலாவின் மனித நேய உதவியை பலரும் பாராட்டினார்கள்.
நவீன செவிலியர் முறையை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் மகத்தான சேவை தான் உலகம் முழுவதும் செவிலியர்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. இக்கட்டான நேரங்களில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதே செவிலியரின் கடமை அந்த கடமையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்த நிர்மலா சக ஊழியர்களாலும் பாராட்டப்பட்டார்.
- நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறை வாசலில் நோயாளி ஒருவர் மயங்கி கிடந்தார். அவரது கால் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகி முத்துக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் நிர்வாகிகளுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பிணவறை வாசலில் கிடந்த முதியவரை மீட்டு விசாரணை நடத்தினார்.
அதில் அவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (வயது 36) என்பது தெரிய வந்தது. இவருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. இதற்காக கடந்த ஒரு மாதமாக மதுரை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் பாதிப்பு குறையவில்லை.
இதற்கிடையே நோயாளி பிரகாஷ்ராஜின் உறவினர்கள் கைவிட்டு சென்றனர். இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரகாஷ்ராஜை ஆஸ்பத்திரி வாசலில் விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் டீனிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் பிரகாஷ்ராஜ் மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நீரிழிவு நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல், இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த குழுவினர் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட வார்டில் வேலை பார்த்த 2 டாக்டர்கள், ஒரு நர்சு, தூய்மை பணியாளர் ஆகிய 4 பேர் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 2 டாக்டர்கள், நர்சு உள்பட 4 பேரையும் மதுரை பாலரங்காபுரம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக இடமாற்றம் செய்து டீன் உத்தரவிட்டார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளி நடுரோட்டில் வீசப்பட்ட விவகாரத்தில், 2 டாக்டர்கள் உள்பட 4 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இடமாறுதல் உத்தரவு பெற்ற நர்சுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட துணை இயக்குனர்கள், தாமதம் செய்யாமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
- லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இங்கு துணை இயக்குனராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் முத்துமணி என்பவர் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு பணியாளராக பணியாற்றி, தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சக்தி முருகன் என்பவர் அடிக்கடி இந்த அலுவலகத்திற்கு வந்துசெல்வார்.
சென்னை மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் இயக்குநர் மாநில அளவிலான கவுன்சிலிங் அடிப்படையில் 26.07.2021 முதல் 30.07.2021 வரை அனைத்து மாவட்டங்களிலும், பல்வேறு இடங்களில் பணிபுரியும், ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளை அவர்களின் விருப்பத்தின் பேரில் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டார்.
இந்த கவுன்சலிங் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த 76 ஒப்பந்த நர்சுகள் பல்வேறு இடங்களுக்கு இடமாறுதல் உத்தரவு பெற்றனர். இடமாறுதல் உத்தரவு பெற்ற நர்சுகளை சம்மந்தப்பட்ட மாவட்ட துணை இயக்குனர்கள், தாமதம் செய்யாமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஊரக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் முத்துமணி மற்றும் சக்திமுருகன் ஆகியோர், கவுன்சலிங் மூலம் இடமாறுதல் பெற்ற ஒப்பந்த நர்சுகளை, தற்போது பணிபுரியும் இடங்களில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்க திட்டம் தீட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து இடமாறுதல் பெற்ற நர்சுகளிடம் ஒவ்வொருவருக்கும் அவர்களை விடுவிக்க ரூ. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை லஞ்சம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்காத நர்சுகளை பணியில் இருந்து விடுவிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
லஞ்சப் பணம் கொடுக்காமல் மாறுதல் உத்தரவு பெற முடியாது என்று நினைத்து சில நர்சுகள் பணம் கொடுத்து மாறுதல் உத்தரவு பெற்றுச் சென்றுவிட்டனர்.
இது குறித்து ரகசிய தகவல் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷினி, இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஒப்பந்த அடிப்படையில், பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு நர்ஸ் தேனி மாவட்டம், அல்லி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கவுன்சலிங் மூலம் இடமாறுதல் பெற்றிருந்தார். அவரை இங்கிருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து, முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை கூகுள்பே கணக்கு மூலம் கொடுத்துள்ளார். மீண்டும் அதே முறையில் ரூ.25 ஆயிரம் கொடுத்துள்ளார்.
இதேபோல் எலச்சிபாளையம், வினைதீர்த்தபுரம், திருமலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றிய ஒப்பந்த அடிப்படையிலான நர்சுகளிடமும் கூகுள்பே மற்றும் வங்கி கணக்கு மூலம் லஞ்சம் பெற்றுள்ளனர்.
சிலரிடம் நேரடியாக பணமாகவும் வாங்கியுள்ளனர். மேலும் துணை இயக்குனரின் வங்கி கணக்கிற்கு சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் நடைபெற்றதும் போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், ஹெல்த் இன்ஸ்பெக்டர் முத்துமணி, மற்றும் சக்திமுருகன் ஆகிய 3 பேர் மீது, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
இதையொட்டி அவர்கள் மீது விரைவில் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவர்கள் 3 பேரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.
- நிரோஷா வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
- கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
களக்காடு:
ஏர்வாடி பெருந்தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் நிரோஷா (வயது20). இவர் வள்ளியூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 16-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆதம் அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான நிரோஷாவை தேடி வருகிறார்.
- நர்சை அடித்து கொன்ற கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை முனியாண்டி புரத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரும், ரம்யா (22) என்ற பெண்ணும் காதலித்து கடந்த திருமணம் செய்து கொண்டனர். திருப்பரங் குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தில் ரம்யா நர்சாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை ரம்யா வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கும், கணவருக்கும் இடையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ்குமார், கர்ப்பிணியாக இருந்த ரம்யா நடத்தை தொடர்பாக அவதூறாக பேசினார். மேலும் சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசிய தாகவும் கூறப்படுகிறது. இதனை ரம்யா தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார், கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் உருட்டு கட்டையால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரம்யா சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ரம்யா வின் தந்தை செல்வம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சதீஷ்குமார், அவரது தந்தை செல்வம் (55), தாய் பஞ்சவர்ணம் (52) ஆகிய 3 பேரை கைது செய்தனர், அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம்.
- தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.
சென்னை:
உலக நர்சுகள் தினம் இன்று. நோயாளிகளின் வளர்ப்பு தாய் போல் செயல்படும் இவர்களது பணி மகத்தானது.
அதிலும் பிறந்த குழந்தைகளை பெற்ற தாய் போல் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வது சாதாரண விஷயமல்ல. பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் பணிபுரியும் ஒவ்வொரு நர்சும் அந்த குழந்தைகளின் மற்றொரு தாய் போன்றவர்கள்தான்.
எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பராமரிப்பு வார்டில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் நர்சு சாந்திக்கு இந்த ஆண்டின் சிறந்த நர்சுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வார்டு அனுபவம் பற்றி சாந்தி கூறியதாவது:-
இந்த வார்டில் பணியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரவில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனுமதிக்கப் பட்டிருக்கும் அத்தனை குழந்தைகளும் அப்போது பிறந்தவைகள்.
அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆக்சிஜன் பிரச்சினை வரலாம். உடனே அட்டன்ட் பண்ண வேண்டும். சில நிமிடங்கள் தாமதித்தாலும் ஆபத்து நேரிடலாம்.
ஒரு குழந்தையை பார்த்து கொண்டிருக்கும் போதே இன்னொரு குழந்தைக்கு அவசர உதவி தேவைப்படலாம். எனவே, எந்த நேரமும் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் குழந்தைகளின் அருகில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
ஆக்சிஜன் வைத்திருக்கும் முக மூடியை கவனித்தல், வென்டிலேட்டர் பராமரிப்பு நரம்பு வழியாக மருந்து செலுத்துதல் ஆகியவை முக்கியம். அதுமட்டுமல்ல இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை நரம்பு வழியாகவோ வாய் வழியாகவோ உணவு வழங்க வேண்டும். தாய்ப்பால் வழங்குவதாக இருந்தால் தாயிடம் குழந்தையை கொடுத்து பாலூட்ட வைக்க வேண்டும்.
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக தாய்ப்பால் வங்கியும் செயல்படுகிறது.
கொரோனா காலத்தில் தாய்ப்பால் வங்கிக்கும் பால் கிடைக்காமல் சிரமப் பட்டோம். அந்த காலகட்டம் மிகவும் சவாலானதாக இருந்தது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும் பராமரித்து ஆரோக்கியத்துடன் தாயிடம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பும் போதுதான் மகிழ்ச்சியும், நிம்மதியும் வரும் என்றார்.
- உலக செவிலியர் தின விருது வழங்கப்பட்டது.
- செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முகவை தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோய்த்தொற்று காலங்களில் பங்காற்றிய செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் அப்துல்லா விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நூருல் சமது தலைமை தாங்கினார். செவிலியர் ராஜசேகரன் வரவேற்றார். மருத்துவர் கண்ணகி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக செய்யதம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் சரளா, இந்திராகாந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். செவிலியர் வீராம்மாள் நன்றி கூறினார்.
- ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது
- செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக செவிலியர் தினம் அரசு தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து செவிலியர்களுக்கும் நினைவு பரிசும், இனிப்பும் வழங்கப்பட்டது.மேலும் செவிலியர்கள் நோயாளிகளின் வழியையும் வேதனையும் புரிந்து கொண்டு மிக சிறப்பாக செயல்படுவதாகவும், மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்து பாராட்டினர்.
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த தலைவர் கலைச்செல்வன், செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் தாமரைச்செல்வன், பி.ஆர்.ஓ.குமாரசாமி, துணைத் தலைவர் லோகநாதன் மற்றும் முன்னாள் தலைவர்கள், கார்த்திகேயன், ராஜேந்திரன், பொறியாளர்கள் ஹரிஹரன், வில்வநாதன், அன்னை தெரசா கல்வி குழுமத்தின் தாளாளர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் அரசு மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர்.