என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Old Building"
- ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
- பாராளுமன்றத்தில் அம்பேதகர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன்.
பழைய பாராளுமன்றத்தில் விரவி இருந்த தலைவர்களின் சிலைகள் அவ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு புதிய பாராளுன்றத்தின் பின்புறத்தில் 'பிரேர்னா' ஸ்தல் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி உள்ளிட்ட 50 பேரின் சிலைகள் இதில் அடங்கும்.
பிரேர்னா ஸ்தல் பூங்காவை நேற்று {ஜூன் 16) துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார். தலைவர்களின் சிலைகளை இடம் மாற்றும் முடிவுக்கு தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது இடமாற்றத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், யாரிடமும் கருத்து கேட்காமல் எந்த ஒரு விவாதமும் இன்றி பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பாக தலைவர்களின் சிலைகள் இடமாற்றும் செய்யப்பட்டுள்ளன. தலைவர்களின் சிலைகளை தன்னிச்சையாக இஷ்டத்துக்கு இப்படி இடம்மாற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சுமார் 50 சிலைகள் இடம்மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஏற்கனவே இருந்த இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.
முக்கியமாக மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் சிலைகள் பாராளுமன்றத்துக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கிவந்தன. பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் முன்னாள் இருந்த மகாத்மா காந்தியின் தியான சிலை அருகே ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்தும்போது உத்வேகம் அளிப்பதாய் இருந்தது.
அம்பேத்கர் சிலை இந்திய அரசியலமைப்பின் சக்தியை உணர்த்துவதாக இருந்தது. 1960 களில் எனது கல்லூரிப் பருவத்தில் பாராளுமன்றத்தில் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கான போராட்டத்தில் நானும் பெருமையோடு கலந்துகொண்டேன். தற்போது இது அனைத்தையும் சீர்குலைக்கும் வகையில் அவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று விமர்சித்துள்ளார்.
- மதுரை ரெயில் நிலையத்தில் பழைய கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மதுரை
மதுரை ரெயில் நிலையத்தில் ரூ.375 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு விமான நிலையத்தில் உள்ள வசதிகளுக்கு இணையாக உலக தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கு வசதியாக தற்போது மதுரை ரெயில் நிலையத்தில் தற்காலிக பணியிட அலுவலகம், ஒப்பந்ததாரர் அலுவலகம், திட்ட மேலாண்மை அலுவலகம் ஆகியவை தொடங்கப்பட்டு உள்ளன.
ரெயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்னொரு புறம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தை வேறு பகுதிக்கு மாற்றும் வேலைகள் தொடங்கி உள்ளன.
மதுரை ரெயில் நிலைய கிழக்கு- மேற்கு நுழைவு வாயிலில் இரு முனையங்கள், 3 அடுக்கு வாகன காப்பகங்கள், கிழக்கு- மேற்கு பகுதிகளை இணைத்து ரெயில் பாதை மேல் காத்திருப்பு அரங்கு ஆகியவற்றுக்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.
மதுரை-திருமங்கலம் இடையேயான இரட்டை ரெயில் பாதையில் 2-வது வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இது மின்மயமாக்கப்பட்ட ரெயில் பாதை ஆகும்.
இங்கு தலைமை முதன்மை மின் பொறியாளர் சித்தார்த்தா சிறப்பு ரெயில் மூலம் குழுவுடன் சென்று மின்மய பாதைகளை ஆய்வு செய்தார். அப்போது வழியில் உள்ள பாலங்கள், ரெயில்வே கேட்டுகள் ஆகியவற்றில் மின்சார வழங்கல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மின்தடம் பற்றிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதா? அங்கு பணியாற்றும் ரெயில் பாதை பராமரிப்பு பணியாளர்கள் உரிய பயிற்சி எடுத்து உள்ளனரா? என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதிய மின் தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது. அப்போது முதன்மை மின் வழங்கல் துறை பொறியாளர் சுந்தரேசன், ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, மின்துறை மேலாளர் ராமநாதன், மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோரும் ரெயிலில் பயணம் செய்தனர்.
மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு விட்டன. எனவே அங்கு எக்ஸ்பிரஸ் மற்றும் பாசஞ்சர் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பது என்று ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
- ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்காலி கமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் பள்ளி இயங்கி வந்தது.
இது குறித்து அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்