search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavoorchatram"

    • கும்பல் பார்த்திபனை அரிவாளால் வெட்டியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கப்பட்டினத்தை அடுத்த வட்டாலூர் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கடல்மணி. இவரது மகன் பார்த்திபன்(வயது 24). இவர் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தனது ஊருக்கு அருகே உள்ள முத்து கிருஷ்ணபேரி கிராமத்தில் நடைபெற்ற பலவேசக்கார கோவில் கொடை விழாவில் கச்சேரி பார்த்துவிட்டு பார்த்திபன் நள்ளிரவில் தனது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வட்டாலூர் ஊருக்கு வடபுறம் காட்டுப்பகுதியில் வைத்து ஒரு கும்பல் அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    தகராறு முற்றியதில் அந்த கும்பல் பார்த்திபனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

    இந்நிலையில், இன்று காலை பார்த்திபனை கொலை செய்ததாக கூறி வட்டாலூர் பகுதியை சேர்ந்த பார்த்திபனின் உறவினரான பாஸ்கர் என்ற வாலிபர் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பாஸ்கர் தான் பார்த்திபனை கொலை செய்தார் என சரண் அடைந்த தகவல் அறிந்து, பாஸ்கரின் தாயார் செல்வி ஊருக்கு அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு படை வீரர்கள் செல்வியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் பாஸ்கர் அளித்த தகவலின்பேரில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அனைவரையும் கைது செய்த பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கொலையான பார்த்திபன் மீது பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் கட்டிடங்களை அகற்ற வந்த அதிகாரிகளிடம், தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றார்.
    • அதில் கடைகளை வைத்திருப்போர் தங்களது கோரிக்கையை முன் வைத்ததன்பேரில் கடைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள குற்றால சத்திரம் இடத்தில் கடையம் ரோடு தொடங்கி அவ்வையார் மகளிர் பள்ளி வரை சுமார் 35-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் நெல்லை- தென்காசி நான்கு வழிச் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நில ஆர்ஜிதம் செய்வதற்காக நோட்டீஸ்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் அங்கிருந்த கடைகள் மற்றும் கடைக்கு முன்பு போடப் பட்டிருந்த ஷெட்டுகளை ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்த நேற்று காலையில் நெடுஞ் சாலை துறையினர் மற்றும் சாலை ஒப்பந்ததாரர்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் பாவூர் சத்திரம் வணிகர்கள் சங்கத்தினர் மற்றும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களுக் கான இழப்பீடு தொகை தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும், சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக பூக்கடை மற்றும் பெட்டி கடைகளுக்கு நிவாரண தொகை வழங்கிய நிலையில் பல ஆண்டுகளாக குற்றால சத்திரம் இடத்தில் இருந்த எங்களுக்கு எந்தவித இழப்பீடு தொகை மற்றும் கடையில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகையும் வந்து சேரவில்லை எனவும், இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தியதால் தங்களால் இழப்பீடு மற்றும் ஊழியர்க ளுக்கான நிவாரண தொகை பெற முடியவில்லை என்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    மேலும் பாதுகாப்பு பணிக்காக வந்த போலீசார் கட்டிடங்களை அகற்ற வந்த அதிகாரிகளிடம், தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் உடனடியாக அமைக்க வேண்டும் என்றார். அதில் கடைகளை வைத்திருப்போர் தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். அதன் பேரில் கடைகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    ஏற்கனவே பாவூர்சத்தி ரத்தில் சாலையின் வட பகுதியில் நிலம் கையகப் படுத்தும் பணி முடிவடைந்த நிலையில் தென்பகுதி யில் உள்ள இடங்களை சாலை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.

    ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுவரும் செல்வவிநாயகர்புரம் பெல் மருத்துவமனையில் இருந்து பாவூர்சத்திரம் பஸ் நிலையம் வரை பாதாள சாக்கடை, மழை வடிநீர் குழாய் அமைக்கும் பணி இன்னும் ஒரு வார காலத்தில் தொடங் கப்படும் எனவும், அதன் பின்னர் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடிநீர், வாறுகால் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.
    • விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் பஸ் நிலையத்தின் அருகே சாலையோரங்களில் குடிநீர் பைப் மற்றும் வாறுகால் பணிகள் மேற்கொள்வதற்காக மிகப்பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு அதனை சுற்றி இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர்.

    அதிலும் குறிப்பாக பாவூர்சத்திரம் நான்கு முக்கு சாலையில் பணிகள் நடைபெற்று வருவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்லும் போது நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று பெரும் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி செல்லும் கனரக லாரிகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் கண்டெய்னர் லாரிகள் அந்தச் சாலை வழியாக செல்வதால் வாகனங்கள் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழும் அபாய நிலையும் உள்ளது.

    எனவே விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க பாவூர்சத்திரம் நான்குமுக்கு சாலையில் வாகன நெருக்கடி ஏற்படாத வண்ணம் போலீசாரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தை கொண்டு ரத்த கையெழுத்து இட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் சங்கரேஸ்வரி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அப்போது தங்களின் அடிப்படை கோரிக்கைகளான 10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்துதுறை காலி பணியிடங்க ளிலும் நிரப்பி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் செயலாளர் சோமசுந்தரம் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் கங்காதரன் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் ஊசியை கொண்டு தங்களின் விரல்க ளில் குத்தி ரத்தத்தை கொண்டு ரத்த கையெழுத்து இட்டனர். முடிவில் ஒன்றிய துணைத் தலைவர் சக்திமாரி நன்றி கூறினார்.

    • தானியங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கஞ்சி உள்ளிட்டவை அம்மனுக்கு படையல் செய்யப்பட்டது.
    • அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட முறுக்கு, அதிரசம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருணாபேரி அழகு முத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், நல்லமழை பொழிந்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு பூஜைகள் இன்று அதிகாலையில் நடத்தப் பட்டது.

    ஆடிமாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் அழகுமுத்து மாரியம்மனுக்கு பழங்கள், முறுக்கு, அதிரசம், வளையல்கள், தாமரை மலர்கள் போன்றவற்றால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தானியங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட கஞ்சி உள்ளிட்டவற்றை படையல் செய்து சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது.

    இதில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், தென்காசி மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பூஜை முடிந்ததும் அம்மனுக்கு அலங்கரிக்கப்பட்ட முறுக்கு, அதிரசம், வடை மாலை, பழங்கள் மற்றும் வளையல்கள் அனைத்தும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு தர்ம கஞ்சியும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.

    • விழாவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சியில் சேவியர் இருதயராஜ் மாணவர்களுக்கு நீட் பயிற்சிக்கு தங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என விளக்கமளித்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கனி மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ள்க்ஸ் மற்றும் மதிரா டியூசன் சென்டர் இணைந்து நடத்தும் இலவச நீட் பயிற்சி தொடக்க விழா நேற்று மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்றது. நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் வரவேற்று பேசினார்.

    இதில் நெல்லை தட்சண மாற நாடார் சங்க தலைவ ரும், பாவூர்சத்திரம் காமரா ஜர் மார்க்கெட் தலைவரு மான ஆர்.கே. காளிதாசன் கலந்து கொண்டு இலவச நீட் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் புல்லுக்காட்டு வலசை அரசு மேல்நிலைப் பள்ளி, பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அயன் குறும்பலாபேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் சேவியர் இருதயராஜ் மாணவர்களுக்கு நீட் பயிற்சிக்கு தங்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என விளக்கமளித்தார். டாக்டர். சுபஜோதிகுமார், கனக சபாபதி, பிரபாகர் ஆகி யோர் நீட் பயிற்சி குறித்து விளக்கம் அளித்தனர்.

    விழாவில் அயன் குறும்ப லாபேரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்சிங் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், தொழிலதிபர் கோல்டன் செல்வராஜ், கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார்பாண்டியன், நாராயண சிங்கம், ஏ.பி. பாலசுப்ரமணியன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்யராஜ் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • சாலைப்புதூர் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சத்யராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப் பட்டினத்தை அடுத்த அழகாபுரி கிராமம் மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சத்யராஜ் (வயது 31). இவர் கேரளாவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை கள் உள்ளனர். இவர் நேற்று தனது மனைவியின் சொந்த ஊரான பாவூர்சத்திரம் அருகே உள்ள பஞ்சாண்டியூர் கிராமத்தில் நடந்த கோவில் திரு விழாவில் பங்கேற்க சென்றார். அதில் கலந்து கொண்டு விட்டு இரவில் தனது மோட்டார் சைக்கிளில் அழகாபுரிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சத்யராஜின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சத்யராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார், சத்தியராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாக னத்தை தேடி வருகின்றனர்.

    • கல்லூரணி பஞ்சாயத்து அலுவலகம் அருகே பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • திப்பணம்பட்டி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபடி வாக்குறுதி களை நிறைவேற்றக்கோரி யும், மணல் மற்றும் கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தவும், டாஸ்மாக் கடைகளை மூடுவது, கஞ்சா, கள்ளச்சா ராயம் விற்பனையை அறவே ஒழித்திடக் கோரு வது, ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுதல், உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் உள்ள கல்லூரணி பஞ்சா யத்து அலுவலகம் அருகே பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ஆறுமுகம் என்ற முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலா ளர் அருள் செல்வன் கண்டன உரையாற்றினார்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், குமரேசன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், கீழப்பாவூர் தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் செல்வராஜ், வர்த்தக பிரிவு செயலாளர் பேட்டை முருகன், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் கோபிநாத் என்ற கடல், உள்ளாட்சி பிரிவு செயலாளர் வெல்டிங் தங்கம், சக்தி கருப்பையா, சிவன் மகளிர் அணி அமுதா, சீதா, இசக்கி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திப்பணம் பட்டி, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகல்குளம் கிராமத்தில் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சுரேஷ் முருகன், கிழக்கு ஒன்றிய செயலாளர், முருகன், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் மற்றும் நாகல்குளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக பல மணி நேரம் மாணவர்கள் காத்து கிடக்கின்றனர்.
    • பயணிகள் பயன்படுத்தி வந்த கழிப்பிடமும் தற்பொழுது பூட்டப்பட்டு கிடக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, மேட்டூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் அதிகம் பயின்று வருகின்றனர்.

    பஸ்வசதி

    அதில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனியாக பஸ் வசதிகள் இல்லாததால் அரசு பஸ்களை நம்பியே தங்களின் படிப்பை தொடர்கின்றனர். பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் காலையிலேயே வரும் மாணவர்கள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். நீண்ட நேரத்திற்கு பின்பு வரும் பஸ்களில் மொத்தமாக மாணவர்கள் ஏறுவதால் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

    எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை பாவூர்சத்திரத்தில் இருந்து இயக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்திற்குள் இலவசமாக பயணிகள் பயன்படுத்தி வந்த கழிப்பிடமும் தற்பொழுது பூட்டப்பட்டு கிடக்கிறது. குடிநீர் வசதியும் இல்லாததால் பெரிதும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். தென்காசி மாவட்ட கலெக்டர் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நிலையில் பூட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தையும், இயங்காமல் உள்ள குடிநீர் பைப்பையும் உடனடியாக சரி செய்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென பள்ளி கல்லூரி மாணவர்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது.
    • பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையனுர் பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பாக உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.

    பேரணியை ஆவுடையானூர் பஞ்சாயத்து தலைவர் குத்தாலிங்க ராஜன் என்ற கோபி தொடங்கி வைத்து பேசும் போது, பிளாஸ்டிக்கை வீட்டிலேயே பிரித்து எடுப் பது எளிதானது. அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவது மண்ணிற்கு கேடானது. பிளாஸ்டிக் பொருட்களை முறையாக பிரித்து எடுத்து அப்புறப்படுத்துவதில் ஆவுடையானூர் ஊராட்சி முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறது என்றார்.

    முன்னதாக மாணவி செல்வமாரி வரவேற்று பேசினார். மாணவி ஜெய்ஸ்ரீ, கமலஸ்ரீ ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பேசினர். பேரணியானது ஆவுடையானூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தொடங்கி மாடியனூர் வழியாக சென்றது. பேரணியின் போது பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்களை கூறியபடி மாணவர்கள் சென்றனர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பேரணி ஏற்பாடுகளையும் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • தள கற்கள் அனைத்தும் பெயர்ந்தும், மேடு-பள்ளமாகவும் காணப்படுகின்றன.
    • சுவற்றில் இருந்த துவாரத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆவுடையானூர் பொடியனூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

    ஜன்னல் கண்ணாடி

    இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும், போதிய கதவுகள் இன்றியும் காணப்படுகின்றன. மேலும் நடைபாதையில் போடப்பட்டிருந்த தல கற்கள் அனைத்தும் பெயர்ந்தும், மேடு-பள்ளமாகவும் காணப்படுகின்றன. இதனால் அங்கு வரும் முதியவர்கள் கால் இடறி கீழே விழும் சம்பவங்களும் அவ்வபோது நடைபெறுகிறது.

    மேலும் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு விஷ பூச்சிகள், பாம்புகள் நுழைந்து இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. கடந்த வாரத்தில் கூட பொதுமக்கள் மருந்துகள் வாங்கும் பகுதியில் சுவற்றில் இருந்த துவாரத்தில் பாம்பு ஒன்று இருந்ததை அங்கு இருந்த நோயாளிகளும், பொதுமக்கள் கண்டு அலறி அடித்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

    பழுதுகளை சரிசெய்ய வேண்டும்

    எனவே ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும், மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சுற்றித் திரியும் பாம்புகளை வனத்துறை, தீயணைப்புதுறை அலுவலர்கள் மூலம் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி பாவூர்சத்திரம் பிரதான பகுதிகளில் நடை பெற்றது.
    • தங்கள் வீடு அருகே தேர் வரும்போது மாலை, மெழுவர்த்தி, உப்பு ஆகியவற்றை வழங்கினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி யது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு அருட்பணியாளர்கள் கலந்து கொண்டு திருப்பலி மற்றும் மறையுரை ஆற்றினர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனிதரின் தேர்பவனி பாவூர்சத்திரம் பிரதான பகுதிகளில் நடை பெற்றது. அப்போது வீதிகளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீடு அருகே தேர் வரும்போது மாலை, மெழுவர்த்தி, உப்பு ஆகியவற்றை வழங்கி புனித அந்தோணியாரை வழிபட்டனர். தேர் பவனியில் கண்கவர் வான வேடிக்கை நடத்தப்பட்டது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா நிறைவு விழா பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி மற்றும் கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜேம்ஸ் அடிகளார், அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    ×