search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Penality"

    • நீலகிரியில் 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 19 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் அரசு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலையில் வந்த ஒரு சுற்றுலா வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில்கள், டம்ளர்கள், உணவு தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து அந்த பொருட்களை கொண்டு வந்த சுற்றுலா பயணிக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்பிறகு நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வரக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

    • விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.
    • ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்ப்பட்டுள்ளது

     காங்கயம் :

    காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா, முத்தூர் பிரிவு சாலை, சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, தாராபுரம் சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம் பிரிவு உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்தில் நகரில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட, பல்வேறு விதிகளை மீறியதாக, 1,197 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 71 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூல் செய்ப்பட்டுள்ளது.இந்த தகவலை காங்கயம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தெரிவித்தார்.

    • மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை மீட்டனர்.
    • வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.

    கோவை :

    கோவை ஆனைகட்டி பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் துவைப்பதி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் வனத்துறையினர் அந்த வீட்டில் சோதனை செய்தபோது, மான் இறைச்சி சமைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். அருகில் இருந்த மற்றொரு வீட்டில் சோதனை செய்தபோது, முருகன் (வயது 49) என்பவர் துரைசாமி (65) என்பவருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. விசார ணையில், அவர்கள் இருவரும் சேர்ந்து ஆனைகட்டியைச் சேர்ந்த கருப்பராயன் (39), ஜெயக்குமார் (31), ஜெகநாதன்(39) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இந்நிலையில், முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த தகவலின்படி துவைப்பதியில் இருந்த ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தலை, கொம்பு மற்றும் மானைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட சுருக்குவலை, கொடுவாள் ஆகியவற்றை மீட்டனர்.

    இதையடுத்து, மானைக் கொன்ற முருகனுக்கு ரூ.25 ஆயிரமும், மற்றவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரமும் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் மூங்கில்பள்ளம் அருகே உள்ள ஒரு வீட்டில் மான் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அங்குசென்ற வனத்துறையி னர் ரங்கசாமி (65) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தனது வளர்ப்பு நாயை விட்டு மான்களை கொன்று இறைச்சிகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாபு (40), சுப்பிரமணி (45), ராமு (30), சிவதாஸ் (37), கந்தசாமி (40) ஆகியோருக்கு மான் இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து மான் இறைச்சிகளை மீட்டனர்.அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    ஆனைகட்டி பகுதியில் தொடர்ந்து மான்கள் வேட்டையாடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வன ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர். இதைத்தடுத்து நிறுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×