search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people struggle"

    திருச்செங்கோடு நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வாக்களிப்பை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அணிமூர் கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.

    இந்த குப்பை கிடங்கை சுற்றி ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த நிலையில் குப்பை கிடங்கில் கொட்டப்படும் கழிவுகள் மூலமாக பல்வேறு நோய்கள் பரவுவதாகவும், எனவே, குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் எனவும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அப்பகுதி மக்கள் வாக்களிப்பை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த வருவாய் கோட்டாட்சியர் மணிராஜ், அணிமூர் கிராமத்திற்கு சென்று அவர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கவர்னர் வருகையின் போது குடிநீர் கேட்டு பெருங்குடி பொது மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. #TNGovernor #BanwarilalPurohit
    அவனியாபுரம்:

    அவனியாபுரத்தை அடுத்துள்ள பெருங்குடி பகுதியில் அம்பேத்கர் நகர். கணபதி நகர், விருசமரத்து ஊரணி, மீனாட்சி நகர் பகுதிகளுக்கு கடந்த 3 மாதத்திற்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் பெண்கள் குடி தண்ணீருக்காக மிகவும் சிரமப்பட்டனர். குடம் தண்ணீர் ரூ.20-க்கு விற்கப்படுகிறது.

    மேலும் இந்தப்பகுதியில் தனியார் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிதண்ணீரை லாரி மூலமாக ஆஸ்பத்திரி, ஓட்டல்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    இதனால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதனை கண்டித்து பொதுமக்கள் விமான நிலைய சாலையை முற்றுகையிட முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று மதுரை வந்தார். கார் மூலம் புறப்பட்ட அவரை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. பீர் முகைதீன், இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் முற்றுகையிட சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    முடிவில் பெருங்குடி பகுதிக்கு லாரி மூலமாக குடிதண்ணீர் வழங்கவும் மேலும் 4 இடங்களில் போர்வெல் போடுவதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பின்னர் கூட்டத்தினர் கலைந்து சென்றனர். #TNGovernor #BanwarilalPurohit
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியபுரம் மக்கள் நேற்று 92-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    இதேபோன்று பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், மீளவிட்டான், சில்வர்புரம், பாளையாபுரம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராம மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. நேற்று அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து மக்களுடன் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோஷங்களை எழுப்பினார்.

    மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 13 இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 
    ×