search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "phone number"

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார்.

    பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்தார். ஈட்டி எறிதல் மூலம் உலக அளவில் பிரபலமானவராக வலம் வருகிறார். அவர் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்களைக் குவித்துள்ளார்.

    இந்நிலையில் ரசிகை ஒருவர் நீரஜ் சோப்ராவிடம் போன் நம்பர் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் காயத்துடன் பங்கேற்று 2-வது இடம் பிடித்த அவர் போட்டி முடிந்ததும் ரசிகர், ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    அப்போது இரண்டு பெண் ரசிகைகள் அவரிடம் செல்ஃபி கேட்டனர். அவர்கள் இருவருக்கும் நீரஜ் போஸ் கொடுத்தார். அதில் இரண்டாவது பெண் உங்களது போன் நம்பர் கிடைக்குமா? எனக் கேட்டார். அப்பெண்ணின் கோரிக்கையை நீரஜ் சிரித்த முகத்துடன் மறுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 



    • மதுரை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் குறித்து இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
    • தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஏழை-எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடை மூலம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனை சிலர் முறைகேடாக பதுக்கி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது சென்னை கூடுதல் டி.ஜி.பி. நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல், பதுக்கல் குறித்து இலவச தொலைபேசி எண் 1800 599 5950 மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தருபவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

    • அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல‌வும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து 1.75 லட்சம் கனஅடியும், பவானியில் இருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதிக்கு மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், காவியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே பரமத்தி வேலூர் வட்டத்திற்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல‌வும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பொதுமக்களின் அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம் 1077, காவல்துறை 100, தீயணைப்பு துறை 101, மருத்துவ உதவிக்கு 104, ஆம்புலன்ஸ் உதவி 108 ஆகியவற்றிற்கும், பரமத்தி வேலுார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 94450 00546 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார் தெரிவித்துள்ளார். 

    • பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேடு வழங்கப்பட்டது.
    • சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்ட கலெக்டரால், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான கையேடு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான புகார் தொலைபேசி எண் குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேட்டினை பயனாளிகளுக்கு வழங்கியும், ஊரக குடியிருப்பு திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 89254 22215 மற்றும் 89254 22216 ஆகிய தொலைபேசி எண் குறித்த சுவரொட்டியினை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.மேலும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

    செல்போன் நம்பர் கேட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை ஊமச்சிக்குளம் பால்பண்ணை காலனியைச் சேர்ந்த புஷ்பராஜ் மனைவி நாகஜோதி (வயது 21). இவர் நேற்று காலை வாடிப்பட்டிக்கு சென்றார்.

    அப்போது நாகஜோதியை வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து சென்றார். நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், உன் செல்போன் நம்பர் கொடு என்று வற்புறுத்தி உள்ளார்.

    இதற்கு நாகஜோதி மறுக்கவே, வாலிபர் சம்பவ இடத்தில் வழிமறித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இது தொடர்பாக நாகஜோதி வாடிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் சேவை ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நாகஜோதிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    விசாரணையில் அவர் வாடிப்பட்டி அருகில் உள்ள செம்புக்குடிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (27) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வாடிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×