என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "plastic materials"
- அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர்.
- இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
அவிநாசி:
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் பயன்படுத்த, விற்க அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
எச்சரிக்கை விடுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த உத்தரவை மீறும் வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சில கடைகள் செயல்பட்டு வருவதாக சுகாதரத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த, மொத்த விற்பனை கடையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கப்புகள், துணி பைகள் என மூட்டை மூட்டையாக குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இது மட்டுமின்றி காய்ச்சல், தலைவலி என உடல் உபாதைகளோடு வருபவர்களுக்கு இக்கடையில் மாத்திரைகள் மொத்தமாகவும், சில்லரையாகவும் வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிகாரிகள் கடையில் இருந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், கப்புகள், மாத்திரைகள் என 300 கிலோவை பறிமுதல் செய்தனர். அதே போல் அக்கடையின் அருகே செயல்பட்டு வந்த மற்றொரு கடையில் இருந்த இதே போல் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 600 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள பறிமுதல் செய்யப்பட்டு மொத்த விற்பனை கடைக்கு அபராதமும், மற்றொரு கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் வைக்கப்பட்டு இதில் மண்பானை, இலையால் தயாரிக்கப்பட்ட மற்றும் சாக்குப்பை, துணிப்பை அன்றாடும் பொதுமக்கள் பொருட்கள் பயன்படுத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் தவிர்க்கவும் இதற்கு மாறாக 12 வகை பொருட்களும் அதற்கான விளக்கங்களும், அடங்கிய ஸ்டிக்கர் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மாற்றுப் பொருட்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஓட்டல், டீக்கடை, பூ கடை, கறிக்கடைகளில் இலைகளில் மடித்து கொடுத்து வருகின்றனர். பலசரக்கு கடையில் ஸ்வீட் கடை காகிதப் பைகளிலும் ஜவுளிக்கடையில் துணிப்பையிலும் வியாபாரிகள் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
சோழவந்தானில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்று 5 பேர் கொண்ட குழு மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான் பானு, சுகாதார ஆய்வாளர் கணேசன், பணியாளர்கள் முத்துக்குமார், சிவகுமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசிமலை, பசுபதி, உதவியாளர்கள் சதீஷ், புவலிங்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கத்தை சேர்ந்தவர்களும் இங்கு உள்ள கடைகளில் மூன்றாவது நாளாக சோதனை செய்தனர். இதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்களிடம் துணிப்பையை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட் மானேஜிங் கமிட்டி முதன்மை நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
காய்கறி, பழம், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அனைத்து கடைகளிலும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றை சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றனர். சுமார் ஒரு டன் அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த அதிரடி சோதனையால் கோயம்பேடு மார்க்கெட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. #plasticmaterials #Koyambedumarket
அரிமளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை பள்ளி தலைமையாசியர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஏம்பல் சாலை, மார்க்கெட் சாலை, சிவன் கோவில், போலீஸ் நிலையம் வழியாக ஜெயவிளங்கி அம்மன் கோவில் திடலை வந்தடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பிளாஸ்டிக் தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர் முத்து உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்ட னர்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகளில் நேற்று காலை உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
இதேபோல் மற்றொரு கடையிலும் ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசனை கூறினார்கள். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிகடைகளில் பிளாஸ்டிக்பைகளின் பயன்பாட்டை வியாபாரிகள் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சங்கர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
நேற்று நகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் பேரில் துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் நகராட்சி பகுதியில் கடைவீதியில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டபோது 25 கடைக்காரர்களிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து ரூ.8 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மேலும் ஜெயங்கொண்டத்தில் சுற்றுச்சூழல் மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை வணிக நிறுவனங்கள் பயன்படுத்த கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால், வணிகர்கள், சில்லரை வியாபாரிகள், தங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் மளிகை, பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்ததடை விதிக்கப்பட்டது.
எனவே தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகரில் 50 மைக்ரானுக்கு குறைவாக, ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்று கடைகாரர்களிடம் அறிவுறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டது. மேலும் கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யும் போது வேடிக்கை பார்த்த பொது மக்களிடமும் பிளாஸ்டிக் உபயோகத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் அவ்வாறு கடைகாரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான பாலித்தீன் பைகள், பாலித்தீன் விரிப்புகள், பிளாஸ்டிக்கப்புகள் உள்ளிட்டவற்றை ஓரிடத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்